Thursday 7 March 2013

கடவுளை நம்புபவன் "பகுத்தறிவுவாதி"!!!




மேற்கண்ட படங்களில் கோயில் குருக்களிடம் பரிவட்டம் கட்டிகொள்பவரும் ,குல்லா அணிந்து ரமலான் நோன்பு கஞ்சி குடிப்பவருமான முத்தமிழ் வித்தகர் தஞ்சாவூர் ஜில்லாவில் ஆச்சாரமான இசை வேளாளர் (தஞ்சாவூர் தேவதாசி)குடும்பத்தில் பிறந்தவர்.

இவரது தந்தையார் பண்டித முத்துவேல் பிள்ளை அந்நாளில் பிரசித்தி பெற்ற சமஸ்க்ருத அறிஞராக விளங்கியவர்.வீடு,நிலம்,தோப்பு,துரவு என்று  செல்வ செழிப்புமிக்க குடும்பம் அது.இவர்களது மூதாதையர் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களால் போஷிக்கப்பட்டவர்கள்.அவர்களது தர்பார்களில் இசை,மற்றும் பரத நாட்டிய கச்சேரி நடத்தி அதன் மூலமாக பெருமளவு வருமானமும்,மானியங்களும் பெற்றவர்கள் இந்த தேவதாசி சமூகத்தினர்.

கர்னாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி,கேரள முன்னாள் முதல்வர் k .கருணாகரன் மாறார் போன்ற முக்கிய புள்ளிகள் தேவதாசி சமூகத்தவரே.

இப்படியாகப்பட்ட சமூக,குடும்ப பின்னணியில் பிறந்த நமது முத்தமிழ் வித்தகர் தன்னை நாத்திகன் என்றும்,பகுத்தறிவுவாதி என்றும் பிரகடனம் செய்தவர்.
அதுமட்டுமல்ல.தில்லை நடராஜரையும்,திருவரங்கம் ரங்கராஜரையும் பீரங்கி வைத்து தகர்க்கும் நாளே தமிழ்நாட்டின் பொன்னாள் என்று வீராவேசமாக முழக்கமிட்டவர்.
கடவுளை நம்புபவனை காட்டுமிராண்டி என "நற்சான்றிதழ்"வழங்கிய ஈரோடு.வெங்காய.ராமசாமி நாயுடுவின் பிரதான சீடர் எனவும் தன்னை கூறிக்கொள்பவர்.

அப்படியாகப்பட்ட இந்த முத்தமிழ் வித்தகர் ஊருக்கு நாத்திகமும்,பகுத்தறிவும் உபதேசிப்பவர்.அதை தான்மட்டும் கடைபிடிக்காதவர்.இவரது குருமகா சந்நிதானமான ஈரோடு.வெங்காய.ராமசாமி நாயுடு போலவே ,சொல் ஒன்று செயல் ஒன்று என செயல்படுபவர்.

ஒரு பக்கம் தன்னை நாத்திகவாதி என சொல்லிக்கொண்டே ,தனது வாழ்நாள் முழுதும் முஸ்லிம்களை போல் குல்லா அணிந்து நோன்பு கஞ்சி குடித்தவர் ஈ.வெ.ரா.நாயுடு.(ஆனால்,அதற்காக முஸ்லிம்களை குறை சொல்ல கூடாது.இந்த "போலி நாத்திகரை" அவர்கள் நன்றாகவே அம்பலப்படுத்தி விட்டார்கள்)அவரது சிஷ்ய பிள்ளையான நமது முத்தமிழ் வித்தகரும் குருவை மிஞ்சிய சிஷ்யராக பீடுநடை போடுகிறார்.

இப்படிப்பட்ட போலிகளைத்தான் தலைவர்கள் என்று புறநானூற்று புண்ணாக்கு தமிழன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறான்.தமிழ் நாட்டிலுள்ள சந்து பொந்துகளுக்கு  கூட ஈரோடு.வெங்காய.ராமசாமி நாயுடுவின் போலி பெயரான "பெரியார்"என்ற பெயரை சூட்டி அகமகிழ்கிறான்.தமிழை "காட்டுமிராண்டி பாஷை"என குறிப்பிட்ட கன்னட ஆசாமியை "வெண்தாடி வேந்தர்"என்றழைத்து புளகாங்கிதம் அடைகிறான்.

இந்து மத தெய்வங்களை தூற்றுவது,இந்துக்களின் சின்ன சின்ன மத நம்பிக்கைகளை கூட "மூட நம்பிக்கை "என சாடுவது,இதெல்லாம் ஒருபுறம்.
மற்றொரு புறம் கிருஸ்தவ,இஸ்லாமிய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது,அவர்களது "தீர்க்க தரிசிகள் "செய்ததாக நம்பப்படும் அற்புதங்களை ஏற்பது .இதுதானே காலம் காலமாக இந்த போலிகள் கடைபிடித்துவரும் பகுத்தறிவு(!) ,நாத்திக(!!)கொள்கைகள்.

இந்த கோயபல்ஸ் பேர்வழிகளை தானே தமிழன் தனது தலையில் சுமந்துகொண்டு கடந்த இரண்டு,மூன்று தலைமுறையாக திரி திரி என திரிகிறான்.
இப்படி சூடு,சொரணை எதுவுமில்லாமல் உலாவரும் புறநானூற்று புண்ணாக்கு தமிழனை காப்பாற்ற ஐ.நா.சபையென்ன ......அந்த ஆண்டவனே வந்தாலும் முடியாது.

8 comments:

  1. நண்பரே! பெரியாரைப்பற்றி பேசுவதற்குமுன் அவரைப்பற்றிய புத்தகங்களை படிப்பது நல்லது. அவரைப்பற்றியும் மற்றும் அவருக்கு எதிராக எழுதிய புத்தகங்களையும்.

    ஒருவர் நாத்திகராகவோ,பகுத்தறிவுவாதியாகவோ இருந்துகொண்டு மற்றவர்களின் நம்பிக்கையை மதிப்பது சாத்தியம் என்று ஏன் உங்களுக்கு புரியவில்லை. என் வீட்டில் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் வீட்டில் இருப்பவர்கள் சாமி கும்பிட்டாலோ, எனக்கு விபுதி வைத்துவிட்டலோ அதனை மறுப்பதில்லை. அதற்காக என்னை மொட்டை போடச்சொன்னால் அதை செய்வதில்லை. ஒரு வீட்டில் இருக்கும்போதே நீங்கள் இவ்வளவு செய்ய தேவைப்படும்போது ஒரு தலைவனுக்கு சில கட்டாயங்கள் இருக்கின்றன. இந்த அளவுக்கு கூட புரிந்து கொள்ளாமல் இருக்கும் தமிழனை காப்பாற்ற யாராலும் முடியாதுதான்.

    ReplyDelete
    Replies
    1. டியர் JUNK !!!

      இங்கு பதிவிட்டதற்கு நன்றி!!!

      உங்கள் வீட்டில் உங்கள் தாயாரோ,சகோதரியோ உங்கள் நெற்றியில் விபூதி,குங்குமம் பூசுவதிலோ ,அதை நீங்கள் ஏற்பதிலோ ,உங்களுக்கோ ,அவர்களுக்கோ எந்த ஒரு "உள்நோக்கமும் "இருப்பதில்லை.

      ஆனால் ,முத்தமிழ் காவலரோ அவரது குரு மகா சந்நிதானமோ எந்த ஒரு செயல்பாட்டிலும் நாத்திகம் என்ற உள்நோக்கமுடையவர்கள்.இந்துக்களின் நம்பிக்கையை மட்டும் ஏற்கக்கூடாது என்பதே இவர்களது "நாத்திகம்".

      திரு.ஈ.வெ.ரா.நாயுடுவோ,முத்தமிழ் காவலரோ முஸ்லீம்களோடு அமர்ந்து சிக்கன் பிரியாணியோ,மட்டன் சுக்காவோ சாப்பிடுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இராது.
      ஆனால்,இப்தார் விருந்து என்பது ஒரு மதம் சார்ந்த சடங்கு நிகழ்ச்சி.அந்நிகழ்ச்சியில் இவர்களை போன்ற "நாத்திகர்கள்"கலந்து கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தம் இவர்களுக்கு எப்படி வந்தது?

      ///ஒருவர் நாத்திகராகவோ,பகுத்தறிவுவாதியாகவோ இருந்துகொண்டு மற்றவர்களின் நம்பிக்கையை மதிப்பது சாத்தியம் என்று ஏன் உங்களுக்கு புரியவில்லை.///
      அது உண்மையானால் இவர்கள் பெருமாள் கோயிலில் நடக்கும் மார்கழி பஜனையில் ஏன் கலந்து கொள்வதில்லை.?கிருஸ்துமஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவிப்பவர்கள் ஏன் கிருஸ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை ?

      காரணம் ,இவர்கள் பேசும் நாத்திகமும்,பகுத்தறிவும் "போலி"யானது !!!நயவஞ்சகம் நிறைந்தது!!!

      Delete
    2. என் மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பரே..........

      இந்த போலிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ளும் வரை தமிழன் உருப்படப்போவதில்லை.........


      திரு.junk அவர்களே.....

      உங்கள் நம்பிக்கை உங்களுக்கு......எங்கள் நம்பிக்கை எங்களுக்கு......அதுதான் நாகரீகம்....அதை விடுத்து கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்பதும், பிள்ளையார் சிலையை உடைப்பதும் நாகரீக மனிதன் செய்யும் செயலா?

      Delete
  2. டியர் friend , முதலில் வாழ்த்துக்கள் , உங்கள் வலைத்தளத்திற்கு ! தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னது தெலுங்கு நாயக்கரான பெரியார் ! அவர் கன்னடர் அல்ல ! அப்புறம் தமிழை வாழ்த்துவதற்கும் ,திட்டுவதற்க்கும் ,அவர் தமிழராக இருக்க வேண்டுமா என்ன ? நகைச்சுவையில் கலக்கும் உங்களிடம் நிறைய humour நிறைந்த , கேலியும் ,கிண்டலும் ,மிகுந்த எழுத்துக்களை நம்ம விகடன் timepass மாதிரி ,எதிர்பார்க்கிறேன் , ரொம்ப sensitive விஷயங்களை அல்ல ! ஒரு நண்பராக என் எதிர்பார்ப்புகள் அதுதான் !

    ReplyDelete
    Replies
    1. டியர் டாக்டர் சுந்தர்!!!

      இங்கே பதிவிட்டதற்கு நன்றி!!!

      திரு.ஈ.வெ.ரா.அவர்கள் தன் வாழ்நாளில் பலமுறை தன்னை "கன்னடக்காரர்" என்று குறிப்பிட்டு பேசியுள்ளதை தாங்கள் அறியாதது வியப்புக்குரியது.(அவர் கன்னடம் பேசும் பலிஜா (balija)சமூகத்தை சேர்ந்தவர்.இவ்வகுப்பினர் தெலுங்கும் பேசுவர்)

      விகடன் டைம் பாஸ் மாதிரியா....? அது ஒரு soft porno பத்திரிக்கையாயிற்றே....!!! அடியேனின் வலைப்பூவில் "பலான"மேட்டர் வேண்டும் என்கிறீர்களா....?:-):-)

      Delete
    2. போலிப் பகுத்தறிவின் மீதான உங்கள் பார்வை சரியே. மற்றவர்கள் கூறுவதற்காக உங்கள் கருத்துகளை வெளியிடாமல் விடாதீர்கள்.

      Delete