Wednesday 4 September 2013

இ வ ரா பெரியார்...???


"அந்த காலத்தில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி என்று ஒரு தோழர் இருந்தார்.தீவிர பகுத்தறிவாளர்.நாத்திகர்.திராவிடர் கழகத்தில் ஈ.வே.ரா.பெரியாரின் வலது கரம் போல் செயல்பட்டவர்.சிறந்த மேடைப்பேச்சாளர்.தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஈ.வே.ரா.பெரியார் அறிமுகமாகாத காலத்தில்,அவரை அழைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றி சுயமரியாதை பிரச்சாரம் செய்தவர்.அவருடைய சிறந்த பேச்சாற்றலால்தான் ஈ.வே.ரா.பெரியார் பாமர மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இறுதி மூச்சு வரை ஈ.வே.ரா.வின் விசுவாசியாக வாழ்ந்தவர்.எளிமையானவர்.

அப்படிப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி இந்திய விடுதலைக்கு   மறுஆண்டு,அதாவது 1948-ஆம் ஆண்டு டி.பி.எனப்படும் காச நோய் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூரிலுள்ள ராஜா மிராஸ்தார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.கையில் காலணா இல்லாத நிலையில் அவரது சிகிச்சைக்கான செலவுகளை அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் ஏற்றுகொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஈ.வே.ரா.பெரியார் அவர்கள் பகுத்தறிவு பிரச்சாரம் செய்வதற்காக தஞ்சாவூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.தஞ்சாவூரில் தங்கியிருந்த அவரிடம் திராவிடர் கழக தோழர்கள் சென்று பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் உடல்நிலையை பற்றி எடுத்துசொல்லி ,உயிருக்கு போராடும் அவருக்கு நிதியுதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.அதற்கு அந்த பெரிய மனிதர் சொன்ன பதில் என்ன தெரியுமா...?
"அவன் கண்டத குடிச்சுட்டு ஒடம்ப கெடுத்துக்கிட்டான்.இப்ப பணம் வசூல் பண்றதுக்கு ஆஸ்பத்திரில படுத்துகிட்டு டிராமா பண்றான்.அவனுக்கு ஒத்த ரூபா கொடுக்கமுடியாது.வெங்காயம்."  என்றாராம்.

தமிழ் கூறும் நல்லுலகில் யாரும் யாரை பற்றியும் எப்படி வேண்டுமானாலும் தாறுமாறாக விமர்சிக்கலாம்.கடவுளையே கூட கண்டபடி ஏசி திட்டலாம்.ஆனால்,திராவிட மடத்தின் தலைமை பீடாதிபதியான ஈ.வே.ரா.பற்றி யாரும் எந்தவொரு விமர்சனமும் செய்யமுடியாது என்ற நிலைதான் அன்றிலிருந்து இன்றுவரை நீடிக்கிறது.அவருக்கு எதிரான விமர்சனத்தை யார் முன்வைத்தாலும் ஈ.வே.ரா.-வின் தொண்டரடிப்பொடிகள் அதற்கு செய்யும் எதிர்வினை "பார்ப்பன பீடையே" போன்ற வசைமொழிகள்தான்.அச்சு ஊடகங்களில் ஈ.வே.ரா.பற்றி யாரும் எதிர் கருத்து கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது.ஆனால்,இணைய ஊடகங்களில் இந்த நிலை இல்லை.எனவே,ஈ.வே.ரா.வின் துதிபாடிகள் இணையத்தில் அவரை பற்றிய விமர்சனங்களை மிக கேவலமான ஆபாச வசைகளை பிரயோகித்து எதிர்க்கிறார்கள்.இறுதியாக,"பெரியார் பற்றி உனக்கு என்ன தெரியும்?அவரை பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமானால் அவர் எழுதி குவித்த நூல்களை வாங்கி படித்துப்பார்.அப்போது தெரியும் அவர் எப்பேர்பட்ட தலைவர் என்று."

ஈ.வே.ரா.பற்றி தெரிந்துகொள்ள அவர் எழுதிய புத்தகங்களை வாங்கி படிக்க உபதேசிக்கும் அவரது அபிமானிகள் ,ஹிந்து மதத்தை பற்றி தெரிந்துகொள்ள வேதங்களையும்,உபநிசத்துகளையும்,புராண-இதிகாசங்களையும் வாங்கி படித்தார்களா....என்றால் அதுதான் இல்லை.தன்னை ஹிந்து மத எதிர்ப்பாளன் என்று கூறிக்கொண்ட ஈ.வே.ரா.வின் நூல்களைத்தானே படித்து பகுத்தறிவு என்ற பெயரில் உளறி கொட்டுகிறார்கள்.

தனது நெருங்கிய விசுவாசியின் உடல்நிலையைகூட கேவலப்படுத்திய ஈ.வே.ராவை தமிழர் தலைவர் எனக்கொண்டாடும் சுயமரியாதயில்லாத சொரணையற்ற கூட்டம் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி ஒன்று உண்டு.

ஈ.வே.ரா.தனது வாழ்நாளில் பெரும்பகுதி எந்த மனிதரை எதிரியாக சித்தரித்து தமிழர்களின் மனதில் ஜாதி துவேசத்தை வளர்த்தாரோ,எந்த மனிதரை குறிவைத்து தனது அரசியல் பிரசாரங்களை நடத்தினாரோ,அந்த மனிதர் "ராஜாஜி"இறந்தபோது ,இறுதி அஞ்சலி செலுத்த சுடுகாட்டிற்கே சென்று குலுங்கி குலுங்கி அழுதவர்தான் ஈ.வே.ரா.
1948-ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை அழகிரிசாமி இறந்தபோது இறுதி அஞ்சலி செலுத்த எட்டிக்கூட பார்க்காத இந்த ஈ.வே.ரா.என்ற துரோகியை தான் "தமிழினத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்தவர்"என்று புகழ்ந்து தள்ளுகிறது ஒரு  வெட்கங்கெட்ட அடிமைக்கூட்டம்.

பகுத்தறிவு என்ற பெயரிலும் ,சுயமரியாதை என்ற பெயரிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பணம் வசூல் வேட்டை நடத்தி சொத்து சேர்த்தவர் ஈ.வே.ரா.
திராவிடர் கழகத்தினரால் நிர்வகிக்கப்படும் "பெரியார் மணியம்மை டிரஸ்ட்டி"பல ஆயிரம் கோடி சொத்துக்களை கொண்டது.இவ்வளவு பணமும் ஈ.வே.ராவின் குடும்ப சொத்தல்ல.அவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டவை.தமிழ்நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த பெரும் நிலச்சுவான்தார்களும்,தொழிலதிபர்களும்,கருப்பு பண முதலைகளும்,வியாபார பெரும்புள்ளிகளுமே இந்த நன்கொடையாளர்கள்.
இந்த புண்ணியவான்களில் ஒருவர்தான் தஞ்சை மாவட்டம் கீழ்வென்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயக்கூலிகளை உயிரோடு எரித்து கொன்ற மிராஸ்தார் கோபாலகிருஷ்ண நாயுடு.சுய ஜாதி வெறியரான ஈ.வே.ரா.இக்கொடூர செயலுக்கான பழியை மனுதர்மத்தின் மீது சுமத்தினார்.

"தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார்"என்று கூப்பாடு போடுவோரில் தாழ்த்தப்பட்ட இனத்தவரும் கணிசமாக உண்டு.
ஈ.வே.ரா. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த சேவை என்ன...?
"பற பசங்கல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டானுங்க.அதனாலதான் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயுடுச்சி"என்றும்,
"பற பொம்பளைங்க ரவிக்கை போட ஆரம்பிச்சுட்டாளுங்க.அதனாலதான் துணி விலையெல்லாம் ஏறிடுச்சி"என்றும் ,
கேவலமாக பேசியதைத்தான் ஈ.வே.ராவின் "சேவை"என்கிறார்களோ...?
அடியேனுக்கு தெரியாது.ஆனால்,தெரிந்த விஷயம் ஒன்று உண்டு.அது...ஈ.வே.ராவின் சொத்துக்களுள் பெரும்பாலானவை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டாரத்தை சேர்ந்த ஒரு "குறிப்பிட்ட" சமுதாயத்தினரின் நன்கொடையாகும்.

இன்றைய ஈ.வே.ரா.அபிமானிகளுள் அநேகர் 60-களிலும்,70-களிலும் பிறந்தவர்கள்.நான் 1973ஆம் ஆண்டில் பிறந்தவன்."தந்தை பெரியாரை பற்றி உனக்கு என்ன தெரியும்"என்று சீரும் பகுத்தறிவாளர்களுக்கு அடியேனது பதில் ..."எனக்கு தெரியாது"என்பதுதான்.
ஆனால்,ஈ.வே.ராவின் சிஷ்யர்களாகவும்,விசுவாசிகளாகவும் இருந்து வாழ்க்கையே வெறுத்து பிற்காலத்தில் அவரை விட்டுவிலகி தேசியத்தின்பாலும்,ஆன்மிகத்தின்பாலும் ஈர்க்கப்பட்டவர்கள் பலர்.அவர்களுக்கு ஈ.வே.ராவின் அந்தரங்க வாழ்க்கைக்கூட அத்துப்படி.அவர்களுள் ஒருவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

கண்ணதாசனுக்கு ஈ.வே.ராவை பற்றி தெரிந்ததைவிட அதிகமாக இந்த அடிமை விசுவாசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த கட்டுரையின் ஆரம்பத்திலுள்ள பட்டுக்கோட்டை அழகிரிசாமி பற்றிய சம்பவத்தை எழுதியவர் சாட்சாத் கவியரசர் கண்ணதாசன்தான்!!!

"பணவசூலே பகுத்தறிவு.சுயநலமே சுயமரியாதை"என்று ஈ.வே.ரா.கூத்தடித்த காலக்கட்டத்தில் அவரது தொண்டராக,சிஷ்யராக விளங்கியவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் பொய்யான தகவலை கூறி பிழைப்பு நடத்துபவர் அல்ல.ஈ.வே.ராவுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்த "காரைக்குடி வட்டார"சமூகத்தை சார்ந்தவர் அவர்.பச்சை தமிழர்.பணத்திற்காக எவரிடமும் விலை போகாதவர்.யாருக்கும் தலைவணங்காத சுத்த சுயம்பிரகாச சுயமரியாதைக்காரர்.ஈ.வே.ராவின் அடிமை விசுவாசிகளை போல சுயத்தை இழந்தவறல்ல.

சரி...கண்ணதாசனை விடுங்கள்.அவர் ஒரு குடிகாரர்.ஸ்த்ரீ லோலர்.என்று கூறி அவரை நிராகரித்துவிட சில காரணங்கள் ஈ.வே.ரா.விசுவாசிகளுக்கு உண்டு.
ஆனால் ,எழுத்தாளர் தமிழ்வாணன் பற்றி அப்படி எந்த குறையும் கூறிவிட முடியாது.
ஈ.வே.ராவின் யோக்கியதையை எவ்வளவு நக்கலாகவும்,துணிச்சலாகவும் 50-ஆண்டுகளுக்கு முன்பு கல்கண்டு கேள்வி-பதில் பகுதியில் அவர் எழுதியுள்ளதை படியுங்கள்.

கேள்வி : சீன யுத்த நிதிக்காக பெரியார் இன்னும் காலணா கூடத் தரவில்லையே?

பதில் : உங்களுக்கு இது ஆச்சரியம்! யுத்த நிதியிலிருந்து தனக்கு எதுவும் கேட்காமலிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்!

கேள்வி :ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதும் போது முகவரிப் பகுதியில் திராவிட நாடு என்று எழுதலாமா?

பதில் : திராவிட நாடு என்று என்ன… சுவர்க்கம் என்று கூட எழுதலாம். போய் சேருமா என்பது தான் சந்தேகம்! திராவிட நாடு என்று முகவரி இடப்பட்ட கடிதங்கள் ஆயிரக்கணக்கில், “டெட் லெட்டர்’ ஆபீசில் கிடக்கின்றன என்று கேள்வி!

கேள்வி :எங்கள் அண்ணாவிடம் போய் காமராஜர் கற்றுக் கொண்டு வரட்டும்…’ என்கிறாரே என்.வி.நடராசன்?

எதை? பொடி போடுவதையா?

கேள்வி : பெரியார் எப்படி இருக்கிறார்?

பதில் : நாம் வைத்து வளர்ந்தவர்களெல்லாம் நம்மை விட்டுப் போய் கொண்டிருக்கிறார்களே என்று மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். நாம் வளர்த்ததில் நம் தாடி ஒன்றே இன்னும் நம்மையே நம்பி, நம்மை விட்டுப் போகாமல் நம்மோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறது என்று தன் தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

கேள்வி : பெரியாருக்கு மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா?

பதில் : ஏற்றுக் கொள்ள மாட்டார். மந்திரி வேலையில் மாதாமாதம் தான் பணம் கிடைக்கும். சமுதாய சீர்திருத்தப் பணியில் ஊருக்கு ஊர், டூருக்கு டூர் பணம் கிடைக்குமே!

கல்கண்டு கேள்வி பதிலில் தமிழ்வாணன்!!!


இவர்தான் ஈ.வே.ரா.!!!  இ வ ரா பெரியார்...?