Thursday 28 February 2013
இந்தியர்களே உஷார் !!!
மனித உரிமைகள் என்ற போர்வையில் மேற்கத்திய வெள்ளை தோல் நாடுகள் ஆசியா கண்டத்தில் நுழைந்து குழப்பம் விளைவிக்க திட்டமிடுகின்றன.அதற்கு தொடக்கமாக இந்துமாக்கடலில் அமைந்துள்ள ஸ்ரீலங்காவை குறிவைக்கின்றன.
முன்பு வியட்நாமின் உள்நாட்டு பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டதை எதிர்த்த "புண்ணியாத்மாக்கள்"இன்று ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பிரச்னையில் தலையிடுமாறு அதே அமெரிக்காவை கெஞ்சி கூத்தாடுகின்றன.மனித உரிமைகள்,வன்கொடுமைகள் என்ற போர்வையில் மற்றுமொரு காலனிய சாம்ராஜ்யத்தை உருவாக்க திட்டமிடும் கும்பல்கள் ஜெனிவா நகரில் கூடி மூன்றாம் உலக நாடுகளை மிரட்ட தொடங்கியுள்ளன.
இன்று ஸ்ரீலங்காவின் உள்விவகாரத்தில் தலையிடும் வெள்ளைத்தோல் துரைசானிகள் நாளை இந்தியாவின் உள்விவ்காரத்திலும் தலையிட தயங்க மாட்டார்கள்.
"காஸ்மீரை தனி நாடாக்கு,காட்டுமன்னார் கோயிலை தனி ஜில்லாவாக்கு"என்று நமக்கும் உத்தரவிடுவார்கள்.
ஏற்கனவே நமது பாரத மணித்திருநாட்டில் எதற்கு பஞ்சமோ இல்லையோ  பிரிவினைவாதிகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை.
தமிழ்நாட்டை எடுத்துகொண்டால் கழகத்வா,திராவிடத்வா,ஈரோடு வெங்காயத்வா ப்ராண்ட் கட்சிகளும்,சிறுத்தை,கழுதை,கோட்டான் என்ற பெயர்களில் உலாவரும் லெட்டர்பேட் அமைப்புகளும் பிரிவினை கோஷமிட்டு பதற்றத்தை உருவாக்கியுள்ளன.தங்களை இந்தியர் என்று சொல்லிக்கொள்ள கூட இந்த கும்பல்கள் விரும்புவதில்லை.நாட்டின் மற்ற பகுதிகளிலோ சீனாவின் கள்ளக்குழந்தையான நக்ஸல் பயங்கரவாதமும்,பாகிஸ்தானால் தூண்டப்படும் மத அடிப்படைவாதமும் மத்திய அரசால் ஒடுக்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளன.
இந்த லட்சணத்தில் சூளை செங்கல்லும் பிடாரிதான் என்பதுபோல மனித உரிமையாளர்களும்,போலி மதச் சார்பின்மையாளர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நாட்டை துண்டாட அணிதிரண்டு வருகிறார்கள் .
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் தீர்மானத்தை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்துவது ஒன்றே நமது நாட்டின் எதிர்காலத்துக்கு உகந்த முடிவாக இருக்கும்.இல்லையேல் எதிர்வரும் காலங்களில் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒரு பெரும் அபாயம் முளைவிட தொடங்கியிருக்கிறது.அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.தவறினால்,அந்த அபாயம் நம் அனைவரையும் கிள்ளி எறிந்துவிடும்.
  
                                  இந்தியர்களே உஷார் !!!                                      

  

Tuesday 26 February 2013

பெயர்    ;ஜோ குபெர்ட்   (joe kubert )
பிறப்பு   :போலந்து .1926.

மரணம்   :நியூ ஜெர்ஸி .யு.எஸ்.  (2012)

இனம்   : ஜூவ்.

தொழில்    :  காமிக்ஸ் ஓவியர் .

தமிழில் அறிமுகம்   :  சாத்தான் வேட்டை. 
இவருடைய இரண்டு மகன்களும் புகழ்வாய்ந்த காமிக்ஸ் ஓவியர்களாக இருக்கிறார்கள்.அவர்களுடைய பெயர் andy kubert   மற்றும் adam kubert .

Monday 25 February 2013
சாத்தானுக்கு வந்த சந்தேகம் !இது பொய்யென்றால் ..............

இது மட்டும் மெய்யா........???

Sunday 24 February 2013

அடியேனுக்கு பிடித்த அற்புதமான கதை சாத்தான் வேட்டை.வரும் ஞாயிறு இக்கதையை பற்றி எழுதுகிறேன் .வித்தியாசமான சித்திரங்களுடன் வந்த இந்த கதையை நண்பர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

மானிடர்களே உஷார் .......?

நல்ல பிசாசு உங்களை பிடிக்க வருகிறேன் உஷார் ...( யாரும் தப்பிக்க முடியாது ஹி ....ஹி ....)