மை டியர் மானிடர்களே !!!
ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்ததால் இங்கே பதிவிட நேரம் கிடைக்கவில்லை("வெட்டியாத்தானே ஒக்காந்துருந்தே"). இடைப்பட்ட காலத்தில் அடியேனின் உடல்நலம் குறித்து கவலையுடன் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இப்போது முழு உடல்நலம் திரும்பவில்லை எனினும் உற்சாகத்தோடு தேறிவருகிறேன்!
"காமிக்ஸ் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே ஒரு பதிவு போடுங்களேன்" என்று நேற்று காலை அமெரிக்க பிரதமர் ராஜபக்சே அடியேனிடம் தொலைப்பேசியில் கெஞ்சி கேட்டுக்கொண்டார். வேறுசில சர்வதேச பிரபலங்களும்(பவர் ஸ்டார் உள்ளிட்ட) வலியுறுத்தி கேட்டதால் இந்த புதிய பதிவு!
இது அடியேனின் 25ஆண்டு கால காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு புகைப்பட தொகுப்பு. என்னிடமும் சில காமிக்ஸ்கள் இருக்கின்றன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இவை. இந்த காமிக்ஸ்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் சூழ்ந்த ஒரு ரகசிய தீவில் உள்ள அறையின் பெட்டகத்தில், 24மணி நேரமும் A K ரக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் புடைசூழ மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்!
விரைவில் PART -2.