Sunday 8 June 2014

சென்ஸார் நகரம் சிவகாசி !!!

சமீபத்தில் வெளிவந்துள்ள முத்து காமிக்ஸ் லார்கோ விஞ்ச் த்ரில்லரான "வேட்டை நகரம் வெனிஸ்" வழக்கம்போல் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கதையில் லார்கோவின் ஆக்ஸன் குறைவு , ஆள்கடத்தல் மூலமாக காசு பறிக்கும் அரதபழசான கதைக்களம் , லார்கோவின் நண்பர் சைமன் இடம்பெறாதது ,மோசமான அச்சுத்தரம் என கதையில் சில மைனஸ் பாய்ண்டுகள் இருந்தும் கதாசிரியர் வான்-ஹாமேயின் அசாத்திய பரபரப்பு&விறுவிறுப்பு -டன் கூடிய இந்த த்ரில்லர் அனைவரையும் கவரவே செய்தது.

வேட்டை நகரம் வெனிஸ் & கொலையும் செய்வார் கோமான் கதைகளில் நம்ம ஊரு கலாசாரத்தை கருத்தில் கொண்டு ஏராளமான எடிட் மற்றும் மார்பிங் செய்யப்பட்டுள்ளது.லார்கோவின் தோழிகளின் முன்னழகும்,பின்னழகும் "நேர்த்தி" என்று கொஞ்சமும் இல்லாமல் அநியாயமாக (!)  மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடை அணிவிப்பு அட்டகாசங்களால்  ஈரோடு விஜய் போன்ற ஏராளமான வாலிப வயோதிக அன்பர்கள் கடும் மன உளைச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அவர்களின் துயர் துடைக்க அக்கதைகளின் "எடிட்" செய்யப்படாத காட்சிகளை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.இந்த படங்கள் மேற்படி கதைகளின் ஒரிஜினல் டிஜிட்டல் பைல்களிலிருந்து இணையத்தின் ஏதோ ஒரு டாட்.காமிலிருந்து சுடப்பட்டது.

                                                                     


ஏதோ அடியேனால் முடிந்த சமூகசேவை.ஹிஹி!!!