மனைவி ஜென்னியுடன் கார்ல் மார்க்ஸ்!
சமீபத்தில் நண்பர் ஈரோடு ஸ்டாலினை அவரது
அலுவலகத்தில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு தகவல் சுவாரஸ்யமாக இருந்தது.
தமிழ்நாட்டை கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆட்சி செய்தவர்கள்
களப்பிரர் எனப்படும் இனத்தவர்.இவர்கள் ஆண்ட காலத்தை "இருண்ட காலம்"என்று
சொல்வோரும் உண்டு.தென் தமிழகத்தில் பரவலாக காணப்படும் முத்தரையர் இனத்தவர் இந்த களப்பிரரின்
சந்ததியினர் என்றும் கூறப்படுகிறது.
முற்கால
சோழ சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கியது களப்பிரரின் படையெடுப்பே
எனவும் கூறப்படுகிறது.இவர்கள் ஆட்சியில் சைவம்,வைணவம் போன்ற வைதீக மதங்கள் பின்தள்ளப்பட்டு
சமண மதம் மிகுந்த செல்வாக்குடன் ஆட்சிபீடமேறியது.சமணர்கள் சைவர்களையும்,வைணவர்களையும்
கழுவேற்றி கொன்றதாகவும் பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அக்காலத்தில் சமணர்கள், உடலில் திருநீறையும்,நாமமும்
இட்டுக்கொள்ளும் வைதீகர்களை "பூசிய ஆண்டிகள்"என கூறி அவர்களை கண்ணால் பார்த்தாலும்
தீட்டு,அவர்களின் குரலை கேட்டாலும் தீட்டு என்ற பொருள்படும் "கண்டு முட்டு,கேட்டு
முட்டு"என்ற ஒருவகை "தீண்டாமை"கொள்கையை கடைபிடித்தனர்.உடலில் திருநீறு
பூசிய சிவனடியார்களையும்,நாமம் பூசிய வைணவ தாசர்களையும் வீதியில் கண்டால் சமணர்கள்
உடனே தங்கள் வீட்டின் வாசல்கதவை பூட்டி உள்ளே ஒளிந்து கொள்வார்களாம்.அவர்கள் போனபின்னே
கதவை திறந்து வெளிவருவார்களாம்.
சமணர்கள் தங்கள் வீட்டு பெண்களையும்,குழந்தைகளையும்
அச்சுறுத்த "பூசிய ஆண்டிகளை"காட்டவைத்துவிடுவேன்
என்று கூறுவார்களாம்.
பூச்சாண்டி காட்டுதல் என்ற பிரயோகம்
"பூசிய ஆண்டி"களை காட்டுவதான சமணர்
காலத்திய அச்சுறுத்தலின் பிற்கால திரிபாகும்.
அடுத்தமுறை பூச்சாண்டி காட்டாதே என்று
கூறுமுன் எதிராளி ஒரு சமணரா என்று உறுதி செய்து கொள்ளவும் !
அரவிந்தன் நீலகண்டன் எழுதிய "பஞ்சம்
படுகொலை பேரழிவு கம்யூனிஸம்"(நான்கும் ஒரே அர்த்தம்தான்!)புத்தகத்தை புரட்டியபோது
கார்ல் மார்க்ஸ் பற்றிய ஒரு தகவலும் பூச்சாண்டியை போலவே சுவாரசிய படுத்தியது.
கார்ல் மார்க்ஸ் (1818-1883)ஜெர்மனியில்
பிறந்த பொருளாதார மற்றும் பொருள்முதல்வாத அறிஞர்.பாட்டாளி வர்க்கத்தின் தலைமை தளபதி.புரட்சியின்
மூலம் முதலாளித்துவ பிற்போக்கு அரசுகளை வீழ்த்த "மூலதனம்"வழங்கிய பேராசான்.
அப்படிப்பட்ட மாமேதை தன் வீட்டு வேலைக்காரியோடு
கள்ள உறவு வைத்திருந்தார் என்ற தகவல் நிச்சயம் பூச்சாண்டி காட்டுவதைவிட அதிக அச்சுறுத்தலை
ஏற்படுத்துகிறது.
விஷயம் இதுதான்....கார்ல் மார்க்ஸ் தனது
மனைவி ஜென்னியுடன் லண்டனில் குடியேறியபோது வீட்டு வேலைகளை செய்ய ஜென்னியின் தாயார்
அனுப்பிவைத்த பணிப்பெண் ஹெலன் டெமுத்.1851-இல் ஹெலன் டெமுத் கண்ணியத்துக்குரிய
(!)கார்ல் மார்க்ஸ் மூலம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.அது தன் குழந்தையல்ல என்று
ஜென்னியை நம்பவைக்க எங்கெல்சின் உதவியை நாடினார் நம் ஹீரோ மார்க்ஸ்.பெண் பித்தரும்,ப்ளே
பாயுமான எங்கெல்ஸ் ,குழந்தை தனக்கு பிறந்ததாக கூறி "பழியை"தான் ஏற்று மார்க்ஸின்
மானத்தை காப்பாற்றியிருக்கிறார்.அந்த குழந்தை ஒரு அனாதை விடுதியில் விடப்பட்டது.(சமீபத்தில்
வெளிவந்த ஆதலினால் காதல் செய்வீர் படம் நினைவுக்கு வருகிறதா...?)வரலாற்றின் வழித்தடத்தில்
இருந்த சுவடே இல்லாமல் மறைந்துவிட்டது அந்த குழந்தை !
இந்த தகவலை படித்துக்கொண்டிருந்தபோது சுமார்
25ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சில மலையாள SOFT PORN படங்கள் நினைவுக்கு வந்தன.
பாவம் கொடூரன்,அவளோட ராவுகள், சாரவலயம்,அஞ்சரைக்குள்ள
வண்டி போன்ற பலான படங்களில் தவறாமல் இடம்பெறும் காட்சி ,ஹீரோ தனியே இருக்கும்போது வீட்டு
வேலைக்காரி அவன் முன்னே மாராப்பு விலக
"குனிந்தபடி"எதையாவது கூட்டியபடியோ,துடைத்தபடியோ காட்சி தருவாள்.நமது
அப்பாவி ஹீரோ அநியாயத்துக்கு சபல கேஸ்.ஹீரோயின் வருவதற்கு முன் தன் கற்பை வேலைக்காரிக்கு
தாரை வார்த்திருப்பார்.(அந்த சீனில் நிச்சயம் ஒரு பிட் உண்டு!).
இப்படியான காட்சிகளை கொண்ட பலான படங்களை
புற நானூற்று தமிழர்கள் ஜொள் விட்டபடி கண்டு
கழித்த காலம் உண்டு.(ஜொள் இரண்டு வகைப்படும்.அடியேன் குறிப்பிட்டது வாயிலிருந்து வரும்
ஜொள்ளை அல்ல :-)
பாட்டாளி வர்க்கத்தின் தானை தலைவர் ஒரு
பாலன் கே.நாயரோ,சோமனோ,அல்லது பீமன் ரகுவோ அல்ல.மேற்படி வில்லன் நடிகர்கள் சினிமாவில்
செய்ததை நிஜ வாழ்வில் அரங்கேற்றிய கார்ல் மார்க்ஸை ,ஜென்னியின் தெய்வீக காதலராக சித்தரித்து
மாய்ந்து மாய்ந்து மெச்சிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ கும்பல் தான் டபிள்யூ.ஆர்.வரதராஜனை
கட்சியைவிட்டு நீக்கி அவரை தற்கொலைக்கு தூண்டியது என்பதை மறக்க நினைக்கிறேன்.முடியவில்லை
!
கார்ல் மார்க்ஸ்,பலான படம் என்றதும் திடீரென்று
நினைவுக்கு வந்தது அமரர் சுஜாதா அவர்களின் மெக்ஸிகோ நாட்டு வண்ணாத்தி ஜோக்.அதை அவர்
கடைசிவரை சொல்லாமல் டபாய்த்து விட்டார்.எனினும் அவர் சொன்ன மற்றொரு ஜோக் நன்றாக
(!)இருந்ததாக ஞாபகம்.அந்த ஜோக் இதோ...!
ஆசாரசீலர்கள் இந்த ஜோக்கை தயவுசெய்து படிக்கவேண்டாம்.படித்து
முடித்தப்பின் சாக்கடை குத்தும் கம்பியால் என்னை அடிக்க வருவீர்கள் :-)
புதிதாக கல்யாணம் ஆன பெண், லேடி டாக்டரிடம்
சிகிச்சைக்கு வந்தாள்.அவளுக்கு இரு முழங்கால்களிலும் சிராய்த்தது போல் சிவப்பாய் புடைத்திருந்தது.
"இந்தமாதிரி கேஸ் நான் பார்த்ததே இல்லை.எப்படிம்மா
இப்படி ஆச்சு ?"
"அதுவந்து டாக்டர்......போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு."
"ஓ...புரியுது ! உன் புருஷன் வந்துருக்காரா?"
"ஆமா டாக்டர். ரூமுக்கு வெளியே காத்துருக்கார்."
"கூப்புடு அந்தாளை."
உள்ளே வந்த இளம் கணவனிடம் டாக்டர் "இதோ பாரப்பா.இப்படி
மட்டும் இல்லை. இன்னும் நெறைய பொசிஷன் இருக்கு. இந்த புஸ்தகத்த பாரு. இதெல்லாம் தெரியாதா
உனக்கு ?"
"தெரியும் டாக்டர் ! ஆனா..ரெண்டு பேரும் டி.வி.பார்க்கணும்னா
இந்த பொசிஷன விட்டா வேற முறை இருக்குதா சொல்லுங்க ?"
எப்பூடி....?
ஆங்....சொல்ல மறந்துவிட்டேன். அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!