Friday, 4 October 2013

நக்கல் BY நல்ல பிசாசு.EPISODE -2செய்தி : குற்றப்பின்னணி கொண்ட எம்.பி.க்களின் பதவிப்பறிப்பை தடுக்கும் அவசர மசோதா முட்டாள்தனமானது.-ராகுல் காந்தி ஆவேஷம்.

நல்ல பிசாசு :  வரலாறு காணாத ஊழல்கள் அம்பலமானபோது வராத ஆவேஷம் இப்ப வருதுன்னா,அது ஆவேஷம் இல்லை....வெறும் வேஷம் !!!ஆத்தாவுக்கும்,புள்ளைக்கும் தெரியாம டோப்பா தலையன் எதையும் செய்ய முடியாதுன்னு பச்ச புள்ளங்களுக்குகூட தெரியும். புள்ளாண்டானோட நடிப்பு உலக நடிப்புடா சாமீ.

செய்தி : ராகுல் காந்தி என்னை அவமதிக்கவில்லை.தனது கருத்தை தைரியமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.-பிரதமர் மன்மோகன் சிங்.

நல்ல பிசாசு :  ஆஹா ....என்ன ஒரு கருத்து சுதந்திரம் உங்க கட்சியில இருக்கு பாருங்க.இதையே உங்க கட்சில வேற எவனாவது பேசியிருந்தா அவனோட டவுசர கழட்டி அம்மணமா ஓடவுட்டு கும்மியிருப்பீங்க !!!ஜானகி பல்லவ் பட்நாயக் எப்படி டுனாருன்னு எல்லோருக்கும் தெரியுமே.

செய்தி : இயக்குனர் சீமான் திருமணம்.முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகளை மணந்தார்.

நல்ல பிசாசு : அவரோட மாமனார் பாணியிலேயே வாழ்த்திடலாம்.
"கருவாடு மீனாகாது.காகிதப்பூ மணக்காது.பூனை புலியாகாது"(ஹிஹி)

செய்தி :  E -மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர்.நரேந்திர மோடி பேச்சு.

நல்ல பிசாசு :  அட போங்க சார்.தமிழ் நாடு என்ன உங்க குஜராத் மாதிரியா.இங்க அவனவன் வேலையில்லாம "ஈ" ஓட்டிட்டு ஒக்காந்துட்டுருக்கான். நீங்க வேற எரிச்சல கெளப்பிட்டு.

செய்தி : அமெரிக்க அரசு அலுவலகங்களை மூடிவைக்க ஒபாமா உத்தரவு.

நல்ல பிசாசு : அமெரிக்கர்களை இனி எவனும் மூடிட்டு போங்கடா-ன்னு திட்ட முடியாது.

செய்தி : கழிவறையை சுத்தம் செய்த அனுபவம் மோடிக்கு உண்டா? திக்விஜய் சிங் கேள்வி.

நல்ல பிசாசு :  F ..K விஜய் சிங் கேட்டியே  ஒரு கேள்வி.மொதல்ல உனக்கு "கழுவற"பழக்கம் உண்டாடா ?நீயெல்லாம் கிட்ட வந்தாலே நாறும்.கழுவிட்டு வந்து கேள்வி கேளுடா கொப்பற தேங்கா மண்டையா.(F -க்கும்,K -வுக்கும் நடுவுல இருக்குற ரெண்டு எழுத்தையும் நீங்களே ரொப்பிகோங்க.நான் ரொம்ப நல்ல பையன்.ஹிஹி.)

செய்தி : THE HINDU -நாளிதழ் தமிழில் தி இந்து  என்ற பெயரில் வெளிவருகிறது.

நல்ல பிசாசு : தமிழ் பத்திரிக்கைகளோட "தி"-மோகம் நல்லாவே தெரியுது. தினத்தந்தி,தினமலர்,தினகரன்,தினமணி,தினபூமி வரிசையில தி ஹிந்து ஒட்டமாட்டேங்குதே. பேசாமே தின இந்து -ன்னு வச்சிருக்கலாமே.


செய்தி :  பேருந்து கூரை மீது அமர்ந்து பயணம் செய்த இருவர் பாலத்தில் தலை மோதி பலி.

நல்ல பிசாசு :  பேருந்து கூரை மேல ஏர்றதுக்கு முன்னே "மேல போறோம்"ன்னு மறக்காம சொல்லிட்டு போயிருப்பாங்களோ!!!

செய்தி : தெலுங்கானா தனி மாநிலத்தை கண்டித்து மத்திய அமைச்சர் பதவியை சிரஞ்சீவி ராஜினாமா செய்தார்.

நல்ல பிசாசு : மத்திய அமைச்சர் பதவியில நீங்க சிரஞ்சீவியா நீடிப்பீங்கன்னு பாத்தா இப்படி அற்ப ஆயுசுல வெளியேறிட்டீங்களே தல.

செய்தி : காந்தீய சிந்தனைகளையே நான் பின்பற்றுகிறேன்-ராகுல் காந்தி பேச்சு.

நல்ல பிசாசு : இந்திரா காந்தீய,சஞ்சய் காந்தீய,ராஜீவ் காந்தீய,சோனியா காந்தீய சிந்தனைகளை அவர் பின்பற்றுவது ஒன்றும் வியப்பல்லவே!!

செய்தி :  கால்நடை தீவன வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை.

நல்ல பிசாசு :  கேம்ப்ரிட்ஜ்ல பாடம் நடத்துன மேதாவி இனிமே ஜெயில் கைதிகளுக்கு பாடம் நடத்தி பண்ணுன பாவத்துக்கு பரிகாரம் தேடிக்கட்டும்-ன்னு சொல்லலாம்னு நெனச்சேன்.ஆனா,ஜெயில் கைதிங்க ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருப்பாங்க. இந்த கௌ பாய் மண்டையன் அவங்கள  என்ன பாடுபடுத்துவானோன்னு நெனச்சு பேசாம போறேன்.

செய்தி : ரஜினி,கமல் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டு மீண்டும் ரிலீஸ் ஆகிறது.


நல்ல பிசாசு :இந்த வாரத்தில் வெளியான மனதுக்கு இனிப்பான ஒரே செய்தி இதுதான்.

10 comments:

 1. இந்த தடவை நக்கல் கொஞ்சம் கம்மிதான்

  ReplyDelete
  Replies
  1. டியர் விஸ்வா !!!
   நாடு இப்ப இருக்குற நிலையிலே நக்கல் ஜாஸ்தியானா நமக்கு சிக்கல் சிபிஐ வடிவில் வந்துவிடக்கூடும்.ஹிஹி !!!

   Delete
  2. இது தான் சூப்பர்" பஞ்ச் ".

   ஆமா ..சார் ..இங்கே லைக் போட்டதுக்கு எல்லாம் புடிச்சுட்டு போக மாட்டாங்களே ....

   நான் புள்ளை குட்டி காரன் ...

   Delete
 2. "சாத்தான் "பேரு வச்ச தாலே "சாத்தான் வேட்டை "என்ற ஒரே ஒரு காமிக்ஸ் பற்றிய பதிவை இட்டு விட்டு "காமிக்ஸ் "இல் இருந்து விலகி சென்ற இந்த சாத்தானை கடுமையாக கண்டிக்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. டியர் பரணி !!!

   காமிக்ஸ் பதிவிட கிங் விஸ்வா,கார்த்திக் அங்கிள்,ரபீக் ராஜா போன்ற விஷயம் தெரிந்த அறிவுஜீவிகள் இருக்கும்போது ,அடியேனை போன்ற ஒன்றும் அறியாத டம்மி பீசுகள் அவற்றை படிப்பதோடு நிறுத்தி கொள்வது நலம்.
   மீறி பதிவிட்டால் அது "சைபர் க்ரைம்" ஆகிவிடும்.ஹிஹி !!!

   Delete
  2. //காமிக்ஸ் பதிவிட கிங் விஸ்வா//

   ஏன்? இல்லை ஏன்னு கேக்குறேன்?


   நான் என்ன உங்களை சிம்பு படத்துக்கு கூட்டிட்டு போய் டார்ச்சர் பன்னனா? இல்லை சாரு நிவேதிதா புத்தகம் குடுத்து படிக்க சொன்னேனா? இல்லை காங்கிரஸ் கட்சிக்கு வோட்டு போடா சொன்னேனா?

   இல்லையே.


   அப்படி இருக்க இந்த கொலைவெறி ஏன்?

   Delete
 3. நல்ல பதிவு புனித சாத்தான்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே !!!
   தங்கள் உண்மை பெயர் என்னவோ....?ஆனால் புனைப்பெயர் சூப்பர் ...!!!

   Delete
  2. நம்ம மயிலாடுதுறை அண்ணாச்சி தான் இந்த மாத லயன் காமிக்ஸ் இதழில் முழு நீள கடிதம் எழுதி இருக்காரே?

   அவரையே யாருன்னு கேக்குறீங்க?


   #சாத்தானின் அராஜகங்கள்

   Delete