Thursday 20 March 2014

நக்கல் BY நல்ல பிசாசு.EPISODE -5.


சினிமா -தல & தளபதி.


அரசியல்- தல & தலைவலி.


செய்தி: நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக டீக்கடைகளில் மோடி பிரச்சாரம்.

நல்ல பிசாசு:  நரேந்திர மோ"டீ தூள்" கெளப்புறாரா....?
  

செய்தி: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

நல்ல பிசாசு:  உலக நாயகன் "மார்க்ஸ்" கட்சியிலிருந்து உள்ளூர் பவர் ஸ்டார் ஈ.வே.ரா.கட்சிக்கா...?


செய்தி: காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் உதவ தயார்.-பிரதமர் மன்மோகன் சிங்.

நல்ல பிசாசு: மொதல்ல உங்க ஆபீசுல இருந்து காணாம போன நிலக்கரி ஊழல் கோப்புகள தேடி கண்டுபிடிங்க சர்தார் அண்ணே!



செய்தி:  மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தான் கொலை செய்தது-ராகுல் காந்தி பேச்சு.

நல்ல பிசாசு:  என்னாது...காந்தி செத்துட்டாரா...சொல்லவேல்ல...?


செய்தி: அஜித் சிங்கின் ராஸ்ட்ரிய லோக் தள் கட்சியில் அமர் சிங் இணைந்தார்.

நல்ல பிசாசு: முதலில் சீட்டை பிடி.பிறகு ஓட்டை பிடி.அதற்குமுன் "ஜாட்"டை பிடி!


செய்தி: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மின்சார ரயில் தடம் புரண்டது.

நல்ல பிசாசு: மின்சார ரயில் தானே தடம் புரண்டுருச்சா...?


செய்தி: நடுவானில் ஹோலி கொண்டாடி சிக்கலில் சிக்கிய விமானிகள்.விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்.

நல்ல பிசாசு: இப்ப ஜோலி சிக்கலாயிருச்சா...?


செய்தி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி சார்பாக போட்டி.

நல்ல பிசாசு: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் உதயகுமாரா!


செய்தி: மே 1–ந்தேதி முதல் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள்.

நல்ல பிசாசு: ஏப்ரல் 1-ந்தேதி பொருத்தமா இருக்குமே...?


செய்தி: கோச்சடையான் படத்துக்கு யு சான்றிதழ்.

நல்ல பிசாசு: கார்ட்டூன் சேனல்ல ரிலீஸ் பண்றதுக்கா...?


செய்தி: ஆம்னி பஸ்சில் 20 கிலோ வெள்ளிக் கொலுசுகள் சிக்கியது.

நல்ல பிசாசு: எந்த அம்மணிக்கு இத்தனை கொலுசு...?

Thursday 6 March 2014

நக்கல் BY நல்ல பிசாசு.EPISODE -4



செய்தி: அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து இடதுசாரி விலகல்.

நல்ல பிசாசு: சாரி விலகுனதுக்கு சென்சார் இல்லையா...?


செய்தி: வெள்ளை கொடிகளுடன் சரண் அடைந்த நடேசன், புலித்தேவனை சிங்கள ராணுவம் கொன்றதற்கு புதிய ஆதாரம்.

நல்ல பிசாசு: நம்ம ஊரில் இலங்கைக்கு எதிராக கருப்பு கொடி. அங்கே வெள்ளை கொடியா...? இதுவல்லவா "மாவீரம்".


செய்தி: இரட்டை இலை சின்னத்தை மறைக்கக் கோரி மனு : ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

நல்ல பிசாசு: அட ராமா. பதிலுக்கு காலையில் சூரியன் உதிக்கக்கூடாதுன்னு அ.தி.மு.க.வழக்கு போடுமா...?


செய்தி: ஐபிஎல் பெரும்பாலான போட்டி இந்தியாவில் நடைபெறும்: பிசிசிஐ.

நல்ல பிசாசு: சூதாட்டமெல்லாம் பாதுகாப்பா வெளிநாட்டுல நடக்குமா...?


செய்தி: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சர்வதேச வீரப்பெண்மணி விருது.

நல்ல பிசாசு: மாமியாரோட நடந்த சண்டையில கெலிச்சதுக்கா...?


செய்தி: என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி பாஜகவில் இணைந்தார்.

நல்ல பிசாசு: பாஜகாவில் இணைந்ததும் "ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே"ன்னு மறக்காம பாடுனாரா...?


செய்தி: விரைவில் உங்கள் கிராமத்திலேயே பாஸ்போர்ட் எடுக்கலாம்: அறிமுகப்படுத்தும் மத்திய அரசு.

நல்ல பிசாசு: அடப்பாவிகளா...களத்து மேட்டுக்கும்,பக்கத்து கிராமத்துக்கும் போறதுக்கு பாஸ்போர்ட்டாடா...?


செய்தி: தஞ்சையில் ஒரே டிராக்கில் எதிரெதிரே இரு ரயில்கள்: பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி.

நல்ல பிசாசு: பயணிகள் இதயம் "தடக் தடக்"குன்னு அடிச்சுகிச்சா...?


செய்தி: "ஆம் ஆத்மி'யில் ஜெ., தோழி.

நல்ல பிசாசு: "அம்மா" கட்சில இருந்து "சும்மா" கட்சிக்கா...?


செய்தி: துணை நடிகை கற்பழிப்பு: நாலு பேரை கைது செய்ய போலீஸ் தீவிரம்.

நல்ல பிசாசு: நாலா திசையிலயும் வல வீசி தேடுறாங்களா...?


செய்தி: பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 27 தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் போட்டியிடவுள்ளது.

நல்ல பிசாசு: அட! லாலு குடும்பத்துல மொத்தம் 27 பேர் இருக்காங்களா...!!!


செய்தி: அமெரிக்காவில் தொடர்ந்து காணாமல் போகும் இந்திய வம்சாவளி மாணவர்கள்.

நல்ல பிசாசு: அய்யோடா ! இது சிவப்பு இந்திய சதின்னு  சொன்னா "பூனையாரும்,கத்தியாரும்" என்னோட மண்டை தொலியை உரித்துவிடுவார்களே...:-)