Thursday, 6 March 2014

நக்கல் BY நல்ல பிசாசு.EPISODE -4



செய்தி: அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து இடதுசாரி விலகல்.

நல்ல பிசாசு: சாரி விலகுனதுக்கு சென்சார் இல்லையா...?


செய்தி: வெள்ளை கொடிகளுடன் சரண் அடைந்த நடேசன், புலித்தேவனை சிங்கள ராணுவம் கொன்றதற்கு புதிய ஆதாரம்.

நல்ல பிசாசு: நம்ம ஊரில் இலங்கைக்கு எதிராக கருப்பு கொடி. அங்கே வெள்ளை கொடியா...? இதுவல்லவா "மாவீரம்".


செய்தி: இரட்டை இலை சின்னத்தை மறைக்கக் கோரி மனு : ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

நல்ல பிசாசு: அட ராமா. பதிலுக்கு காலையில் சூரியன் உதிக்கக்கூடாதுன்னு அ.தி.மு.க.வழக்கு போடுமா...?


செய்தி: ஐபிஎல் பெரும்பாலான போட்டி இந்தியாவில் நடைபெறும்: பிசிசிஐ.

நல்ல பிசாசு: சூதாட்டமெல்லாம் பாதுகாப்பா வெளிநாட்டுல நடக்குமா...?


செய்தி: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சர்வதேச வீரப்பெண்மணி விருது.

நல்ல பிசாசு: மாமியாரோட நடந்த சண்டையில கெலிச்சதுக்கா...?


செய்தி: என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி பாஜகவில் இணைந்தார்.

நல்ல பிசாசு: பாஜகாவில் இணைந்ததும் "ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே"ன்னு மறக்காம பாடுனாரா...?


செய்தி: விரைவில் உங்கள் கிராமத்திலேயே பாஸ்போர்ட் எடுக்கலாம்: அறிமுகப்படுத்தும் மத்திய அரசு.

நல்ல பிசாசு: அடப்பாவிகளா...களத்து மேட்டுக்கும்,பக்கத்து கிராமத்துக்கும் போறதுக்கு பாஸ்போர்ட்டாடா...?


செய்தி: தஞ்சையில் ஒரே டிராக்கில் எதிரெதிரே இரு ரயில்கள்: பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி.

நல்ல பிசாசு: பயணிகள் இதயம் "தடக் தடக்"குன்னு அடிச்சுகிச்சா...?


செய்தி: "ஆம் ஆத்மி'யில் ஜெ., தோழி.

நல்ல பிசாசு: "அம்மா" கட்சில இருந்து "சும்மா" கட்சிக்கா...?


செய்தி: துணை நடிகை கற்பழிப்பு: நாலு பேரை கைது செய்ய போலீஸ் தீவிரம்.

நல்ல பிசாசு: நாலா திசையிலயும் வல வீசி தேடுறாங்களா...?


செய்தி: பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 27 தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் போட்டியிடவுள்ளது.

நல்ல பிசாசு: அட! லாலு குடும்பத்துல மொத்தம் 27 பேர் இருக்காங்களா...!!!


செய்தி: அமெரிக்காவில் தொடர்ந்து காணாமல் போகும் இந்திய வம்சாவளி மாணவர்கள்.

நல்ல பிசாசு: அய்யோடா ! இது சிவப்பு இந்திய சதின்னு  சொன்னா "பூனையாரும்,கத்தியாரும்" என்னோட மண்டை தொலியை உரித்துவிடுவார்களே...:-)

10 comments:

  1. Super Sir.

    You better join Twitter.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. டியர் விஸ்வா!!!

      டோண்ட் கால் மி ஸார்.அடியேனுக்கு இன்னும் வாக்களிக்கும் வயதே ஆகவில்லை.

      ட்விட்டர்...? அப்டீன்னா இன்னா அண்ணாத்தே :-)

      Delete
    3. சார்,

      செவ்வாய்கிழமை நேரில் சந்திக்கும் போது தெரிவிக்கிறேனே? ஒக்கேவா?

      Delete
    4. டியர் கிங் விஸ்வா!!!

      welcome erode desert !

      Delete
  2. வழக்கம் போல நல்ல நக்கல்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. டியர் குட்டி பிசாசு!!!

      நம்மை போன்ற "பிசாசுகள்" இணைந்து ஏன் தனி கட்சி தொடங்க கூடாது...?
      பாரதீய பூத் பார்ட்டி-பெயர் ஓ.கே.வா...;-)

      Delete
    2. கட்சி துவங்கலாம்..... ஆனால் அந்த தலைவர் பதவி மட்டும்ம்ம்ம்....!!!!!

      Delete
    3. டியர் குட்டி பிசாசு!!!

      ///ஆனால் அந்த தலைவர் பதவி மட்டும்ம்ம்ம்....!!!!!///

      ஓகே...ஓகே...புரிகிறது.

      நீங்கள் கேட்டுக்கொண்டபடி தலைவர் பதவி என்ற அந்த முள் கிரீடத்தை சுமக்க அடியேன் தயார் ;-)

      Delete
  3. //செய்தி: அமெரிக்காவில் தொடர்ந்து காணாமல் போகும் இந்திய வம்சாவளி மாணவர்கள்.//

    அடப் பாவிகளா... செவ்விந்தியர்களை அழித்தது போதாதென்று தற்போது வெறும் இந்தியர்களையும் அழிக்கத் துவங்கி விட்டார்களா?! :D

    //இது சிவப்பு இந்திய சதின்னு சொன்னா//
    உங்களை வட கொரியாவுக்கு பார்சல் செய்தால் தான் சரிப்பட்டு வருவீர்கள்! ;)

    ReplyDelete