Thursday, 20 March 2014

நக்கல் BY நல்ல பிசாசு.EPISODE -5.


சினிமா -தல & தளபதி.


அரசியல்- தல & தலைவலி.


செய்தி: நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக டீக்கடைகளில் மோடி பிரச்சாரம்.

நல்ல பிசாசு:  நரேந்திர மோ"டீ தூள்" கெளப்புறாரா....?
  

செய்தி: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

நல்ல பிசாசு:  உலக நாயகன் "மார்க்ஸ்" கட்சியிலிருந்து உள்ளூர் பவர் ஸ்டார் ஈ.வே.ரா.கட்சிக்கா...?


செய்தி: காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் உதவ தயார்.-பிரதமர் மன்மோகன் சிங்.

நல்ல பிசாசு: மொதல்ல உங்க ஆபீசுல இருந்து காணாம போன நிலக்கரி ஊழல் கோப்புகள தேடி கண்டுபிடிங்க சர்தார் அண்ணே!



செய்தி:  மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தான் கொலை செய்தது-ராகுல் காந்தி பேச்சு.

நல்ல பிசாசு:  என்னாது...காந்தி செத்துட்டாரா...சொல்லவேல்ல...?


செய்தி: அஜித் சிங்கின் ராஸ்ட்ரிய லோக் தள் கட்சியில் அமர் சிங் இணைந்தார்.

நல்ல பிசாசு: முதலில் சீட்டை பிடி.பிறகு ஓட்டை பிடி.அதற்குமுன் "ஜாட்"டை பிடி!


செய்தி: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மின்சார ரயில் தடம் புரண்டது.

நல்ல பிசாசு: மின்சார ரயில் தானே தடம் புரண்டுருச்சா...?


செய்தி: நடுவானில் ஹோலி கொண்டாடி சிக்கலில் சிக்கிய விமானிகள்.விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்.

நல்ல பிசாசு: இப்ப ஜோலி சிக்கலாயிருச்சா...?


செய்தி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி சார்பாக போட்டி.

நல்ல பிசாசு: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் உதயகுமாரா!


செய்தி: மே 1–ந்தேதி முதல் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள்.

நல்ல பிசாசு: ஏப்ரல் 1-ந்தேதி பொருத்தமா இருக்குமே...?


செய்தி: கோச்சடையான் படத்துக்கு யு சான்றிதழ்.

நல்ல பிசாசு: கார்ட்டூன் சேனல்ல ரிலீஸ் பண்றதுக்கா...?


செய்தி: ஆம்னி பஸ்சில் 20 கிலோ வெள்ளிக் கொலுசுகள் சிக்கியது.

நல்ல பிசாசு: எந்த அம்மணிக்கு இத்தனை கொலுசு...?

6 comments:

  1. இந்தமுறை நக்கல்ஸ் கொஞ்சம் குறைவு.

    //
    நல்ல பிசாசு: மொதல்ல உங்க ஆபீசுல இருந்து காணாம போன நிலக்கரி ஊழல் கோப்புகள தேடி கண்டுபிடிங்க சர்தார் அண்ணே!//

    அப்படியே அவருடைய நேர்மையையும் தேடி கண்டுபிடிக்க சொல்லனும்.

    ReplyDelete
    Replies
    1. டியர் குட்டி பிசாசு!!!

      //அப்படியே அவருடைய நேர்மையையும் தேடி கண்டுபிடிக்க சொல்லனும்.//

      அதை ரோமாபுரி அம்மையாரிடம் விற்றுத்தானே பிரதமர் பதவியை வாங்கினார்.

      Delete
  2. :) Very Nice Sir.


    Keep rocking.....

    ReplyDelete
  3. என்ன சார்,

    இந்த முறை யாருக்கு உங்கள் ஓட்டு?

    கண்டிப்பாக காங்கிரசுக்கு தானே?

    ReplyDelete
    Replies
    1. டியர் விஸ்வா!!!

      இந்த டகல்பாஜி தானே வேணாங்கறது...இன்னிக்கு காலையிலிருந்தே நான் ரொம்ப உஷார் ;-)

      Delete