Saturday, 12 April 2014

இப்படியும் வசைபாடலாம் மோதியை!!!

நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் வந்தது இங்கே அவனவன் செய்யும் அலம்பல்கள் தாங்கவில்லை.தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகிக்கமுடியாத அவதூறுகளையும்,தனிமனித தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகிறது ஒரு பெரிய கும்பல்.இந்த கும்பலில் ஒலக பாட்டாளி வர்க்கத்தின் ஒரே(!) தலைவன் கார்ல் மார்க்ஸின்  பக்த கேடிகளிலிருந்து, தமிழின தலைக்கொள்ளி ஈ.வே.ராமசாமியின் சிஷ்ய கேடிகள் வரை அடக்கம்.போதாக்குறைக்கு பபூன் பொலிட்டீஸியன் நடிகர் கார்த்திக்-கிலிருந்து,ஜிப்பா ஜோல்னா பைய்யன் ஞானி வரை வேலைவெட்டியில்லாத அத்தனை பயல்களும் மோதி என்ற ஒரே நபரை குறிவைத்து வாய்க்கு வந்தபடி கண்டபடி உளறி கொட்டுகிறார்கள்.இவன்களை போன்ற சில்லறை பிரபலங்களே இந்த போடு போடும்போது உலக பிரபலங்களான (ஊழலில்தான்!) காங்கிரஸ்காரர்கள் மோதியை விட்டுவைப்பார்களா என்ன...? நரேந்திர மோதியின் சிறு வயது திருமண விஷயத்தை கையில் எடுத்து ஏதோ உலகத்தில் எங்கும் நடக்காத அக்கிரமம் நடந்து விட்டதாக வானத்துக்கும் பூமிக்கும் குதி குதியென்று குதிக்கிறார்கள்.மோதிக்கு எதிராக இந்த அயோக்கிய சிகாமணிகள் செய்யும் அத்தனை அவதூறுகளும் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில் புதிய புதிய அவதூறுகள் இந்த கும்பல்களுக்கு தேவைப்படலாம்.ஆகையால் அடியேனால் முடிந்த சில அவதூறுகளை இந்த "மத சார்பற்ற"கும்பல்களுக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன்.இதற்கு ராயல்டி எதுவும் தேவையில்லை.ஹிஹி!!!நரேந்திர மோதி ஒரு மோசடி பேர்வழி.தனக்கு அப்பாவும்,அம்மாவும் இருப்பதை நீண்ட காலமாக மூடி மறைத்துள்ளார்.இது போதாதென்று தாத்தா,பாட்டி போன்ற உறவினர்களும் அவருக்கு உண்டு.இந்த தகவல்களை  இவ்வளவு காலமும் வெளியிடாமல் மறைத்த மோதியின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்.
...................................................................................................................................................................

நரேந்திர மோதி மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது,இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் ஜடையை இழுத்தும்,கன்னங்களை கிள்ளியும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இவரால் பாதிக்கப்பட்ட மாணவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாள்.இந்த அக்கிரமத்தை செய்த நரேந்திர மோதியா பெண்களை பாதுகாப்பார்? ஆகவே ,பெண்மணிகளே கண்மணிகளே ....மோதிக்கு ஓட்டு போடாதீர்!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி தனது சகோதரரின் டீக்கடையில் பணியாற்றியபோது டீ குடிக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுக்களையும்,ஓட்டை காசுகளையும் கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்.இவரால் ஏமாற்றப்பட்ட அப்பாவி ஏழை மக்கள் அடுத்தவேளை சோறுகூட இல்லாமல் வறுமை நிலையில் பங்களாக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.எனவே,ஏழை பாழைகளே...மோதிக்கு வாக்களிக்காதீர்!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி தனக்கு தாகம் எடுத்தால் உடனே தண்ணீர் வாங்கி குடிப்பது அதிர்ச்சியளிக்கிறது.குடிநீரை இப்படி விரயம் செய்யும் இவரால் தண்ணீர் பிரச்சனையை எப்படி தீர்க்கமுடியும்? ஆதலால்,குடிமக்களே...உங்கள் வாக்கு எங்களுக்கே!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் தூங்குகிறார்.இப்படிப்பட்ட சோம்பேறியை,தூங்குமூஞ்சி பேர்வழியை உலகம் கண்டதில்லை.இந்த கும்பகர்ண ஆசாமிக்கா உங்கள் ஓட்டு...?

...................................................................................................................................................................

நரேந்திர மோதி காலை உணவாக மட்டும் 5 சப்பாத்திகள் சாப்பிடுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமாகியுள்ளது.மதியம் 3 சப்பாத்திகளும்,இரவு 4 சப்பாத்திகளும் சாப்பிடுகிறார்.ஆகமொத்தம் ஒரு நாளைக்கு 12 சப்பாத்திகளை இந்த மனிதர் தின்று தீர்க்கிறார்.இந்த சாப்பாட்டு ராமனுக்கா நீங்கள் வாக்களிக்க போகிறீர்கள்...?

...................................................................................................................................................................

நரேந்திர மோதியின் கொடுங்கோல் ஆட்சியில் மத கலவரங்களை தூண்டும்  அப்பாவி தீவிரவாதிகளையும்,குண்டு வைப்பதை தவிர வேறு ஒரு பாவமும் அறியா பயங்கரவாதிகளையும் என்கவ்ண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்வது அப்பட்டமான மனித உரிமை மீறல்.ஆதலால்,இஸ்லாமிய பெருங்குடி மக்களே....உங்கள் வாக்கு கை சின்னத்திற்கே!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி கல்லூரியில் படித்த காலத்தில் மற்ற மாணவர்கள் கிளாஸ் கட் அடித்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தபோது இவர்மட்டும் ஒழுக்கம் சிறிதுமில்லாமல் வகுப்பில் தனியாக அமர்ந்து படித்திருக்கிறார்.சக மாணவிகளை மாணவர்கள் ஈவ் டீசிங் செய்தபோது ஆணாதிக்க வெறியுடன் அதை கண்டித்திருக்கிறார்.ஆகவே,மாணவ கண்மணிகளே மாணவ விரோதியான மோதிக்கு தக்க பாடம் புகட்டுவீர்!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி சிறுவனாக இருந்தபோது கிரிக்கெட் ஆடுகிறேன் பேர்வழி என்று ஏராளமான கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வெறியாட்டம் போட்டிருக்கிறார்.முஸ்லிம்களின் மண்டையை குறிவைத்து பந்தை அடித்து படுகாயப் படுத்தியிருக்கிறார்.இவரால் மண்டை உடைந்த முஸ்லிம்கள் தொழுகை செய்யக்கூட முடியாமல் இன்றும் அவதிப்படுகிறார்கள்.சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை கெடுத்த மதவெறியர் மோதிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி என்ற பெயரில் உலா வருபவர் உண்மையில் நரேந்திர மோதியே அல்ல.உண்மையான நரேந்திர மோதி குஜராத் பூகம்பத்தில் சிக்கி இறந்துவிட்டார்.இறந்துப்போன மோதியின் முகசாயலில் ஒரு போலியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உருவாக்கி உலவவிட்டிருக்கிறார்கள்.எனவே இந்த போலி மோதியை கண்டு ஏமாறாமல் அன்னை சோனியாவின் அருந்தவப்புதல்வர் ராகுல் காந்திக்கே வாக்களிப்பீர்!

................................................................................................................................................................... 
8 comments:

 1. தனிமனித தாக்குதலில் உச்சத்தை தொட்டுவிட்டது நம் நாட்டின் தரங்கெட்ட அரசியல்.

  ReplyDelete
  Replies
  1. டியர் குட்டி பிசாசு!!!
   நமது நாட்டின் முதல் பிரதமர் பண்டித் நெஹ்ரூ(இதுதான் அவரது பெயரின் சரியான உச்சரிப்பு) மவுண்ட் பேட்டன் மனைவி எட்வினா,சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா ஆகியோருடன் கொண்டிருந்த கள்ள உறவை நாடறியும்.காங்கிரஸ் கட்சி மோதியின் திருமண சர்ச்சையை தடாலென்று நிறுத்திக்கொண்டதின் பின்னணி நெஹ்ரூவின் "காதல் லீலைகளை" பா.ஜ.க.வினர் பேசிவிடக் கூடாதே என்ற திடீர் அச்சம்தான்!!!

   Delete
 2. நண்பர் புனித சாத்தான்!

  நீங்கள் நம்ம நரேந்திர மோதியின் வாழ்க்கை வரலாறு காமிக்ஸ் வடிவில் வந்ததை படித்து விட்டீர்களா?

  ReplyDelete
  Replies
  1. டியர் விஸ்வா!!!

   அப்படியா...!!! நிஜமாக தெரியாதே ஸார்.அந்த காமிக்ஸில் மோதியை வைத்து காமெடி கீமெடி எதுவும் செய்துவிடவில்லையே ?:-)

   Delete
 3. அரசியலில் புனித சாத்தான் Ph.d வாங்கியிருக்கிறார் என்றால், பூனைக்குட்டியோ LKG - fail. ஹி ஹி! :)

  ReplyDelete
  Replies
  1. டியர் விஜய்!!!

   அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்.அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்த பெட் பூனை தான் என்று எங்கோ படித்துருக்கிறேன் ;-)

   Delete
 4. புனித சாத்தான்.... முதல் வணக்கம். இப்பொழுதுதான் உங்கள் தளம் அறிமுகம் ஆகியிருக்கிறது எனக்கு. மீண்டும் தொடர்பு கொள்கிறேன்... இதுவரை பார்த்தவரையில் பிடித்திருக்கிறது.

  ReplyDelete
 5. தமிழ்நாட்டை ஆளும் "கழகங்கள்" அமெரிக்காவில் இருந்து அந்நாட்டை ஆண்டால் எப்படியிருக்கும்...?
  அந்த கொடுமையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

  ReplyDelete