மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும்,காங்கிரஸ் பொது செயலாளரும்,ஜெர்மானிய
கோயபல்ஸின் இந்திய வார்ப்புருவுமான ஸ்ரீமான் திக்விஜய் சிங்கிற்கு அறிமுகம் தேவையில்லை.அண்ணார்
வாயை திறந்தாலே போதும்.அண்டப் புளுகுகளும்,அளவிலடங்கா கப்ஸாக்களும் அவர் நாபிக் கமலத்திலிருந்து
அருவியாய் கொட்டும்.வாழ் நாளில் உண்மை என்பதையே பேசிடாத அவரது ஊத்த நார வாய் இப்போது
ஒரு உண்மையை வேறு வழியின்றி பேசியிருக்கிறது.
திக்விஜய்க்கும்,தொலைக்காட்சி செய்தி வாசிக்கும் அம்ரிதா ராய்
என்ற அம்மணியாருக்கும் தொடர்பு உள்ளதாக நீண்ட காலமாக அரசால் புரசலாக ஒரு நிருபிக்கப்
படாத வதந்தி நிலவிவந்தது.அந்த வதந்தி அசல் அக்மார்க் உண்மையாகி அது சம்பந்தமான சில
புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகியது.ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தை மறுத்து
வந்த டிக்கி வேறுவழியின்றி இப்போது ஒத்துக்கொள்வதாக
அறிவித்துள்ளார்.
இதுவரை பிரச்னை இல்லை.டிக்கி எந்த பெண்ணுடன் வேண்டுமானாலும்
உறவு வைத்து கொள்ளட்டும்.இதனால் நம் குடி ஒன்றும் முழுகிட போவதில்லை.அது அவரது தனிப்பட்ட
வாழ்க்கை.இதில் பிறர் தலையிடுவது நாகரிகமல்ல.-என்றெல்லாம் பேசி ஒதுங்கிவிடக் கூடிய
விவகாரமல்ல.நமது தேசத்தின் மோசமான கலாச்சார சீர்கேடாக நாறுகிறது நம்ம டிக்கியின் காதல்.ஏனென்கிறீர்களா...?நம்ம
ஆள் டிக்கி காதலித்தது கன்னிக் கழியாத குடும்ப "குத்து"விளக்கை அல்ல.ஏற்கனவே
திருமணமாகி கணவருடன் குடியும் குடித்தனமுமாயிருக்கும் ஒரு "கும்மாங் குத்து"விளக்கை!
67-வயதான டிக்கி தனது மகள் வயதுடைய அம்ரிதா ராய் என்ற NDTV -யின்
முன்னாள் செய்தி வாசிப்பாளரை காதலித்துள்ளார்.அம்ரிதா ராய் (வயது43)திருமணமானவர்.இவரது
கணவரின் பெயர் ஆனந்த் பிரதான்.அம்ரிதா ராயுடன் மிக நெருக்கமாக டிக்கி இருந்தபோது எடுக்கப்பட்ட
புகைப்படங்கள் எப்படியோ வெளியே கசிந்து (அந்த அம்மணியாரே கூட வெளியிட்டிருக்கலாம்)டிக்கியின்
லீலாவிநோதத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.
மாற்றான் மனைவியுடன் துளி வெட்கமின்றி சல்லாபித்த இந்த டிக்கிதான்
இந்திய தேசத்தின் ஒப்பற்ற பெருந்தலைவரான நரேந்திர மோதியை ,அவர் தனது பால்ய விவாகத்தை
மறைத்து மோசடி செய்துவிட்டதாக வானத்திற்கும்,பூமிக்குமாய் துள்ளி குதித்தவர்.அடுத்தவன்
மனைவியுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டிருக்கும் இந்த கபோதிதான் "மனைவியை மதிக்காத
மோதி எப்படி பெண்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிப்பார்"என்று கொஞ்சகாலத்திற்கு
முன் பேட்டியளித்தவர்.
அடியேனை பொறுத்தவரை டிக்கி புதிதாக எதையும் செய்துவிடவில்லை.அடுத்தவன்
மனைவியை தன் மனைவியாக கருதும் கலாச்சாரம் நயம் காங்கிரஸ் கலாச்சாரம்.நம்ம ராகுல்,பிரியங்கா
வகையறாக்களின் கொள்ளு தாத்தாவும்,ஆசிய ஜோதியும்,மனித குல மாணிக்கமுமான பண்டித் நெஹ்ருவின்
அடியொற்றிய "ராவண லீலா" கலாச்சாரம்.
இதோ இணையத்தளம் ஒன்றில் பாண்டியன் என்ற அன்பர் இட்டுள்ள பின்னூட்டம்
அதற்கு சான்று பகரும்.
Paandiyan on April 14, 2014 at 9:53 pm
நேரு நள்ளிரவில் விமானத்தில் லண்டன் வருகிறார். தான் தங்க வேண்டிய
ஹோட்டலுக்கு போவார் என்று பார்த்தால் நேராக லேடி மவுண்ட் பேட்டனைப்பார்க்க செல்லுகிறார்.
மவுண்ட் பேட்டன் அப்போது லண்டனில் இல்லை. நேருவுக்காக நைட் கவுனோடு லேடி எட்வினா மவுண்ட்பேட்டன்
கதவை திறந்து விடுகிற போட்டோ ’தி டெய்லி ஹெரால்ட்’ செய்தித்தாளில் வருகிறது. தலைப்பு
“Lady Mountbatten’s Midnight Visitor.’’ லண்டனில் லார்ட் மவுண்ட் பேட்டன் அன்று இல்லை
என்பதையும் டெய்லி ஹெரால்ட் சொல்கிறது.
கிருஷ்ணமேனன் அன்று பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கைப் பார்த்து குரைக்கிறார்.
“ டெய்லி ஹெரால்ட் பாத்தியாய்யா? நேரு ஒன் மேல ரொம்ப கோபமா இருக்கிறார்”
குஷ்வந்த் சிங் பரிதாபமாக “எனக்கெப்படிங்க தெரியும். நேரு ஹோட்டலுக்குப்
போகாம இப்படி அந்தம்மாவைப் பாக்கப்போவாருன்னு.”
பத்திரிக்கையாளர்களுக்கு நேரு தன் ஹோட்டலில் பேட்டி கொடுக்கிற
காட்சி.
கிருஷ்ணமேனன் தலையைத்தொங்கப்போட்டு தூங்குகிறார். நேரு உடனே
குஷ்வந்த் சிங்கிடம் கோபமாய் சொல்கிறார். “ என்னய்யா இது உங்க ஹை கமிஷனருக்கு உடம்பு
சரியில்ல போலருக்கு. You must not expose him to outsiders like this ” ஆனால் கொஞ்ச
நேரத்தில் அத்தனை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நேருவும் தலையை நெஞ்சில தொங்கப்போட்டு
நித்திரையில் ஆழ்கிறார்.
Pandit Nehru had a couple of days free to indulge in his
favourite hobbies, buying books and seeing Lady Mountbatten.
நேரு ஒரு க்ரீக் ரெஸ்டாரெண்ட்டுக்கு வரும்படி லேடி மவுண்ட்பேட்டனை
அழைக்கிறார். ரெஸ்டாரண்ட் ஓனர் உடனே பத்திரிக்கைகளுக்கு தொலைபேசி தகவல் கொடுக்கிறார்.
ரெஸ்டாரெண்ட்டுக்கு பப்ளிசிட்டியாம்! அடுத்த நாள் காலை பேப்பர்களில் இருவரும் நெருக்கமாக
இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின்றன.
பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கிடம் நேரு எரிச்சலுடன் சொல்கிறார்.”
You have strange notions of publicity!”!
இவ்வாறாக பாண்டியன் தனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்!
எட்வினாவின் மகள் பமீலாவுக்கு "தம்" பற்றவைக்கும் நெஹ்ரு!
எட்வினாவின் மகள் பமீலாவுக்கு "தம்" பற்றவைக்கும் நெஹ்ரு!
ஆக, டிக்கி ஒன்றும் புதிதாக செய்துவிடவில்லை.தனது அரசியல்
"குரு"நாதரின் அடியொற்றியே அவரும் செயல்படுகிறார்.அதேசமயம் அவர் குருவை மிஞ்சிவிடவுமில்லை.இதை
புரிந்துகொள்ள இது சாதாரண மனித காதலல்ல!
"தெய்வீக கள்ள
காதல்!!!"
திக் விஜய் சிங் பொண்டாட்டி இப்ப தான் செத்தாங்கனு நினைக்கிறேன், அதுகுள்ள இவனுக்கு கிலுகிலுப்பு கேக்குது. இவனுக்கு மோதி யில்லை, கருணாநிதி பத்தி பேசகூட வக்கில்லை.
ReplyDeleteபொது வாழ்க்கைக்கு வந்தபின் தனி வாழ்க்கை என்று ஒன்றுமில்லை என மோதிக்கு உபதேசம் செய்தவர் இந்த டிக்கி !
Deleteசபாஷ் சரியான போட்டி.. நேரு vs டிக்கி!
ReplyDelete