Sunday, 8 June 2014

சென்ஸார் நகரம் சிவகாசி !!!

சமீபத்தில் வெளிவந்துள்ள முத்து காமிக்ஸ் லார்கோ விஞ்ச் த்ரில்லரான "வேட்டை நகரம் வெனிஸ்" வழக்கம்போல் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கதையில் லார்கோவின் ஆக்ஸன் குறைவு , ஆள்கடத்தல் மூலமாக காசு பறிக்கும் அரதபழசான கதைக்களம் , லார்கோவின் நண்பர் சைமன் இடம்பெறாதது ,மோசமான அச்சுத்தரம் என கதையில் சில மைனஸ் பாய்ண்டுகள் இருந்தும் கதாசிரியர் வான்-ஹாமேயின் அசாத்திய பரபரப்பு&விறுவிறுப்பு -டன் கூடிய இந்த த்ரில்லர் அனைவரையும் கவரவே செய்தது.

வேட்டை நகரம் வெனிஸ் & கொலையும் செய்வார் கோமான் கதைகளில் நம்ம ஊரு கலாசாரத்தை கருத்தில் கொண்டு ஏராளமான எடிட் மற்றும் மார்பிங் செய்யப்பட்டுள்ளது.லார்கோவின் தோழிகளின் முன்னழகும்,பின்னழகும் "நேர்த்தி" என்று கொஞ்சமும் இல்லாமல் அநியாயமாக (!)  மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடை அணிவிப்பு அட்டகாசங்களால்  ஈரோடு விஜய் போன்ற ஏராளமான வாலிப வயோதிக அன்பர்கள் கடும் மன உளைச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அவர்களின் துயர் துடைக்க அக்கதைகளின் "எடிட்" செய்யப்படாத காட்சிகளை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.இந்த படங்கள் மேற்படி கதைகளின் ஒரிஜினல் டிஜிட்டல் பைல்களிலிருந்து இணையத்தின் ஏதோ ஒரு டாட்.காமிலிருந்து சுடப்பட்டது.

                                                                     


ஏதோ அடியேனால் முடிந்த சமூகசேவை.ஹிஹி!!!25 comments:

 1. சாத்தான் அங்கிள்,

  //உங்களுக்காகவே ஒரு கிளுகிளு காமிக்ஸ் பதிவு இங்கே//

  இந்த மாதிரியான லின்க் கொடுக்கும்போது தயவு செய்து 18+ என்று குறிபிட்டுவிடுங்கள்.

  இல்லை எனில் என்னை மாதிரியான சிறார்கள் “இந்த” பதிவை பார்த்துவிடும் அபாயம் உண்டு.

  ReplyDelete
 2. உமது சேவை வாழ்க!!!

  ReplyDelete
 3. ஹி!ஹி!நன்றி! இதுபோன்றே +18 பதிவிட்டு largo சேவை செய்யுமாறு சங்கத்தின் சார்பில் கேட்டுகொள்கிறோம்

  ReplyDelete
 4. ஈர்க்க கூடிய பதிவு. கலைகண்ணோடு பார்த்தால் ஆபாசம் இல்லை. கமல் படம் பார்ப்பது போல். நன்றிகள் பல உங்கள் துணிச்சலுக்கு .பைங்கிளி படலத்தை விட்டு விட்டீர்களே சார்??

  ReplyDelete
 5. டியர் கிங் விஸ்வா,ரம்மி XIII,செந்தில் & திருமாவளவன்!!!

  ராணி காமிக்ஸ் முதல் இதழ் ஜேம்ஸ் பாண்டின் "அழகியை தேடி"படித்திருக்கிறீர்கள்தானே.டாப்லெஸ் காட்சிகளை துளியும் எடிட் செய்திடாமல் தினத்தந்தியின் "ராணி"வாரஇதழ் அப்புத்தகத்தை வெளியிட்டது.1984 இல் அந்த புத்தகம் வெளிவந்தபோது அடியேனின் வயது 12.
  இன்று 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான தணிக்கைக்கு பிறகு வெளிவந்துள்ள "வேட்டை நகரம் வெனிஸ்" நம் அனைவரையும் சிறுவர்களாக்கி (!) விட்டது.கோவில் சிற்பங்களில் டாப்லெஸ்ஸை வைத்துக்கொண்டு காமிக்ஸில் எடிட் செய்துகொண்டிருக்கிறோம்.விகடன் குழுமம் வெளியிடும் டைம் பாஸ் இதழில் அச்சேறாத ஆபாசமா வேட்டை நகரம் வெனிஸில் உள்ளது.சுத்தமாக புரியவில்லை!

  ReplyDelete
 6. சாத்தான் அங்கிள்!!!!!!

  சமீபத்தில் ஒரு வேய்ன் ஷெல்டன் கதைக்கு சேலம் வாசகர் ஒருவரிடமிருந்து எடிட்டர் வாங்கி கட்டிக்கொண்டது போதாதா? அதற்க்கு தர்மன் என்பவர் இட்ட கிண்டல் கமெண்ட்டையுமா மறந்து விட்டீர்கள்?

  அது சரி, சமீபத்திய மியாவி புத்தகத்தில்கூட ஆபாசம் தலைவிரித்து ஆடுகிறது என்று கம்ப்ளைண்ட் செய்தவர்கள் உண்டு (அந்த புத்தகத்தை எடுத்து மறுபடியும் பார்க்கவும்).

  இப்படிப்பட்ட வாசகர்களை வைத்துகொண்டு..........

  தேவை இல்லாத கேள்வி: 1984ல் உங்களுக்கு 12 வயது என்றால், அது எத்துணையாவது 12 வயது? 24 ? 36?

  ReplyDelete
  Replies
  1. டியர் விஸ்வா!!!

   சமூகம்,பொருளாதாரத்தில் மட்டுமல்ல கலாசாரத்திலும் நாம் பிற நாடுகளிலிருந்து பல ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறோம்.இதில் மாற்றம் கண்டாலொழிய வேறு தீர்வில்லை.ரஜினீசை அவர் வாழ்ந்த காலத்தில் "செக்ஸ் சாமியார்" என்று கிண்டலாக எழுதிய அதே குமுதம் இதழ்தான் பிற்காலத்தில் அவரை "ஞானி ஓசோ" என்று புகழ்ந்து எழுதியது.

   ஆபாசத்தை பரப்புவதற்கா வேட்டை நகரம் வெனிஸ் கதையை வான் ஹாமே எழுதியிருப்பார்...? ஓவியரின் நோக்கமும் நிச்சயம் அதுவல்லவே.கதையில் உள்நோக்கம் ஏதுமின்றி இயல்பாக இடம்பெறும் நிர்வாண காட்சிகளை எடிட் செய்தல் சரியல்ல என்பதே என் கருத்து.

   Delete
 7. அப்புறம்..இன்னுமொரு விஷயம்!

  அந்த புத்தகத்துக்கு பிறகு ரானி காமிக்சிலும்கூட தணிக்கை நடந்தது தெரியுமென்று நினைக்கிறேன்.

  தினத்தந்தி குழும நிலவரப்படி, அந்த புத்தகம் உண்மையில் ஒரு “விதிமீறல்”. அதற்க்காக விசாரணை எல்லாம் நடந்ததாம்..

  ReplyDelete
  Replies
  1. டியர் விஸ்வா!!!

   உங்களுக்கு கிடைத்த இந்த தகவல் நம்பக்கூடியதாக இல்லையே. ராணி காமிக்ஸின் முதல் இதழை அந்நிறுவனத்தின் அதிபரான (மறைந்த) திரு.சிவந்தி ஆதித்தனுக்கு கண்ணில் காட்டாமலேயே வெளியிட்டுவிட்டார்களா...? பிற்காலத்தில் வெளிவந்த இதழ்களை அவர் கவனிக்காதிருக்கலாம்.முதல் இதழை நிச்சயம் அவரது அனுமதியின்றி வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை.

   Delete
  2. சாத்தான் அங்கிள்!

   இந்தாருங்கள் முழு விவரம்: அப்போதைய ராணி இதழின் எடிட்டோரியலில் இருந்தவர் தாம் ராமெஜெயம். இந்த ராணி காமிக்ஸ் வெளிவர இருந்தபோது அவரை உடனடியாக ராணி இதழில் இருந்து ராணி காமிக்ஸ் இதழுக்கு மாற்றம் செய்தார்கள்.

   அவரும் அபோதைய மும்பை நிருவனம் கொடுத்த காமிக்ஸ் கதையை மொழிமாற்றம் செய்து தமிழில் வெளியிட்டார். ஆனால் அதற்க்கு ஏகப்பட்ட எதிர் விமர்சன கடிதங்கள் (ராணி வார இதழின் அட்டையில் குடும்ப பத்திரிக்கை என்று அச்சிடப்பட்டு இருக்கும்).

   பாரம்பரியம் மிக்க ஒரு ஸ்தாபனத்தில் இருந்து வெளிவரும் இதழில் Frontal Nudityயா? என்று பலரும் கண்டிக்க, அந்த தகவல் ஆதித்தனாரை எட்டியது. அவர் உடனே கூப்பிட்டு இத்தகைய Exposure நமது கலாச்சாரதுக்கு சரிப்பட்டு வராது என்று சொல்ல, அவசரம் அவசரமாக ராணி காமிக்ஸ் இதழ் எண் 3 (மந்திரியை கடத்திய மாணவி) சென்சார் செய்யப்பட்டது.

   இதே ராமஜெயம் ராணி காமிக்சில் இருந்து விலகி சீக்ரெட் ஏஜெண்ட் ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் ஆரம்பித்தபோது, அதில் சென்சார் செய்யாமலேயே வெளியிட்டார்.

   இந்த தகவலை 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டது.

   தாமதமான பதிலுக்கு மன்னிச்சூ!

   Delete
  3. டியர் விஸ்வா!!!

   ///இதே ராமஜெயம் ராணி காமிக்சில் இருந்து விலகி சீக்ரெட் ஏஜெண்ட் ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் ஆரம்பித்தபோது, அதில் சென்சார் செய்யாமலேயே வெளியிட்டார்.///

   ஹ்ம்ம்....அவரது அந்த காமிக்ஸ் முயற்சி வெற்றி பெறாதது பெரும் சோகம்!

   Delete
  4. அதைப்பற்றிய / அவரைப்பற்றிய சமீபத்திய சோக தகவல் ஒன்று உண்டு. நேரில் பார்க்கும்போது சொல்கிறேன்.

   Delete
 8. ஆஹா! இதுக்குத்தான் ஊருக்கு ஒரு புனித சாத்தான் வேணும்ங்கறது! இதுவல்லவோ சமூக சேவை!!

  இந்தப் பதிவின் அடுத்த பாகமும் உண்டுதானே சாத்தான்ஜி? ;),,,

  ReplyDelete
  Replies
  1. டியர் விஜய் !!!

   அடியேனின் சமூக சேவை (!) தொடரும் :-)

   Delete
 9. வளர்க உம் காமகிஸ் வளர்ச்சிப்பணி. சே. காமிக்ஸ் வளர்ச்சிப்பணி.

  ReplyDelete
  Replies
  1. டியர் அமர்நாத்!!!

   (காமிக்ஸ்) கற்றாரை (காமிக்ஸ்) கற்றாரே காமுறுவர் ;-)

   Delete
 10. ச்சே! ஒரு கையால் கண்ணை மூடிக்கொண்டு டைப் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பதை சாத்தான் உணர வேண்டும் (இந்த பதிவு 18+ என்பதால் நான் பதிவின் ஆரம்ப பக்கங்களை பார்க்கக்கூடாதல்லவா?).

  ReplyDelete
  Replies
  1. விரலிடுக்கில் திரையை நோக்கியபடியே, தொங்கும் நாக்கு விசைப்பலகையை ஈரப்படுத்திவிடாமல் தொடர்ந்து டைப் செய்வதென்பது நிஜமாகவே சவாலானதுதான், விஸ்வா அவர்களே! ;)

   Delete
  2. டியர் விஜய்!!!

   உங்கள் விசைப்பலகையை தினமும் வெயிலில் காயப்போடுவதன் மர்மம் இதுதானோ ; )))

   Delete
  3. சாத்தன் அங்கிள், சாத்தான் அங்கிள்,

   பாருங்க நம்ம விஜய் அங்கிள் என்னை கிண்டல் பண்றாரு!

   Delete
 11. டியர் friend , இதை போல் ஆபாச படங்கள் உங்கள் தளத்திலா ? உங்களின் தளத்தை சில பல பெண் வாசகிகள் படிக்க நேர்ந்தால் அவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் !
  மேலும் என் குழந்தை மனது இந்த படங்களை பார்த்துவிட்டு என்ன பாடு பட்டதென்று உங்களை நேரில் பார்க்கும்போது விளக்க கடமை பட்டுள்ளேன் !!!!
  என்ன இருந்தாலும் படங்கள் அருமை !!!!

  ReplyDelete
  Replies
  1. டியர் சுந்தர்!!!

   //உங்களின் தளத்தை சில பல பெண் வாசகிகள் படிக்க நேர்ந்தால் அவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் !//

   ஆணாதிக்க வலைதளத்துக்கு பெண் வாசகிகளா...?சான்ஸே இல்லை பாஸ் ;-)

   //என் குழந்தை மனது இந்த படங்களை பார்த்துவிட்டு என்ன பாடு பட்டதென்று உங்களை நேரில் பார்க்கும்போது விளக்க கடமை பட்டுள்ளேன் !!!//

   எப்படி...? "அங்கிள்..அங்கிள்...அந்த ஆண்ட்டி சொக்கா போடாம ஸேம் ஸேம் பப்பி ஷேமா இருக்காங்க.அவங்களுக்கு டிரஸ் வாங்க காசு தாங்க அங்கிள்" என்பீர்களா :-)

   //என்ன இருந்தாலும் படங்கள் அருமை !!//

   அப்பாடா....அடியேனின் சமூக சேவை வீண் போகவில்லை.ஹிஹி!!!

   Delete
  2. பாருங்க! ஒரு குழந்தையையே இப்படி கமெண்ட் போட வச்சுட்டீங்களே!

   Delete
 12. காமிக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக சாத்தன் அவர்களின் ப்ளாக்கில் 25வது கமெண்ட் அடியேனுடையதே!

  ReplyDelete