Thursday, 28 February 2013
இந்தியர்களே உஷார் !!!
மனித உரிமைகள் என்ற போர்வையில் மேற்கத்திய வெள்ளை தோல் நாடுகள் ஆசியா கண்டத்தில் நுழைந்து குழப்பம் விளைவிக்க திட்டமிடுகின்றன.அதற்கு தொடக்கமாக இந்துமாக்கடலில் அமைந்துள்ள ஸ்ரீலங்காவை குறிவைக்கின்றன.
முன்பு வியட்நாமின் உள்நாட்டு பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டதை எதிர்த்த "புண்ணியாத்மாக்கள்"இன்று ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பிரச்னையில் தலையிடுமாறு அதே அமெரிக்காவை கெஞ்சி கூத்தாடுகின்றன.மனித உரிமைகள்,வன்கொடுமைகள் என்ற போர்வையில் மற்றுமொரு காலனிய சாம்ராஜ்யத்தை உருவாக்க திட்டமிடும் கும்பல்கள் ஜெனிவா நகரில் கூடி மூன்றாம் உலக நாடுகளை மிரட்ட தொடங்கியுள்ளன.
இன்று ஸ்ரீலங்காவின் உள்விவகாரத்தில் தலையிடும் வெள்ளைத்தோல் துரைசானிகள் நாளை இந்தியாவின் உள்விவ்காரத்திலும் தலையிட தயங்க மாட்டார்கள்.
"காஸ்மீரை தனி நாடாக்கு,காட்டுமன்னார் கோயிலை தனி ஜில்லாவாக்கு"என்று நமக்கும் உத்தரவிடுவார்கள்.
ஏற்கனவே நமது பாரத மணித்திருநாட்டில் எதற்கு பஞ்சமோ இல்லையோ  பிரிவினைவாதிகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை.
தமிழ்நாட்டை எடுத்துகொண்டால் கழகத்வா,திராவிடத்வா,ஈரோடு வெங்காயத்வா ப்ராண்ட் கட்சிகளும்,சிறுத்தை,கழுதை,கோட்டான் என்ற பெயர்களில் உலாவரும் லெட்டர்பேட் அமைப்புகளும் பிரிவினை கோஷமிட்டு பதற்றத்தை உருவாக்கியுள்ளன.தங்களை இந்தியர் என்று சொல்லிக்கொள்ள கூட இந்த கும்பல்கள் விரும்புவதில்லை.நாட்டின் மற்ற பகுதிகளிலோ சீனாவின் கள்ளக்குழந்தையான நக்ஸல் பயங்கரவாதமும்,பாகிஸ்தானால் தூண்டப்படும் மத அடிப்படைவாதமும் மத்திய அரசால் ஒடுக்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளன.
இந்த லட்சணத்தில் சூளை செங்கல்லும் பிடாரிதான் என்பதுபோல மனித உரிமையாளர்களும்,போலி மதச் சார்பின்மையாளர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நாட்டை துண்டாட அணிதிரண்டு வருகிறார்கள் .
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் தீர்மானத்தை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்துவது ஒன்றே நமது நாட்டின் எதிர்காலத்துக்கு உகந்த முடிவாக இருக்கும்.இல்லையேல் எதிர்வரும் காலங்களில் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒரு பெரும் அபாயம் முளைவிட தொடங்கியிருக்கிறது.அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.தவறினால்,அந்த அபாயம் நம் அனைவரையும் கிள்ளி எறிந்துவிடும்.
  
                                  இந்தியர்களே உஷார் !!!                                      

  

12 comments:

 1. சாத்தானுடைய கொள்கைதான் என்ன? அமெரிக்கர்களை பற்றி நீங்கள் லயன் வலைப்பூவில் விவாதித்ததின் அர்த்தம் என்ன? கொஞ்சம் புரிகின்ற மாதிரி சொல்லுங்களேன்,

  ReplyDelete
  Replies
  1. டியர் மீரான்!!!
   வெள்ளை அமெரிக்கர்-சிவப்பிந்தியர் பிரச்னையில் என் நிலைப்பாடு அந்த விஷயத்தில் அமெரிக்க வெள்ளையரை மட்டுமே சாடுவதேன்...?என்பதுதான்.அமெரிக்க கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளின் வெள்ளையரை மறந்தும் விமர்சிக்காதவர்கள் ஏதோ சிவப்பிந்தியரை யு.எஸ்.நாட்டு வெள்ளையர்கள் மட்டுமே அழித்து ஒழித்ததாக "போலித்தனமாக"குற்றம் சாட்டுவதுதான்."
   அமெரிக்க கண்டத்திலுள்ள சிவப்பிந்தியர்களுக்கு தீங்கு விளைவித்ததாக எந்த அமெரிக்காவை தாக்குகிறார்களோ அதே அமெரிக்காவின் தோளோடு தோள் சேர்ந்து இன்று ஸ்ரீலங்காவிற்கு எதிராக கிளம்பியிருக்கிறார்கள்.அவர்களின் இந்த செயல் இந்தியாவுக்கு எதிராக நாளை மாறும் அபாயம் இருக்கிறது.
   இந்தியாவை விடுங்கள்.ஏற்கனவே,சொல்லொனா துயத்தில் உழலும் ஈழ தமிழர்களுக்கும் இவர்கள் அடிக்கும் கூத்துக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

   Delete
 2. ஒன்று மட்டும் உண்மை......புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் தமிழ் தேசிய வாதிகளும் , அவர்களின் ஆதரவுக்காக நாடக‌மாடும் தமிழக கட்சிகளும் சேர்ந்து ஈழத்தில் உள்ள தமிழர்களை முற்றாக அழித்துவிட்டுத்தான் ஓய்வார்கள் போலிருக்கிறது...........

  ReplyDelete
  Replies
  1. டியர் சிவ.சரவணகுமார்!!!
   சரியாக சொன்னீர்கள்.சாதாரண சினிமா இயக்குனரான சீமான் அடிக்கடி ஐரோப்பா சுற்று பயணம் செய்ய அவருக்கு ஏது பணம்?புலம் பெயர்ந்த தமிழர்களில் உள்ள புலி ஆதரவாளர்களின் பணத்தில் தானே அந்த சீமான் உலகம் சுற்றுகிறார்.

   Delete
 3. மன்னிக்கவும் நண்பரே தாமதமான வருகைக்கு சற்றே BUSY

  தொடருங்கள் உங்கள் சேவைகளை உங்கள் நடையில்

  வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நண்பரே :))
  .

  ReplyDelete
  Replies
  1. டியர் சிபி சிபி !!!
   வாழ்த்த வயதில்லையா.....?சரி......விடுங்கள். உங்கள் பேரப்பிள்ளைகள் நலமா....?:):-)

   Delete
 4. நண்பர் சாத்தான் அவர்களே ,உங்கள் பதிவின் முழு அர்த்தம் உங்களுகே புரிகிறதா ? தமிழனை அழித்த சிங்களனை ஆதரிப்பது தான் உங்கள் பதிவா ? தயவு செய்து போரின் வரலாறு அறியவில்லை என்றாலும் இப்பொழுது வரும் ஜூனியர் விகடன் ஆவது வாங்கி படித்து பதிவை இடுங்கள் .வெள்ளை தோல் நாடுகள் இந்தியாவில் நுழைந்து விடும் என்கிறேர்கலே ...இந்த போரே இந்தியா தான் நடத்தியது என தாங்கள் அறிவீரா ?முதலில் இந்த இந்திய அரசு க்கு தமிழ் நாடு இந்தியாவில் தான் உள்ளது என அறிய வையுங்கள் .தமிழ் மீனவனை இந்தியனாக பார்க்காமல் தினமும் கொன்று குவிக்கும் இலங்கையை வளர்திகொண்டு இருக்கும் இந்த சிங்கள காங்கிரஸ் அரசை ஜால்ரா அடிகிறதா இந்த பதிவு .நான் தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன் .இப்பொழுது இந்தியன் என்பதில் வெக்கம் அடைகிறேன். ஒரு விண்ணப்பம் தயவு செய்து காமிக்ஸ் பதிவை மட்டும் இடுங்கள் . தமிழன் பாவம் எங்கள் பார்வை ல் ,சிங்களன் பாவம் உங்கள் பார்வையில் ..

  ReplyDelete
  Replies
  1. டியர் பரணீதரன்!!!
   புலிகளை எதிர்த்தாலே அது சிங்களருக்கு ஆதரவு என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம்.முன்பு புலி தலைவர் சிங்கள ராணுவத்தோடு கூட்டு சேர்ந்து "நாங்களும் சிங்களரும் சகோதர்கள்.எங்கள் பிரச்னையில் தலையிட இந்திய நாய்களுக்கு எந்த உரிமையும் இல்லை"என கூறியதை நீங்கள் அறிவீர்களா?
   அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன்,நீலன் திருச்செல்வம் போன்ற தமிழீழ தலைவர்களை கொன்று குவித்தவர்கள் யார்?.பத்மனாபாவையும் ,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் சென்னைக்கே வந்து கொன்றவர்கள் யார்? விடுதலை புலிகளின் கொலைவெறிக்கு பலியான தமிழ் தலைவர்களை பற்றி எந்த கவலையும் படாமல் பிரபாகரன் மகனின் பிணத்துக்காக ஒப்பாரி வைப்பது எந்த வகையிலும் தமிழீழ மக்களுக்கு பயன் தராது.

   Delete
  2. டியர் சாத்தான்,நான் எனது பதிலில் பிரபாகரன் மற்றும் அவர் மகனை பற்றி எங்குமே குறிப்பிட villaiyay .ஏன் புலிகளை பற்றி கூட குறிப்பிட வில்லை .இலங்கை அரசை போலவே தாங்களும் தமிழன் என்றால் விடுதலை புலி தான் அவன் என குரிபெடுகிறேரா ... விடுதலை புலிகளை தான் மொத்தமாக ஒழித்து விட்டேர்கலே..இன்னமும் அங்கு தமிழனை ஏன் கொன்று குவித்து வருகிறீர் .சரி அங்கு தான் விடுதலை புலிகள் மாறு வேசத்தில் திரிவதாக கூட கதை கட்டுவார்கள் .இங்கே இருக்கும் நம் தமிழ்நாட்டு மீனவனை தினமும் கொன்று குவித்து வருகிரே அது ஏன் ?

   Delete
  3. டியர் பரணீதரன்!!!
   தமிழக மீனவர்கள் இலங்கை எல்லையில் மீன் பிடிப்பதால் தங்கள் பகுதியில் மீன்வளம் குறைந்துவிட்டதாக ஈழத்தமிழ் மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.பல முறை ஈழத்தமிழ் மீனவர்களுக்கும் ,தமிழக மீனவர் பிரதிநிதிகளுக்கும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் சுமுக தீர்வு காணப்படவில்லை என்பது சோகமே.
   இருதரப்பு மீனவர் பிரச்னையை பற்றி நம்மூர் ஊடகங்கள் எழுதுவதில்லை.தமிழக மீனவர்கள் பலமுறை ஈழத்தமிழ் மீனவர்களாலேயே தாக்கப்பட்டுள்ளார்கள்.அப்போதும் இலங்கை கடற்படைதான் தாக்கியதாக திசை திருப்பினார்கள்.இப்பிரச்னை குறித்து இலங்கை தமிழ் அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களை படித்தாலே உண்மை நிலவரம் அனைவருக்கும் புரியும்.இலங்கை கடற்படை தமிழ் மீனவர்களை தாக்கவே இல்லை என்று நான் கூறவில்லை.நிச்சயமாக தாக்கினார்கள்.தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதாலேயே இந்த தாக்குதல்கள் நடந்ததாக ஈழத்தமிழ் பத்திரிக்கைகளே எழுதுகின்றனவே!!!

   Delete
  4. ஒரு நாட்டு மீனவனை இன்னொரு நாட்டு மீனவனே சுட்டு கொள்வது மிக பெரிய குற்றம் ,(முதலில் அது உண்மையா என்பதை உங்கள் மனசாட்சி இடமே விட்டு விடுகிறேன் )ஆமாம் ,இலங்கை மீனவ வனுக்கு அந்த நாட்டு அரசு வலையுடன் துப்பாக்கி உம் தருவதை இன்று தான் கேல்வி படுகிறேன் .முயலுக்கு மூன்றே கால் தான் எனபவரிடிம் இனி பேசி பயனில்லை காங்கிரஸ் நண்பரே ....வருகிறேன்..

   Delete
  5. டியர் பரணீதரன்!!!
   தமிழக மீனவர்கள் ஈழத்தமிழ் மீனவர்களால் பலமுறை தாக்கப்பட்டார்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.சுடப்பட்டார்கள் என்றோ கொல்லப்பட்டார்கள் என்றோ குறிப்பிடவில்லை.தமிழக மீனவர்களை விடுங்கள்.இந்திய மக்கள் பலர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள்.இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தலையே துண்டிக்கப்பட்டது.பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவங்கள் தொடர்ந்து நமது நாட்டின் மீது அத்துமீருகின்றன.ஆனால் நாமோ அந்த நாடுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம்.மத்தியில் உறுதியான முடிவெடுக்கும் தலைமை இல்லாததே இந்நிலைக்கு காரணம்.மற்றபடி அடியேன் ஒன்றும் காங்கிரஸ் காரனல்ல.கழக காரனுமல்ல.இலங்கை பிரச்னையை முப்பது ஆண்டுகளாக கூர்ந்து கவனித்து கொண்டிருக்கும் சாதாரண இந்தியாக்காரன் மட்டுமே!!!

   Delete