( இடமிருந்து வலமாக; ஈரோடு விஜய்,ஈரோடு ஸ்டாலின்,சேலம் கர்ணன்,புனித சாத்தான்,எடிட்டர்ஜீ,சிவ.சரவணக்குமார்,சேலம் டெக்ஸ் விஜயராகவன்.)
பொதுவாக புத்தக கண்காட்சிகள் என்றாலே அடியேனின்
மண்டையில் ஒரு பயம் ஆட்டோமேட்டிக்காக உற்பத்தியாகிவிடும்.பயத்திற்கான
காரணங்கள் யாவன;
*ஏராளமான ஜனசந்தடிகள்.தள்ளுமுள்ளுகள்.மற்றும்
பின்விளைவாக கடுமையான கால்வலிகள்.
*புத்தக தேடுதலில் ஏற்படும் குழப்பங்கள்.ஆர்வமிகுதியில்
வாங்கப்படும் புத்தகம் படிக்க ஆரம்பித்த பத்து நிமிடங்களில் வாயே கிழிந்துவிடக்கூடிய
அளவுக்கு "கின்னஸ் கொட்டாவிகளை"உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம்:-)
*புத்தகங்களின் அபார விலைகள்."இரண்டு
மாதத்தில் கர்ப்பமடைவது எப்படி?" என்ற புத்தகத்தை வாங்க,சுமாராக 400 ரூபாய் செலவிட
நேரலாம்.மறக்காமல் "மனைவியிடம் உதை வாங்காமல்
தப்புவது எப்படி?" என்ற புத்தகத்தையும் வாங்கிவிடவும்:-)
*புத்தக கண்காட்சிகளுக்கு வருகை தரும்
பார்வையாளர்களை மிரள வைக்கும் "மார்க்சீய,திராவிடீய,தலித்தீய,மற்றும் புலியீய"
தலைவர்களின் படங்களோடு கூடிய தடிமனான புத்தகங்கள்.இத்தனை "யீயங்களையும்"
படித்தால் இறுதியில் "பைத்தீயம்"
ஆகிடும் அபாயம் நிச்சயம்:-)
அடியேனின் இத்தனை "தெனாலிமேனியா"க்களையும்
கொஞ்சம் நாட்களுக்கு ஓரங்கட்டிவிட்டு இந்த
ஆண்டு ஈரோட்டில் நடந்த 9-ஆவது புத்தக கண்காட்சியில் உற்சாகமாக கலந்து கொண்டேன்.காரணம்,இந்த
ஆண்டு முதல் லயன்,முத்து காமிக்ஸ்களை வெளியிடும் பிரகாஷ் பப்ளிசர்ஸ் நிறுவனம் தனியாக
ஒரு ஸ்டால் மூலம் தங்கள் இதழ்களை ஈரோட்டில் முதன்முறையாக விற்பனை செய்ய முடிவெடுத்தது
தான்!!!
சென்ற ஆண்டே தனி ஸ்டால் அமைக்க எடுத்துக்கொள்ளப்பட்ட
முயற்சிகள் காலதாமதத்தின் காரணமாக வெற்றி பெறவில்லை.இம்முறை சற்று முன்கூட்டியே தனி
ஸ்டால் வாங்க மரியாதைக்குரிய அண்ணன் ஸ்டாலின் அவர்கள் மூலமாக எடிட்டர்ஜீ மேற்கொண்ட
நடவடிக்கைகள் பலனளித்தன.தனி ஸ்டால் கிடைத்த தகவல் வெளியானதுமே எங்கள் ஈரோடு "MAFIA GANG"(ஈரோடு ஸ்டாலின்,ஈரோடு விஜய்,ஆடிட்டர் ராஜா,மற்றும்
அடியேன்!)
உற்சாகமாக களமிறங்கியது.ஸ்டாலை
எவ்வாறு அலங்கரிப்பது என்பதிலிருந்து வருகை தரும் வாசக நண்பர்களை எவ்வாறு உபசரிப்பது
என்பது வரை பலவிதமான திட்டங்களையும் குறித்த ஆலோசனை கூட்டங்களை வாராவாரம் ஸ்டாலின்
அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது.ஆலோசனையில் பரிந்துரைக்கப்பட்ட ஐடியாக்கள் உடனடியாக
எடிட்டர்ஜீ அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன.கண்காட்சி நடைபெறும் 11 நாட்களில் ஒரு விடுமுறை
நாளில் வருகை தர உத்தேசித்துள்ளதாக எடிட்டர்ஜீ அறிவித்ததும் இந்த விழாவை குறித்த பரபரப்பு
உச்சத்தை தொட்டது!!!
எடிட்டர்ஜீ ஆகஸ்ட் 11 ஆம் நாள் வருவேன்
என்று வலைப்பூவில் எழுதியதும் எங்கள் உற்சாகம் பலமடங்காகியது.கண்காட்சி தொடங்கிய ஆகஸ்ட்
3 ஆம் நாள் ஆடி 18 விடுமுறை நாளாக அமைந்ததால் அன்றைய தினமே அரங்கில் மக்கள் வெள்ளம்
கரைபுரண்டோடியது.மறுநாள் ஞாயிற்றுகிழமை என்பதால் அன்றும் காவேரி வெள்ளப்பெருக்கை மிஞ்சும்
அளவு மக்கள் கூட்டம் அலைமோதியது.இரண்டு விடுமுறை நாட்களிலும் நமது ஸ்டாலில் விற்பனை
தூள் பரத்தியது.அந்த நிகழ்வுகளை பற்றி ஏற்கனவே விஜய் நிறைய
அப்டேட் போட்டுவிட்டதால் எடிட்டர்ஜீ வருகை தந்த ஆகஸ்ட் 11 ஆம் நிகழ்வுகளை மட்டும் இங்கே
சொல்கிறேன்.
*எடிட்டர்ஜீ ஆகஸ்ட் 10 ஆம் நாள் இரவு ரயில்
மூலம் ஈரோடு வந்தடைந்தார்.
*மறுநாள் காலை அண்ணன் ஸ்டாலின் அவர்களும்,நண்பர்
ஆடிட்டர் ராஜா அவர்களும் எடிட்டர்ஜீ தங்கியிருந்த லீஜார்டின் ஹோட்டலுக்கு சென்று அவரை
வரவேற்றார்கள்.
*மார்க்சீய தலைவர் ஒருவரின் பெயர்கொண்ட
(பெயர் மட்டும்தான்.மற்றபடி அவர் மார்க்சீயர் அல்ல!)நண்பரின் இல்லத்தில் எடிட்டர்ஜீ
காலை "BREAK
FAST " சாப்பிட்டதாக
நம்பத்தகுந்த வட்டாரத்தை சேர்ந்த ஒரு நபர் (அந்நபரின் முதல் எழுத்து "ந".கடைசி
எழுத்து "சு".) தகவல் தெரிவித்தார்.
*ஸ்டால்கள் திறந்த 20 நிமிடத்தில் எடிட்டர்ஜீ
அங்கே ஆஜராகிவிட்டார்.அப்போது நேரம் 11.20.
*ஏராளமான காமிக்ஸ் வாசகர்கள் கேட்ட சரமாரி
கேள்விகளுக்கு சிறிதும் தயக்கமோ,சலிப்போ இல்லாமல் புன்சிரிப்போடு பதிலளித்தார் வாத்தியார்.
*பெரும்பாலான வாசகர்கள் கேட்டது
"ரத்த படலம்" ஸ்டாக் இருக்கிறதா என்று...!(கிழிஞ்சது!)
*பழைய வாசகர்கள் பலர் இரும்புக்கை மாயாவியை
மறக்க முடியாமல் தவித்தார்கள்.STEEL CLAW IS A LEGEND !!!(கோவை மாயாவியைத்தான் காணோம்!)
*மறுபதிப்பு குறித்த பல கேள்விகளுக்கு ஆணித்தரமாக
மறுப்பு தெரிவித்த எடிட்டர்ஜீ ,மரியாதைக்குரிய அண்ணன் சேலம் கர்ணன்,மற்றும் நண்பர்
திருப்பூர் சிவ.சரவணக்குமார் ஆகியோரின் தொடர் வற்புறுத்தலால் "மின்னும் மரணம்"வண்ண
மறுப்பதிப்பு 2015 ஜனவரி வெளிவரும் என்ற அறிவிப்பை பலத்த கரகோஷத்திற்கிடையே வெளியிட்டார்.
*அடுத்த ஆண்டு வெளியீடுகள் குறித்து தமக்கு
நிறைய ஐடியாக்கள் உள்ளதாக கூறிய எடிட்டர்ஜீ ,கிரீன் மேனரின் அதிரடி வெற்றி தாமே எதிர்பாராத
ஒன்று என்றார்!!!
*டெக்ஸ் கதைகளில் கிட்டதட்ட 600 க்கும்
அதிகமான கதைகள் இருக்கும் நிலையில் மறுபதிப்பு என்ற பேரில் அரைத்த மாவையே தொடர்ந்து
அரைப்பது தமக்கு உடன்பாடல்ல என்றும் கூறினார்.
*கடைசி வரை நின்றுகொண்டே பேசினார்.உட்கார
சொல்லி வற்புறுத்தியபோது "நாங்கள்ளாம் கருஞ்சிறுத்தைங்க..ச்சும்மா கன் மாறி நிப்போம்
"என்று மறுத்தார்:)
*குழந்தைகளுக்காக குறைந்த விலையில் காமிக்ஸ்
வெளியிட திட்டம் இருப்பதாக கூறினார்.இந்த புத்தகங்கள் புத்தக கண்காட்சிகளை ஒட்டிய மாதங்களில்
வெளிவரக்கூடும் எனவும் தெரிவித்தார்.
*இரும்புக்கை மாயாவி,லாரன்ஸ்,டேவிட்,ஜானி
நீரோ,ஸ்பைடர்,ஆர்ச்சி போன்றோரின் சகாப்தம் முடிந்துவிட்டதாக கூறிய எடிட்டர்ஜீ ,காலத்திற்கேற்ப நாமும் நமது ரசனையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
*இரவு 9.30 க்கு ஸ்டால்கள் மூடும்வரை எடிட்டர்ஜீ
அரங்கிலேயே இருந்தார்.அவர் தங்கியிருந்த ஹோட்டல், புத்தக கண்காட்சி நடைபெற்ற வ.உ.சி.பூங்காவின்
வாயிலை ஒட்டியே இருந்ததால் இரவு வரை அவரோடு
பேசும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.அருகில் இருந்த ஒரு உணவு விடுதியில் எடிட்டரோடு
ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அவரை ஹோட்டலுக்கு நாங்கள் வழியனுப்பியபோது நேரம் இரவு 10.30 !!!
*இந்த எடிட்டர்ஜீ &வாசகர் சந்திப்பின்
மூலம் நமது காமிக்ஸ் உலகத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை!!!
வாழ்க நமது காமிக்ஸ்கள் !!! வாழ்க நமது
எடிட்டர்ஜீயின் காமிக்ஸ் சேவைகள்!!!
. அடியேனின் மெகா குடும்பம் -எடிட்டர்ஜீயுடன்!!!
வாழ்த்துக்கள் சாத்தான் ஜி..
ReplyDeleteபுத்தக திருவிழா வெற்றிகரமாக நடந்தேற உதவிய நண்பர்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள் ...
டியர் சாந்தன்!!!
Deleteநண்பர்கள் பலர் உங்களை பற்றி விசாரித்தார்கள்.we miss you !!!
புனித சாத்தான் அவர்களே,
ReplyDeleteஏதோ MAFIA GANG என்று எழுதி இருக்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சற்று விரிவாக விளக்குங்களேன்?
டியர் LFLP !!!
DeleteFACEBOOK -கில் எங்களை பற்றி ஒரு அன்பர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.அந்த பெயர் நன்றாக இருந்ததால் நாங்களே அதை வைத்துகொண்டோம் :-)
உள்ளேன் ஐயா
ReplyDeleteடியர் ஷல்லூம்!!!
Deleteவெல்கம் சார் ! அடிக்கடி அட்டெண்டன்ஸ் போடுங்கோ !!!