Friday, 1 August 2014

மிட்டாய் கடையில் ஒரு பட்டிக்காட்டான்!!!



ஈரோடு புத்தக விழா இன்று வெள்ளிக்கிழமை மாலை இசைஞானி இளையராஜா அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.அவருடைய பேச்சை கேட்க லேசான தூறல் மழையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க,புத்தகவிழா அரங்கம் வெறிச்சோடியிருந்த காட்சி இசைஞானி அவர்களை கோடம்பாக்கம் கைவிட்டாலும்  தமிழக மக்கள் இன்னும் ஓரங்கட்டி ஒதுக்கவில்லை என்பதை கட்டியம் கூறியது.

நமது காமிக்ஸ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஸ்டால் சென்ற ஆண்டு நமக்கு கிடைத்த ஸ்டாலை விட சற்றே அகலம்போல் தோன்றியது.அடியேன் ஸ்டாலில் அடிஎடுத்துவைத்தபோது நேரம் இரவு 8 மணி.ஈரோடு ஸ்டாலின் , ஈரோடு விஜய் ஆகிய காமிக்ஸ் பெருந்தலைகள் ஸ்டாலில் நின்றுகொண்டு கடலை போட்டுக்கொண்டிருந்தனர்.சிவகாசியிலிருந்து வந்திருந்த நமது லயன் ஊழியர்கள் குமார்,மற்றும் சங்கர் ராஜன் ஆகியோரிடம் அறிமுகப்படலம் முடிந்தபிறகு ஸ்டாலை நோட்டம் விட்டேன்.சென்ற ஆண்டு புத்தக விழாவில் இடம்பெற்ற புத்தகங்களின் எண்ணிக்கையைவிட இந்த ஆண்டு சற்று குறைவாக இருப்பதாக பட்டது. LMS -பண்டல் பிரிக்காமல் ஓரமாக (மறைவாக)வைக்கப்பட்டிருக்க கேலரிகளில் நமது காமிக்ஸ்களோடு மதியில்லா மந்திரியும்,லக்கி லூக்கும் ஆங்கிலம் பேசும் காமிக்ஸ்களும் இடம்பெற்றிருந்தன.இவற்றில் உள்ள பல கதைகள் நமது இதழ்களில் வெளியிடப்படாதவை என்பதால் நாளை LMS வெளியிட வருகை தரும் எடிட்டருக்கு நிச்சயம் நம்ம ஆட்கள் ஏராளமான கோரிக்கை மனுக்களை சமர்ப்பிப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இதோ இன்றைய தினத்தின் EXCLUSIVE புகைப்படங்கள்!











































நமது ஸ்டாலின் முதல் வாடிக்கையாளர்கள்.


நமது லயன் அலுவலக ஊழியர் சங்கர் ராஜன்.


மற்றொரு ஊழியரான குமாருடன் சங்கர் ராஜன்.



ஈரோடு ரஷ்ய சர்வாதிகாரி அண்ணன் ஸ்டாலின்.


பத்து ரூபா புக்குக்கு பத்து சதவிதம் தள்ளுபடின்னா...நூறு ரூபா புக்குக்கு நூறு சதவிதம் தள்ளுபடி தருமாறு கேட்டு சங்கர் ராஜனை கலாய்க்கும் நம்ம ரஷ்ய சர்வாதிகாரி!


குமார்,ஈரோடு விஜய்,ஈரோடு ஸ்டாலின் ஆகியோருடன் அடியேன்!

போட்டோவிற்கு போஸ் தராமல் டபாய்த்த ஈரோடு விஜயை வலுக்கட்டாயமாய் நிற்கவைத்து எடுத்த படம்.

18 comments:

  1. Replies
    1. Dear All

      The LION MAGNUM SPECIAL is Master Piece of Master ( Cinemvauku Oscar madri namma Comics ku ethachu Viruthu Iruntha atthai naan Namma LMS ku Koduka Sibarisuu Seikeraen )

      Sham 1881, Erode

      Delete
  2. நன்றி நண்பா

    ReplyDelete
  3. நன்றி நண்பா

    ReplyDelete
  4. நன்றி நண்பா

    ReplyDelete
  5. பிரிக்கப்படாமல் இருந்த LMS கட்டினை ஸ்கேன் செய்தாவது நம் எடிட்டர் வெளியுடுமுன் அட்டைப்படத்தை கோடு போட்டாவது காட்டி இருக்கலாம் !Jokes apart nice job! Keep Erode updates updated fast

    ReplyDelete
  6. Super, good pictures and comments. Please continue and if possible some video of LMS release and editor interview :)

    ReplyDelete
  7. நன்றி நண்பா

    ReplyDelete
  8. நன்றி நண்பரே. நாளைய தின நிகழ்வுகளின் தொகுப்பை (photo / video ) ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நம் இதழ்களின் தோரணங்கள் பழைய ஞாபகங்களை கிளறினாலும், சேதம் ஆகும் வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete
  9. நன்றிகள் பல ! ஆங்கில புக்ஸ் நம் ஸ்டாலில் இடம்பெறுவது இதுதான் முதல்முறையா ?

    அது ஈரோடு விஜயா ? அல்லது சிறு வயது ஆக்டர் சரத்குமார் குளோனா ?
    தொடரட்டும் உங்கள் நற்பணி :-)

    ReplyDelete
  10. LMS வெளியீட்டு வீடியோ மற்றும் போட்டோக்கள், நிகழ்வுகள் பற்றிய உங்களது

    எண்ணங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

    ReplyDelete
  11. அருமை நண்பரே
    வந்துகொண்டு இருக்கிறேன்

    ReplyDelete
  12. Mr. Saint Satan realy amazing our Lion Comic Crew member on today meeting.

    Sham1881, Erode.

    ReplyDelete