Saturday, 13 April 2013

மஞ்சளாய் ஒரு அசுரன்!!!


இன்றைய பஸிபிக் என்பது அப்படியொன்றும் முற்றிலும் பஸிபிக் அல்ல.நாம் (சீனா)எப்போது முழுமையாக அதை கைப்பற்றுகிறோமோ ,அப்போதுதான் அது உண்மையான பஸிபிக் ஆகும்
                                                    ____ மா-சே-துங்.

சமீப காலமாக உலகத்தின் ஆகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிகொண்டிருக்கும் நாடு வட கொரியா.கிழக்கு ஆசியாவில் ஜப்பானுக்கு மேற்கே மஞ்சள் கடலுக்கும்,ஜப்பான் கடலுக்கும் இடையே அமைந்துள்ள கொரிய தீபகற்பத்தின் வடக்கே சீன எல்லையோரம் இடம்பெற்றிருக்கும் வட கொரியா ஒரு கம்யூனிஸ பயங்கரவாத நாடாகும்.இந்த தேசம் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்கள் கொரியன் என்ற ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்.இந்த இனம் சீன புராதன பழங்குடி இனக்குழுக்களின் ஒரு கிளை இனமாக கருதப்படுகிறது.

5000ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரிய சாம்ராஜ்யம் பல்வேறு அரசுகளின் எழுச்சி,வீழ்ச்சிகளுக்கு பிறகு 1910ஆம் ஆண்டு ஜப்பானிய பேரரசின் ஆளுகைக்குட்பட்டது.இரண்டாம் உலக போரில் ஜப்பான் மண்ணை கவ்விய பிறகு ,அமெரிக்காவும்,சோவியத் யூனியனும் இந்த தீபகற்ப்பத்தை தங்களுக்குள் பங்குபோட்டு கொண்டன.தென் கொரியா அமெரிக்காவின் நண்பனாக,வட கொரியா சோவியத்தின் தோழனாகியது !!கம்யூனிஸ பயங்கரவாதத்தின் கீழ்வந்த வட கொரியா 1950ஆம் ஆண்டு தென் கொரியாவின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.பதிலடியாக அமெரிக்கா ஐ.நா.உதவியுடன் வட கொரியாவின் மீது போர்தொடுக்க ,மூன்றாண்டுகள் நீடித்த இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 25லட்சம்.பிறகு போர்நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டபோதும் உலகின்  மிக பதற்றம் நிறைந்த பகுதியாக கொரிய தீபகற்பம் விளங்கியது.

தோற்றத்தில் சீனர்களையும்,உயரத்தில் ஜப்பானியர்களையும் போலிருக்கும் இந்த கொரியர்கள் இப்போது உலகின் அரசியல் அதிகாரமட்டத்தில் மிக உயர்ந்த பீடத்தைவகிக்கிறார்கள் .ஐ.நா.பொது செயலர் திரு.பான்-கி-மூன் ஒரு கொரியரே.

வட கொரியாவில் தற்போது ஆட்சியில் உள்ள கிம்-ஜோங்-உன் (வயது 30.அடக்கடவுளே....ஓ ஸாரி...அட கார்ல் மார்க்ஸே)சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் தலைவராக பதவியேற்ற பிறகு இந்த பிராந்தியத்தில் போர்மேகம் சூழ ஆரம்பித்தது.இவரது தந்தை கிம்-ஜோங்-இல் ,தாத்தா இரண்டாம் கிம்-சுங் ஆகியோரும் சுப்ரீம் தலைவர்களாக இருந்தவர்கள்.(அடியேனின் கனவுக்கன்னி கிம் கர்டாசியானுக்கும்,இந்த கிம்-களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஹிஹி!!!)


        மனைவியுடன் வட கொரியாவின் சுப்ரீம் லீடர் கிம்-ஜோங்-உன்.
              

வடகொரியாவின் 2 கோடியே 30 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் டன் அரிசியும் தானியங்களும் தேவைப்படுகின்றன. விளைச்சல், தேவையைக் காட்டிலும் பலபடிகள் பின்தங்கியிருக்கிறது. இவ்வாண்டு ஜூலை மாதம் பெருகிய வெள்ளத்தில், ஒரு லட்சம் டன் அரிசியாக விளைந்திருக்கக்கூடிய பயிர்கள் மூழ்கிப்போயின. அதே மாதம் வடகொரியா ஏவுகணைச் சோதனைகள் நிகழ்த்தியது. இதனால், முன்னதாக ஐந்து லட்சம் டன் உணவுப் பொருளை வழங்க முன்வந்திருந்த தென் கொரியா அதை நிறுத்திவைத்தது.
1995இலிருந்து வடகொரியாவில் ஐ.நா.வின் உலக உணவுச் செயல் திட்டம் (World Food Programme - WFP) பணியாற்றிவருகிறது. இப்போது 13 ஆட்சிப் பகுதிகளில் (counties) 19 லட்சம் பேருக்கு உணவு வழங்கிவருகிறது கீதிறி. யூனிசெஃப் 2004இல் மேற்கொண்ட ஆய்வொன்று சுமார் 40% குழந்தைகளும் 30% தாய்மார்களும் கடுமையான ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. வார்விக் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹேஸல் ஸ்மித், வடகொரியாவின் அணு ஆயுத அரசியலால் அதன் உணவுப் பிரச்சினை உலக நாடுகளின் கண்களில் படுவதேயில்லை என்கிறார்.

1985இலேயே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) ஒப்பிட்டது வடகொரியா. ஆனால் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு 1992இல்தான் இணங்கியது. காரணம், அதுவரை அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தென்கொரியாவில் இருந்தன. அமெரிக்கா-வடகொரியா இடையே பரஸ்பர அவநம்பிக்கை தொடர்ந்தது. 1999இல் கிளின்டனின் அரசு ஒரு இணக்கமான சூழலுக்கு முயற்சித்தது. பொருளாதாரத் தடைகள் சிலவற்றை விலக்கிக்கொண்டது; மின் உற்பத்திக்கு வழிவகுக்கும் மென்னீர் அணு உலைகள் அமைத்துத் தரவும் முன்வந்தது. எனினும் இன்றுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
2001இல் ஜார்ஜ் புஷ் பதவியேற்றதும் அணுகுமுறை மாறியது. ஜனவரி 2002இல், வடகொரியா, ஈரான், ஈராக் ஆகியவை 'தீமையின் அச்சில் சுழலும்' நாடுகள் என்று சாடினார் புஷ். வடகொரியாவுடனான எல்லா நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டன. அவ்வாண்டு இறுதியில் போங்பியான் என்னுமிடத்திலுள்ள அணு உலையில் உற்பத்தி நடப்பது தெரியவந்தது. வடகொரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்தபோது, அது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வாளர்களை வெளியேற்றியது. அடுத்த கட்டமாக 2003இல் NPTயிலிருந்தும் வெளியேறியது. இதே ஆண்டு தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பரப்பில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது. இந்தச் சூழலில்தான் சீனாவின் முன் முயற்சியில் 2003 ஆகஸ்டில் ஆறு நாடுகளின் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது. இடைவெளிகள் நீடித்தபோதும் இது புதிய தொடக்கத்தைக் குறித்தது. 2004 பிப்ரவரியில் இரண்டாம் சுற்றும் ஜூனில் மூன்றாம் சுற்றும் 2005 ஜூலையில் நான்காம் சுற்றும் செப்டம்பரில் ஐந்தாம் சுற்றும் தொடர்ந்தன. ஐந்தாம் சுற்றின் முடிவில் அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக்கொண்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே கிளின்டன் அரசு வாக்களித்த மென்னீர் உலைகள் நிறுவப்பட வேண்டும் என்பதை ஒரு நிபந்தனை யாக வைத்தது. 2005 நவம்பரில் வடகொரியாவின் சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியபோது பேச்சுவார்த்தைகள் முறிந்தன.
அக்டோபர் 9 அன்று அணு ஆயுதச் சோதனையை 'வெற்றிகரமாக' நடத்தியது வடகொரியா. இப்போது சோதித்ததைப் போன்ற அணுகுண்டுகள் வடகொரியாவிடம் இன்னும் சில இருக்கலாம் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள். எனினும் அவற்றைச் செலுத்த வல்ல ஏவுகணைகள் அதனிடம் இல்லை. விமானங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஓரளவிற்கு முன்னதாகக் கண்டறிந்துவிட முடியும். ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தையும் ஆயுதங்களையும் வடகொரியா யாருக்கும் வழங்கலாம் என்னும் அச்சம் பல நாடுகளுக்கும் இருக்கிறது. அதுவே ஐ.நா.வின் தண்டனைத் தடைகளுக்குக் காரணம் எனலாம்.


        தலைநகர் ப்யாங் -யாங்கில் அணிவகுத்து செல்லும் வடகொரிய ராணுவம்.மாவோயிஸ்ட் சீனாவின் ஏவல்நாய்!!!


உள்நாட்டில் கடும் நெருக்கடி.பசி.பஞ்சம்.அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் பொருளாதார தடைகள் காரணமாக வட கொரியா மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது.முழுக்க ராணுவமயமான அரசு மக்களின் குறைந்த பட்ச தேவைகளை நிறைவேற்றக்கூட முடியாமல் திணறிவருகிறது.இந்நிலையில் தென் கொரியாவுக்கு எதிராக போர் பிரகடனம் ஒன்றை வட கொரியா வெளியிட்டிருக்கிறது.தனது நாட்டிலுள்ள அயல்நாட்டு தூதர்களை வெளியேறுமாறும் மிரட்டல் விடுத்துள்ளது.வட கொரிய எல்லையோர பகுதிகள் பெரும் பதற்றத்திற்கு ஆளாகியிருக்கிறது.

தென் கொரிய மக்கள் பொருளாதாரத்தில் மேலோங்கியிருப்பவர்கள்.சொகுசு கார்களில் வலம் வருபவர்கள்.ஹூண்டாய் போன்ற கார்களை தயாரித்து உலகம் முழுக்க ஏற்றுமதி செய்து வளம் கொழிப்பவர்கள்.ஆனால்,வட கொரியர்கள் ஓட்டை,உடைசல் சைக்கிள்களில் வலம் வருபவர்கள்.சிங்கிள் டீக்கே வழியில்லாமல் சிங்கி அடிப்பவர்கள்.வயிற்றுக்கு சோறில்லாமல் அலைபவர்களுக்கு எதற்கு அணுகுண்டு?..அணுகுண்டு தயாரிக்கும் காசில் மக்களுக்கு உணவளிக்கலாமே?என்றெல்லாம் யாரும் கேட்டுவிட கூடாது.சோஷலிச பொன்னுலக பூமியில் இம்மாதிரி கேள்விகேட்டால் அடுத்த நிமிடம் விண்ணுலகம் போய்சேரவேண்டியதுதான்.

யுத்ததிற்கு அமெரிக்காவும் தயார் நிலையில் உள்ளது.ஏற்கனவே தென் கொரியாவில் உள்ள படைகள் போர் ஒத்திகைகளில் ஈடுபட்டுவருகின்றன.போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று யுத்த நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.இருந்தும் தென் கொரிய மக்கள் பெரும் பீதியுடன் நடப்பதை கவனித்து வருகிறார்கள்.போரே வராது என்றும் சிலர் கருதுகின்றனர்.ஆனால்,நிலைமை படு மோசமாக மாறிவருவதால் யுத்தம் வெடிக்கும் அபாயம் குறைந்தபாடில்லை.

அதெல்லாம் சரி.இந்த விவகாரத்தில் சீனா ஏன் தொடர்ந்து மௌனம் சாதிக்கிறது.வட கொரியாவை ஏன் கட்டுப்படுத்த மறுக்கிறது என்று உங்களுக்கு தோன்றுகிறதா?அதுதான் மாவோயிசத்தின் மகிமை.இந்த பதிவின் முதல் வரிகளை மீண்டும் படியுங்கள்.காரணம் உங்களுக்கே புரியும்.

7 comments:

  1. பல விஷயங்களில் உங்களது கருத்தினை ஒத்திருக்கிறது என்னுடைய எண்ணங்கள்.

    இதிலும் அப்படியே

    ReplyDelete
    Replies
    1. டியர் கிங் விஸ்வா!!!

      நன்றிகள் பல நண்பரே! உளவுத்துறை ரகசிய தகவல் படி நாளை உங்கள் பிறந்தநாள் என அறிகிறேன்.வாழ்த்துக்கள் நண்பரே!
      (எந்த நாட்டு உளவுத்துறை என்று கேட்டுவிடாதீர்கள்.ஹிஹி!!!)

      Delete
  2. கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு மிஸ்டர் சாத்தான்?

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  3. டியர் சாத்தான்ஜி!

    உலக, நாட்டு நடப்புகளை நீங்கள் பிரித்து மேய்வதுதெல்லாம் நிச்சயம் என்னை வியப்பிலாழ்த்துபவையே!

    எனினும்,

    'மஞ்சளாய் ஒரு அசுரன்', 'ஒரு போராளியும், ஒரு கோமாளியும்' போன்ற காமிக்ஸ் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்து ஏமாறும் என்னைப் போன்ற ஒரு பாமர காமிக்ஸ் ரசிகனுக்கு இது ரசிக்கத்தக்க விசயமாக இல்லையே!

    சாத்தானின் இன்னொரு பக்கமான ஈடில்லா நகைச்சுவை உணர்வைக் காண முடியாமல் ஏங்கி போய்விட்டேன். இதுபற்றி தொலைபேசியில் உங்களிடம் பேசியதும் வீண் என்று இப்போது புரிந்து கொண்டேன்.

    காமிக்ஸ் உலகில் 'புனித சாத்தான்' அறியப்பட்டது அவரது நகைச்சுவை உணர்வால் அன்றி ரத்தம் தெறிக்கும் சமூக விவாதங்கள் அல்லவே?

    அவ்வகையில், நானும் ஏமாற்றத்துக்குள்ளானவனே!

    இதுதான் உங்கள் பாதை என்று புரிந்த பின்னும் உங்களிடம் எதிர்பார்த்துக் கிடப்பதில் நியாயமில்லைதான்!

    தொடருங்கள் உங்கள் பாதையை! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. //இதுபற்றி தொலைபேசியில் உங்களிடம் பேசியதும் வீண் என்று இப்போது புரிந்து கொண்டேன்//
    நேரில் பேசியே நடக்கல விஜய் :)

    இருந்தாலும் இப்படி ஒரு "காமெடி கர்னல்" தேவைதான் :)

    ReplyDelete
  5. டெக்ஸ் கதையில் வரும் வரலாற்று பின்னனியை இணைத்து ஒரு காமிக்ஸ் பதிவு போடலாமே சுவாரஸ்யமாக இருக்கும்

    ReplyDelete
  6. மூளையை கழற்றி வைத்துவிட்டவன் மட்டுமே கம்யூனிஸ்டாக முடியும்......சோஷியலிசத்தை கட்டி அழுத இந்தியா பல பத்தாண்டுகள் பின் தங்கியதுதான் மிச்சம்........

    இரண்டு உலகப்போர்களால் கொல்லப்பட்ட மக்கள் தொகையை விட , லெனின் , ஸ்டாலின் , மாவோ , போல்பாட் , மெங்கிஸ்டு கும்பலால் கொல்லப்பட்ட மக்கள் தொகை அதிகம்......

    இந்த நவீன காலத்திலும் சோஷியலிஸத்தை கட்டி அழும் காட்டுமிராண்டிகளை என்னவென்று சொல்வது..?

    ReplyDelete