Wednesday, 17 July 2013

பிர"பஞ்சத்தின் பிள்ளைகள்"...!!!

"ஜிப்ஸி"-இந்த வார்த்தையை கேட்டதும் நம்மில் பெரும்பாலோருக்கு நினைவுக்கு வருவது,இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த மாருதி நிறுவனத்தின் "ஜிப்ஸி"மாடல் கார்தான்.
                      நாஜிகளின் வதைமுகாமில்.......

"ஜிப்ஸி" என்ற பெயரில் ஒரு மக்களினம் வாழ்ந்து கொண்டிருப்பது நாம் அறியாத பல விஷயங்களில் ஒன்றாகும்.இந்த அறியாமைக்கு காரணம்,இந்த இனம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் ஒரு நாடோடி இனம்.தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கும் இம்மக்களை பயணியர் (TRAVELLARS)என்றும் அழைக்கின்றனர்.மனித இனம் தோன்றிய (!)நாளிலிருந்தே அவன் வாழ்விடம் நாடி பல்வேறு இடங்களுக்கும் பயணிக்க ஆரம்பித்தான்.நிலையான வாழ்விடம் ஒன்றை அவன் கண்டடைந்தபோது அங்கே குடியேற்றங்களை அமைத்து நிரந்தரமாக வாழ தொடங்கினான்.அதன் பிறகே நாகரிகமும்,அரசு அமைப்புகளும்,மதங்களும் தோன்றி மனிதன் அங்கே தொடர்ந்து வாழ்வதற்கான சூழல்களை ஏற்படுத்தின.இத்தகைய நிரந்தர குடியேற்றங்களை ஏற்காமல் சமுதாயத்தின் பிற பிரிவினரிடமிருந்து தங்களை முற்றிலும் விலக்கிக்கொண்டு ஊர் ஊராக,தேசம் தேசமாக பயணிக்கும் மக்களே பொதுவில் "நாடோடிகள்"என்றழைக்கப்படுகிறார்கள்.இத்தகைய நாடோடி இன மக்களே "ஜிப்ஸி" என அழைக்கப்படும் "ரோமா"இனத்தவர்.

                   ஐரோப்பிய ஜிப்ஸிகள்.....இந்திய சாயல் தெரிகிறதா.....?


"ஜிப்ஸி" -என்ற சொல் ஆங்கில மொழியில் எகிப்தியர்களை குறிக்கும் ஈஜிப்ஸியன் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது.தங்கள் நாட்டில் வாழ்ந்த நாடோடிக்கூட்டங்கள் எகிப்து தேசத்திலிருந்து வந்தவர்கள் என்று ஐரோப்பியர்கள் கருதியதால் இந்த பெயரை பயன்படுத்தினர்.
"ஜிப்ஸி" இனத்தவர் ஐரோப்பாவில் வாழும் வெள்ளையரல்லாத இனக்குழுவினர்.இந்த மக்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கும் குறைவான காலக்கட்டத்தில் ருஷ்யாவிலும் பிறகு ஐரோப்பாவிலும் குடியேறினர் என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.எனினும்,"ஜிப்ஸி"களிடம் "எழுதப்பட்ட வரலாறு"ஏதுமில்லை என்பதாலும்,அம்மக்கள் பேசும் "ரோமானி"இலக்கிய வளம் ஏதுமற்ற நாட்டுப்புற கொச்சை மொழி என்பதாலும் பெரும்பாலான வெள்ளையர்கள் இவர்களை "வந்தேறிகள்"என்றே கருதுகின்றனர்.வெள்ளை இன இலக்கியவாதிகள் பலரும் தங்கள் படைப்புகளில் "ஜிப்ஸி"களை நாகரிகமற்ற "காட்டுமிராண்டிகள்,திருடர்கள்,குழந்தை கடத்தல்காரர்கள்,குற்றப்பரம்பரையினர்"-என்றே இழிவாக விமர்சித்துள்ளனர்.ஐரோப்பாவில் வெள்ளை இனவாதம் தலைத்தூக்கும் போதெல்லாம் அதில் உடனடியாக பாதிப்புக்குள்ளாவது "ஜிப்ஸி" இனத்தவரே!

"ஜிப்ஸி" இனத்தவர் பல ஐரோப்பிய நாடுகளில் "ரோமா"என்றும்,வேறு சில நாடுகளில் "ஸிகானி"(CIGANY)என்றும் அழைக்கப்படுகிறார்கள்."ஸிகானி"என்ற பெயர் பழைய கிரேக்க,மற்றும் லத்தின் மொழியிலிருந்து வந்ததாகும்.இதற்கு "தீண்டத்தகாதவர்"என்று அர்த்தம்.ஐரோப்பா முழுவதுமே ரோமாக்கள் தீண்டத்தகாதவராகவே அடையாளப் படுத்தப்படுகின்றனர்.நகரங்களின் ஒதுக்கு புறங்களிலேயே இவர்கள் தங்கள் கூண்டு வண்டிகளில் வாழ்ந்து வருகின்றனர்.பில்லி சூனியம்,மந்திரித்தல்,பச்சைக்குத்துதல்,
ஜோசியம் பார்த்தல்,போன்றவை "ஜிப்ஸி" இனப்பெண்களின் தலையாய வேலைகள்.
"ஜிப்ஸி" இன ஆண்கள் இசை பாடுதல்,பாத்திரம் செய்தல்,அணிகலன்கள் உருவாக்குதல்,போன்ற வேளைகளில் ஈடுபடுகின்றனர்.சில "ஜிப்ஸி" குழுவினர் தெருவித்தை காட்டுபவராகவும்,சாலைகளில் ஓவியம் தீட்டுபவராகவும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.பெரும்பாலான ரோமாக்கள் கிருஸ்த்தவ மதத்தை பின்பற்றுகின்றனர்.

நீண்ட காலம் நாடோடிகளாக வாழ்ந்த ரோமாக்கள், எழுத்தைப் பயன்படுத்தும் பண்பாட்டுக்கு உரியவர்களாக இருக்கவில்லை. அதன் காரணமாகவே அவர்கள் தங்கள் வரலாற்றை ஆவணங்களாகப் பதிவு செய்யத் தவறினார்கள். ரோமாக்களின் பாரம்பரியத்தில் அதற்கான இடமில்லை.
கி.பி.  1000-ஆம் ஆண்டையொட்டிய காலத்தில் ரோமாக்கள், வெவ்வேறு வழிகளில் ஐரோப்பா வந்தடைந்தனர். அவர்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இருந்த தெளிவின்மை, ரோமாக்களை ‘ஏற்றுக் கொள்வதற்கு ஒரு தடையாக இருந்தது. ஜெர்மன்கள், கால்கள், ஆங்கல்கள் மற்றும் சாக்சன்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியையொட்டித் தங்கள் வருகைக்கும் ஆக்கிரமிப்புக்கும் நியாயம் கற்பித்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில் தமக்குரிய தேசிய துவக்கம் மற்றும் அதிகார அமைப்பை வலுப்படுத்தும் தொன்மங்களைக் கட்டமைத்துக் கொண்டார்கள். ஆனால் ரோமாக்களைக் குறித்த முதற்கதைகள் (legends) அவர்களின் தொலைதூரத் துவக்கங்களையும் குடியேறத் தவறியமையையுமே பேசின. ரோமாக்களின் வம்சாவளி குறித்த ஊகங்கள் அவர்களை வகைமைப்படுத்த முயன்ற முதல் முயற்சிகளுக்கு வழி செய்தன. ரோமாக்களே சொல்லிக் கொண்டதுபோல், ரோமாக்கள் கிறித்துவின் காலத்தில் எகிப்தில் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள் எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என்பதும் உண்மையாக இருந்தால், ‘எகிப்தியர்கள் தங்கள் மூதாதையர்களின் மண்ணான எகிப்துக்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்பது ரோமாக்கள் அழையாமல் குடிபுகுந்த ஐரோப்பிய தேசங்களின் வாதமாக இருந்தது.

அக்காலத்தில் அடிப்படைக் கேள்வியாக இருந்த சமயச் சார்புடன் ரோமாக்களின் பாரம்பர்யம் குறித்த விசாரணை நெருங்கிய தொடர்பு கொண்ட ஒன்றாகவும் இருந்தது. ரோமாக்களின் சமுதாய அமைப்பு திருச்சபை, பாதிரியார், தேவாலயம் என்ற வகையிலான நிறுவனப்படுத்தப்பட்ட கிருத்துவத்தைப் பின்பற்றுவதாயில்லை. எனவே ரோமாக்களின் சமயம் குறித்து மூவகைப்பட்ட நம்பிக்கைகள் தோற்றம் பெற்றன.
முதன்மையான நம்பிக்கை - ரோமாக்கள் கிறித்தவ நம்பிக்கைகளை மேம்பாக்காக மட்டுமே ஏற்றுக் கொண்டனர் என்பதாக இருந்தது. பரிசுப் பொருட்களையும் ஆவணங்களையும் பெற்றுக் கொள்ள பலமுறை ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதை ரோமாக்கள் வழக்கமாக வைத்திருந்தனர் என்று மார்டின் லூதர் உட்பட பலரும் நம்பினார்கள். ரோமாக்கள் துருக்கிய உளவாளிகள் என்ற குற்றச்சாட்டு இரண்டாம் வகை நம்பிக்கைக்கு ஆதாரமாக இருந்தது. இதனால் ரோமாக்கள் இஸ்லாமியர்களாகக் கருதப்பட்டனர். மூன்றாம் வகை நம்பிக்கை மிகத் தீவிரமானது. ரோமாக்கள் தெய்வநம்பிக்கையற்றவர்கள் (heathen), சாத்தான் சடங்குகளை ரகசியமாக நிகழ்த்தி வழிபட்டனர் என்ற நம்பிக்கைதான் அது. ரோமாக்களின் குறிசொல்லல், மருத்துவ மந்திரங்கள் மற்றும் சபித்தல்கள் போன்றவை  இதற்கான ஆதாரங்களைத் தருவதாக எண்ணப்பட்டது. இதே காரணங்களை முன்வைத்து, மனிதர்களை உண்பவர்கள் என்ற குற்றச்சாட்டு ரோமாக்களின் மீது திரும்பத் திரும்ப சுமத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும் இந்த மூன்று ஊகக் கருத்துகளும் (theories) நம்பிக்கைக்குரியனவாக இருந்தன.

ஆனால் இந்த மூன்று நம்பிக்கைகளையும் விட அறிவியலுக்கு நெருக்கமான நான்காவது காரணம், ரோமாக்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்பது!!!பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்தியாவின் புராதன மொழியான சமஸ்கிருதத்திற்கும்,ஐரோப்பிய தொல் மொழிகளான கிரேக்கம்,லத்தின் ஆகிய மொழிகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதை கண்டனர்.
"ஜிப்ஸி"கள் பேசும் ரோமானி மொழி சமஸ்கிருதத்தோடு அதிகம் இணக்கமாக இருப்பதை அறிந்தனர்.இந்த ஆராய்ச்சியின் தொடர் விளைவாக "ஜிப்ஸி"களின் பூர்விகம் இந்தியா என்பது புலனாகியது!!!
               ஜிப்ஸி பெண்கள்தான் எவ்வளவு அழகு....ஹிஹி!!!

கி.பி.10ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறங்களில் ஏராளமான இந்தோ-ஆரிய நாடோடி கூட்டங்கள் வாழ்ந்துவந்தனர்.இந்தியாவின் உட்பகுதிகளில் வாழ்ந்த மக்களோடு சிறிதும் தொடர்பில்லாத இந்த நாடோடி இனங்கள் கஜினி முகம்மதுவின் அலை அலையான தொடர் படையெடுப்புகளை தாக்கு பிடிக்க முடியாமல் சிதறி ஓட்டம் பிடித்தனர்.ஒரு பிரிவினர் வட  திசையில் பிரயாணித்து ருஷ்யாவை அடைந்தனர்.அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்தனர்.இவர்களே இன்றைய ரோமானி,ஸிகானி என்றழைக்கப்படும் "ஜிப்ஸி" இன மக்கள்!!!
கஜினி முகம்மதுவின் படையெடுப்புகளை தொடர்ந்து எதிர்கொண்ட நாடோடி இந்தோ-ஆரிய குழுக்களின் மற்றொரு பிரிவினர் இந்தியாவின் உட்பகுதிகளில் ,குறிப்பாக பஞ்சாப்,ராஜஸ்தான் மற்றும் கங்கை சமவெளிகளில் குடியேறினர்.தங்கள் நாடோடி வாழ்க்கையை துறந்து விவசாயம் செய்து அப்பகுதிகளில் பெரும் செல்வாக்கான உயர் அந்தஸ்தையும் பெற்றனர்.தங்கள் பூர்விக சமயங்களை கைவிட்டு சைவ,வைணவ நெறிகளையும்,பிற்காலத்தில் சீக்கிய நெறிகளையும் தழுவினர்.பல்வேறு நாடோடி குழுவாக பிரிந்திருந்தவர்கள் ஒரே இனமாகவும் அணி சேர்ந்தனர்.
இம்மக்களே இன்றைய வடஇந்திய மாநிலங்களில் வசிக்கும்,அனைவராலும் மிக உயர்வாய் மதிக்கப்படும் ஜாட் (JATT)இன மக்கள்!!!

15 comments:

 1. இந்த பதிவை "பஞ்சாப் தா புத்தர்" தர்மேந்திராவுக்கு மொழி பெயர்த்து அனுப்ப ஆவன செய்யப்படும்.

  ReplyDelete
  Replies
  1. டியர் கிங் விஸ்வா !!!
   நல்லவேளை.தப்பித்தேன்.தயவு செய்து ஓம்பிரகாஷ் சௌதாலா-வுக்கு அனுப்பிவிடாதீர்கள்:-)

   Delete
 2. லயன் வலைப்பூவில் இவர்களுக்கும் இந்தியாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பதிவு செய்துள்ளீர்கள் ., ஆனால் இங்கு அவர்களின் பிறப்பிடமே இந்தியாதான் என்று கூறிஉள்ளீர்கள்.

  இந்த பதிவுக்கு நீங்கள் வைத்துள்ள தலைப்பு கருத்துள்ளதாக இருக்கின்றது .

  ReplyDelete
  Replies
  1. டியர் மீரான்!!!
   தற்போதைய ஜிப்ஸிகளுக்கும்,இந்தியாவுக்கும் சம்பந்தம் கிடையாது என்றுதான் எழுதியிருந்தேன்.ஜிப்ஸிகளின் புராதன தொடக்கம் இந்தியாவே!!!

   Delete
 3. டியர் சாத்தான் தாத்தா,

  நல்ல பதிவு! நான் லயன் ப்ளாகில் ஜிப்ஸிகள் பற்றி உங்களிடம் கேட்டிருந்த கேள்விக்கு உடனே எந்த பதிலும் வராததால், விக்கியில் விடை பெற்றேன்! நீங்கள் பதிலை பதிவாகவே போட்டு விட்டீர்கள்!!

  //சாத்தான் சடங்குகளை ரகசியமாக நிகழ்த்தி வழிபட்டனர் என்ற நம்பிக்கைதான் அது//
  அடப் பாவமே!!! :)

  //ஜிப்ஸி பெண்கள்தான் எவ்வளவு அழகு....ஹிஹி!!!//
  அப்புறம் இன்னொரு டவுட்டு: நடிகை டாப்ஸி, ஜிப்ஸி இனத்தை சேர்ந்தவரா?! :)

  ReplyDelete
  Replies
  1. // நடிகை டாப்ஸி, ஜிப்ஸி இனத்தை சேர்ந்தவரா?! :) //

   இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர்களுக்கு (புனித சாத்தானாக இருந்தாலும்) ஒரு கப் 'நல் நேர நஞ்சு' வலுகட்டயாமாக வாயில் ஊற்றப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் :)

   Delete
  2. டியர் கார்த்திக் அங்கிள்!!!
   நீங்கள் குறிப்பிட்ட நடிகையின் பெயர் டாப்ஸி அல்ல.அந்த பெயரின் உச்சரிப்பு தபஸி.
   அந்த பஞ்சாபி அம்மையார் ஒரு ஜிப்ஸியா என்பது பற்றி நம்ம "பஜ்ஜி"இடம்தான் கேட்கவேண்டும்:-)

   Delete
 4. //டியர் சாத்தான் தாத்தா,//

  அச்சச்சோ, அங்கிள் கூட பரவாயில்லை (அதை தமிழ் படுத்தி மனதை தேத்திக்கலாம்).

  ஆனால் தாத்தா?

  ஓ மை காட், அப்போ உங்களுக்கும் உண்மை தெரிந்து விட்டதா?

  ReplyDelete
  Replies
  1. டியர் கிங் விஸ்வா !!!

   கார்த்திக் அங்கிள் அடியேனை செல்லமாக "தாதா" என்று கூப்பிட்டார்.உங்கள் காதில் "தாத்தா" என்று விழுந்துவிட்டது:-)

   Delete
  2. அவர் உண்மையில் தாத்தா என்றுதான் சொன்னார்


   உங்கள் காதில்தான் தாதா என்று தவறாக கேட்கப்பட்டு இருக்கிறது

   Delete
  3. @King Viswa:
   //ஓ மை காட், அப்போ உங்களுக்கும் உண்மை தெரிந்து விட்டதா?/
   அதான் அவரைப் ஏறிட்டுப் பார்த்தாலே உண்மை தெரிந்து விடுமே!!! :D

   நண்பரே, இங்கே நீங்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்! தபஸி என்ற யெளவன யுவதியை, "அம்மையார்" என்று அழைக்கும் நிஷ்டூர நெஞ்சம் படைத்தவர் நம் சாத்தான் தாத்தா அவர்கள்! அப்படிப்பட்ட அவர், என்னை "அங்கிள்" என்று அழைப்பதை வைத்தே எனக்கு தபஸியை விட வயது மிகவும் குறைவு என்பதை நீங்கள் எளிதில் கணிக்கலாமே?! :) :)

   Delete
  4. ///தபஸி என்ற யெளவன யுவதியை, "அம்மையார்" என்று அழைக்கும் நிஷ்டூர நெஞ்சம் படைத்தவர் நம் சாத்தான் தாத்தா அவர்கள்!///
   யாரங்கே!!!உடனடியாக கைக்குட்டை ஒன்றை கொண்டுவாருங்கள்.முகத்தில் வழியும் அசடை துடைத்துகொள்ளவேண்டும்.ஹிஹி!!!

   Delete
 5. டியர் சாத்தான் , வணக்கம்
  உங்கள் பதிவு அருமை. வரலாற்றின் பால் மிகுந்த ஆர்வம் காடும் உங்களுக்க இந்த லிங்க்
  http://www.stephen-knapp.com/aryan_invasion_theory_the_final_nail_in_its_coffin.htm
  மீண்டும் சந்திப்போம் . : )

  ReplyDelete
  Replies
  1. டியர் விஸ்கி-சுஸ்கி !!!
   நன்றி நண்பரே!!!
   நீங்கள் சிபாரிசு செய்த ஆங்கில கட்டுரையை எழுத்துக்கூட்டி படித்துவருகிறேன்.அநேகமாக படித்துமுடிக்க இருபது அல்லது இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகும்போலிருக்கிறது:-):-)

   Delete
 6. நண்பர் புனித சாத்தான் அவர்களே ....

  ஈரோடு புத்தக திருவிழா தொடக்க நாள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை வரலாம் என்று இருக்கிறேன்.

  தொடக்க விழாவில் கலந்து கொள்ள வருவீர்கள் அல்லவா ?

  சநதிப்போம் :)

  ReplyDelete