Saturday 2 August 2014

மிட்டாய் வாங்கலியோ மிட்டாய்...!!!






வாழ்க்கையில் நினைத்து நினைத்து மகிழும் அற்புத தருணங்கள் நம்மில் யாருக்கும் அடிக்கடி சித்திப்பதில்லை.அப்படியொரு உன்னத தருணத்தை லயன் மேக்னம் ஸ்பெசல் வெளியீட்டில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.அந்த தருணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

மகத்தான அந்த விழாவின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே அப்டேட் செய்துள்ளேன்.நேரமின்மையால் நண்பர்களின் பெயர்களை சேர்க்கவில்லை.நாளையும் புத்தக திருவிழாவில் எடிட்டர்ஜீ பங்கேற்பதால் நாளை மறுநாள் திங்கள் கிழமை முழுமையான ஒரு அப்டேட்டை இங்கே போடுகிறேன்.நன்றி நண்பர்களே!!!


எடிட்டர் :  என்னது...? இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் வேணுமா...? ஸாரி .ராங் நம்பர்.


சேலம் கார்த்திக் : "எங்கள் குடும்பம் காமிக்ஸ் குடும்பம்".






நண்பர்கள் ஈரோடு ஸ்டாலின்,மயிலாடுதுறை ராஜா,சேலம் டெக்ஸ் விஜயராகவன்.




எடிட்டருடன் அண்ணன் சேலம் கர்ணன்.


இந்த படை போதுமா...? இன்னும் கொஞ்சம் வேணுமா...?


ஜூனியர் டாம் க்ரூசுடன் சீனியர் டாம் க்ரூஸ் ( நண்பர் செந்தில் மாதேஷ் )


கிங் விஸ்வா :  இந்த வாரம் பூரா ரொம்ப பிஸி.நாளைக்கு அமெரிக்க பிரதமரோட ஒரு மீட்டிங்.ரெண்டு நாள் கழிச்சு இங்கிலாந்து ஜனாதிபதியோட பர்த்டே பார்ட்டி.அடுத்த வாரம் போப்பாண்டவரோட ஒரு பேட்டி.ஒரே குஷ்டமப்பா...ச்சீ...கஷ்டமப்பா.
பாரதி நந்தீஸ்வரன் :  நீங்க எப்பவுமே இப்படியா...இல்ல இப்படித்தான் எப்பவுமேவா...?


வாசகர் : விஜயன் ஸார்.இரும்புக்கை மாயாவி கதைங்களை மறுபடியும் போடுங்க.
எடிட்டர் :  ரொம்ப ஸாரி ஸார்.நான் விஜயன் இல்லை.அவரோட ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட தாத்தாவோட கொள்ளுப்பாட்டிக்கு மச்சினனோட எள்ளு பேரன்.


"உள்துறை அமைச்சருடன்" மனோரமா ரசிகர் மன்ற தலைவர் ஷல்லூம் ;-)




எடிட்டரிடம் புத்தகம் பெரும் நண்பர் நாகராஜன் சாந்தன்.(திருப்பூர் ப்ளூபெர்ரி).




எடிட்டரிடம் புத்தகம் பெரும் நண்பர் ஸ்டீல் க்ளா.(பொன்ராஜ்).


நண்பர்கள் வினோஜ்,அஹ்மெத் பாட்ஷா,பிரசன்னா.


நண்பர்கள் ஸ்டீல் க்ளா,கிங் விஸ்வா,ஆடிட்டர் ராஜா.


எடிட்டர் : ஏம்பா விக்ரம்.ரத்த படலம் ரீப்ரிண்ட மாசம் ஒண்ணுன்னு 18 மாசம் போடலாமா...? இல்ல மாசம் ரெண்டுன்னு 9 மாசம் போடலாமா...? இல்ல மாசம் மூணுன்னு 6 மாசம் போடலாமா...?இல்ல மாசம் நாலுன்னு 4 மாசம் போட்டு மிச்ச 2 கதைய அஞ்சாவது மாசம் போடலாமா...?இல்ல மாசம் அஞ்சுன்னு 3 மாசம் போட்டு மிச்ச 3 கதைய நாலாவது மாசம் போடலாமா...?இல்ல மாசம் ஆறுன்னு 3 மாசம் போடலாமா...?இல்ல மாசம் ஏழுன்னு 2 மாசம் போட்டு மிச்ச 4 கதைய மூணாவது மாசம் போடலாமா...?இல்ல மாசம் எட்டுன்னு 2 மாசம் போட்டு மிச்ச 2 கதைய மூணாவது மாசம் போடலாமா...?இல்ல மாசம் ஒம்பதுன்னு....
ஜூனியர் எடிட்டர் : அய்யய்யோ...எங்க அப்பாகிட்டேருந்து யாராவது என்னை காப்பாத்துங்களேன்...ஹெல்ப்...ஹெல்ப்... 















புத்தகவிழாவில் மாலையில் பங்கேற்ற நண்பர் திருப்பூர் சிபிசிபி அவர்களின் பிறந்தநாள் இன்று என்பதால் அவருடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி நண்பர்கள் தூள் கிளப்பிவிட்டார்கள்.












14 comments:

  1. நன்றி ! நேற்றைய அலுப்பு தீர ஓய்வு எடுத்தபின் பெயர்களை வெளியிடவும் !.........

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ்்வாழ்க்கையில் நினைத்து நினைத்து மகிழும் அற்புத தருணங்கள் நம்மில் யாருக்கும் அடிக்கடி சித்திப்பதில்லை.அப்படியொரு உன்னத தருணத்தை லயன் மேக்னம் ஸ்பெசல் வெளியீட்டில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.அந்த தருணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.்்்

    மேற்கூறிய வரிகள் சத்தியம் சார் ! அதை அதிகம் உணர்தவன் நானாகத்தான்
    இருப்பேன்.
    ஸ்டாலின் சாரின் பதிவும் உங்கள் பதிவும் படங்களும் பார்த்தபின் நேற்றைய
    உணர்வுகள் உற்சாகங்கள் ,சிரிப்பொழிகள் ,சந்தோசங்கள் ,மீண்டும் தொடர்கின்றன சார்!

    நாம்மை இனைத்த காமிக்ஸ் வாழ்க !

    ReplyDelete
  4. Dear All,

    Nic Pixures, with very beutiful time ( I think Life is Beutiful when v r in our Lovable Frienz )

    Sham 1881, Erode.

    ReplyDelete
  5. நன்றி நண்பர்களே!விரைவில் முழுமையான அப்டேட் ஒன்றை பதிவிடுகிறேன்.தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ! அறிய தருணங்களின் நினைவுகள் கண் முன்னே ! சீக்கிரம் நண்பர்களின் பெயர்களை வெளியிடுங்கள் ! நானும் கட்டுரை தயாரிக்க !

      Delete
  6. சார்,

    அந்த “விரைவில், விரைவில்” அப்படின்னு சொல்றீங்களே, அந்த “விரைவில்” எப்ப சார் வரும்?

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வரும் ;-)

      Delete
  7. த்ு


    ithukku andha viraivil varaamaleye irundhu irukkalaam.

    ReplyDelete
  8. நகைக்க வைக்கும் போட்டோ கமெண்ட்ஸ் .......:-)

    ReplyDelete