பாகிஸ்தான் என்ற பூலோக நரகத்தில் கடந்த
இருபது ஆண்டுகளாக அடைபட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங் அந்நாட்டு உளவு கொலை படைகளால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.சக
கைதிகள் இருவர் அவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்று உணர்வு திரும்பாத
நிலையில் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனைக்குரிய சம்பவம்.தொட்டதற்கெல்லாம் "மனித
உரிமை"என்று ஓலமிடும் முற்போக்கு மொக்கைகள் எவனும் இந்த படுகொலையை பற்றி வாயை
திறக்காமல் மௌனம் சாதிப்பது அவன்களின் யோக்கியதையை நன்றாக அம்பலப்படுத்துகிறது.அப்பாவிகள்
கொல்லப்பட்டால் அது சாதாரண விஷயம்.பயங்கரவாதிகள் கொல்லப்பட்டால் அது மனித உரிமை மீறல்.இதுதானே
இந்த "தீரா"விட ,தலித்திய, பொதுவுடைமை,மாவோயிஸ கும்பல்களின் தாரக மந்திரம்!!!
ஒரு சீக்கியர் பிரதமராயிருந்தும் சீக்கியரான
சரப்ஜித் சிங்குக்கு எந்த உபயோகமும் இல்லை.ஒரு சீக்கியன் ஒன்றேமுக்கால் லட்சம் வீரர்களுக்கு
சமம்.நமது புண்ணியவான் டாக்டர் மன்மோகன்சிங் கோஹ்லி அவர்களோ,ஒன்றேமுக்கால் லட்சம் கோடி
ஊழல் செய்தவர்களை சமமாக கொண்டவர்.இப்படியாகப்பட்டவரின் தலைமையில் இந்நாடு தொடர்ந்து
ஆளப்பட்டால் அது சீக்கிய மதத்துக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பெரும்
அவமானமாகிவிடும்.அடியேனை பொறுத்தவரையில் சரப்ஜித் சிங்குக்கு பாகிஸ்தானியரை
விட மன்மோகன் சிங் போன்ற அல்லக்கைகளே உண்மையான
வைரிகள்!!!
பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த
சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்!!!
வாஹ் குருஜீ தீப்தக்!!! வாஹ் குருஜீ கால்சா!!!
டியர் செயின்ட் சாத்தான்,
ReplyDeleteஇதைவிட கொடுமை என்னவென்றால் சரப்ஜித் சிங் ஒரு இந்திய உளவாளி என்றே சந்தேகிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுவரையில் இந்திய உளவுத்துறை அவரைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை
சரி அவர் தவறாக உளவாளி என்று சந்தேகிக்கப்பட்டார் என்றால், நமது நாட்டின் அயல்துறை அமைச்சகம் என்ன செய்துக்கொண்டு இருந்ததாம்?
டியர் செயின்ட் சாத்தான்
ReplyDeleteமற்றபடி, இந்த மனித நேயம், மனித உரிமை, தூக்கு தவறு என்று பேசுபர்களை பற்றி பேசி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாமே?
டியர் கிங் விஸ்வா!!!
Deleteசரப்ஜித் சிங் ஒரு சாதாரண விவசாயி.அவர் உளவாளியாக இருக்க வாய்ப்பேயில்லை. சீக்கியர் மத்தியில் "காலிஸ்தான்"பிரிவினையை தூண்டிவிட்டு அதில் தோல்விகண்ட பாகிஸ்தான் பிறகு அவர்களையும் "ஹிந்து"க்களை போல் எதிரிகளாக பார்க்க ஆரம்பித்தது.இன்றைய பாகிஸ்தானில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இருப்பதாக தெரியவில்லை.இதுபோன்ற ஒரு நாட்டோடு "பேச்சுவார்த்தை"நடத்தவேண்டும் என்று இங்கு சில "முற்போக்கு"கள் பேசிவருவதுதான் அடியேனுக்கு ஆத்திரமூட்டுகிறது.
டியர் நல்ல பிசாசு,
Deleteசாப்பிட்டது ஜீரணம் ஆக
சிலர் மாத்திரை சாப்பிடுவார்கள்,
சிலர் வாக்கிங் போவார்கள்.
சிலர் முற்போக்கு சிந்தனையை பற்றி பேசுவார்கள்.
முடிவு ஒன்றுதான்
டியர் செயின்ட் சாத்தான்,
ReplyDeleteஇந்த "வைரி" என்கிற சொல்லாடலை படித்து / பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது? கடைசியாக மாலைமதி காமிக்ஸ் ஒன்றில் பார்த்தேன்.