Friday, 31 May 2013

உலக பயங்கரவாதிகளே!!!ஒன்றுபடுங்கள்!!!எனதருமை பயங்கரவாத பெருமக்களே!!   தீவிரவாதிகளே!!   நிழலுலக மாபியாக்களே !!
மத அடிப்படைவாத சகோதரர்களே!!  சமதர்ம தோழர்களே!!  உங்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறோம்.

இன்றைய தினம் உலக மக்களின் நலனுக்காக அல்லும்,பகலும் உழைக்கும் நம்மை போன்ற பயங்கரவாத சகோதரர்கள் இங்கே ஒன்றுகூடி ,நமது எதிர்கால திட்டங்களையும்,லட்சியங்களையும்,செயல்பாடுகளையும் தீர்மானிக்க இருக்கிறோம்.பயங்கரவாதிகள் என்றாலே ஏதோ கிள்ளுக்கீரை என நினைத்து நம்மை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் இன்று "லபோ திபோ"என்று வாயிலும்,வயிற்றிலும் அடித்துக்கொண்டு கூப்பாடுபோடும் அவலத்திற்கு ஆளாக்கிய பெருமை நமக்கு உண்டு.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "மக்கள் விரோத"அரசுகள் நம்மை கண்டு மிரண்டு செய்வதறியாது திகைக்கின்றன.ஊடகங்கள் நடுங்குகின்றன.

குண்டு வைத்து தகர்ப்பது,துப்பாக்கியால் சுட்டு தாக்குவது,மனித வெடிகுண்டாக வெடிப்பது போன்ற "தியாக"செயல்களில் ஈடுபடும் நமக்கு இந்த உலகம் என்ன கைமாறு செய்திருக்கிறது?நமது தோழர்களை "என்கௌண்டர்"என்ற பெயரில் சுட்டுக்கொல்லும் "கொடுமை"தான் இந்த உலகம் நமக்கு தந்த கைமாறு !!!

இந்தியா என்ற பெயரில் ஒரு சோப்ளாங்கி நாடு இருக்கிறது.கடந்த இருபது,முப்பது ஆண்டுகளாக அந்த நாட்டை நமது தோழர்கள் குத்தகைக்கு எடுத்து "பயங்கரவாத"தொழில் நடத்தி வருகிறார்கள்.ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக்கொன்று அந்நாட்டின் மக்கள் தொகையை குறைக்க அரும்பாடு பட்டு வருகிறார்கள்.போலீஸ் வாகனங்களை கண்ணிவெடி வைத்து தகர்த்து போக்குவரத்து நெரிசலை குறைத்து வருகிறார்கள்.ஏராளமான குண்டுவெடிப்பை நிகழ்த்தி அரசுக் கட்டிடங்களையும்,பொது சொத்துக்களையும் தகர்த்து கட்டுமான தொழிலாளர்களுக்கு "புதிய வேலை வாய்ப்பை "பெற்று தந்திருக்கிறார்கள்.அந்நாட்டு அரசும் சரி.அதிகார வர்க்கமும் சரி.நம்மை தங்கள் "உடன்பிறப்பு"க்களாகவே கருதி இன்று வரை நமக்கெதிராக எந்தவொரு உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்காமல் நம்மோடு இணக்கமாக நடந்துவருவதால் இன்னும் பல வருடங்கள் நமது தொழில் சிறப்பாக நடக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.எனவே,நமது அயல்தேச தோழர்கள் தங்கள் தொழிலை சிறப்பாக நடத்த இந்தியா போன்ற நாடுகளை அணுகினால் சிறப்பான எதிர்காலம் அவர்களுக்கு கிட்டும்.

அமெரிக்காவும்,இஸ்ரேலும் தான் நமது ஜென்ம விரோதிகள்.நாம் அவர்களில் ஒருவரை கொன்றால்,பதிலுக்கு நமது தோழர்கள் ஆயிரம் பேரையாவது சாகடித்து வெறியாட்டம் போடுகிறார்கள்.மனித தன்மையே சிறிதும் இல்லாத இவ்விரு நாடுகளும் இந்தியாவை பார்த்தாவது அஹிம்சையையும்,மனித நேயத்தையும் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒரு குண்டு வெடிப்பை நடத்த நாம் எவ்வளவு பாடுபடுகிறோம் என்பதை இந்த சமூகம் சிந்திக்க வேண்டும்.குண்டு வெடித்தவுடன் அறிவுகெட்டத்தனமாக அதில் சிக்கி பலர் மாண்டு போகிறார்கள். படுகாயத்தோடு உயிர் தப்பி "இழப்பீடு"பெற்று ,அடுத்த குண்டு வெடிப்பில் சாகும் வரை வாழும் அதிர்ஷ்டம் சிலருக்கு கிடைக்கிறது.இறந்தவர்கள் பற்றியும்,காயமடைந்தவர்கள் பற்றியும் விசாரப்படும் இந்த சமுதாயம் ,குண்டு வைத்த நமது தோழர்கள் பற்றியோ,அவர்களின் இலட்சியங்கள் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.ஏனிந்த பாரபட்சம்...?நாங்களெல்லாம் மனிதர்களில்லையா...?

முதலில் எங்களை பற்றிய எதிர்மறை சிந்தனைகளை கைவிடவேண்டும்.விபச்சாரம் செய்பவர்களை "பாலியல் தொழிலாளர்கள்"என்று அழைப்பதைப்போல் ,பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எங்கள் தோழர்களை "குற்றவியல் தொழிலாளர்கள்"என்று அழைக்கவேண்டும்.
எங்களுக்கென்று "நல வாரியங்கள்"உருவாக்கப்படவேண்டும்.அரசுப்பணிகளில் பிற்ப்படுத்தப்பட்ட,மிக பிற்ப்படுத்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு "இட ஒதுக்கீடு"செய்யவேண்டும்.நலிவுற்ற மூத்த பயங்கரவாதிகளுக்கு பென்ஷன் வழங்கவேண்டும்.மனித வெடிகுண்டாக செயல்பட்டு தங்கள் இன்னுயிரை ஈந்த பயங்கரவாத "தியாகி"களுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும்.மேற்கண்ட எங்கள் கோரிக்கைகள் நிறைவேற அனைத்து  "மத சார்பற்ற"சக்திகளும் அரசுக்கு வலியுறுத்தவேண்டும்.

இறுதியாக ,எங்களோடு நேரடியாக களமிறங்காவிட்டாலும் ,எங்கள் லட்சியங்களுக்கு ஆதரவாக எப்போதும் செயல்படும் மனித உரிமைவாதிகள்,பகுத்தறிவுவாதிகள்,சமதர்மவாதிகள்,தலித்வாதிகள்,பெண்ணுரிமைவாதிகள் ஆகியோருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
உங்கள் ஆதரவோடு எங்களின் லட்சிய பயணம் ஓயாமல் தொடரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
  

தோரா-போரா பள்ளத்தாக்கிலும்,முள்ளி வாய்க்காலிலும் நம்மை வீழ்த்திவிட்டதாக கொக்கரிக்கும் குள்ள நரிகளின் கொட்டத்தை ஒடுக்க சிறுத்தையென சீறி பாய்ந்திடுவோம்.
வாருங்கள் தோழர்களே!!    எதிர்கால உலகம் நமது கையில்!!


உலக பயங்கரவாதிகளே,ஒன்றுபடுங்கள்!!! இழப்பதற்கு நம்மிடம் ஒன்றுமில்லை!!! ஒழித்துக்கட்டுவதற்க்கோ இந்தியா இருக்கிறது!!!

1 comment:

  1. தேசவிரோத சக்திகளால் தூண்டப்பட்ட மக்கு மாணவர் கும்பல் போரடிய போது எச்சரித்த நம்மைப்போன்றவர்களை தமிழர்விரோதிகள் என்னும் அளவுக்கு பிரச்சாரம் நடந்தது...... இன்று செபஸ்டியன் சைமன் [ சீமான் ] யாசின் மாலிக்கை அழைத்து வந்து கூட்டம் போடுகிறான்......இனி இந்த சோ கால்டு தமிழின ஆர்வலர்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்வார்களாம் ?

    அப்ப‌டியே இந்த தள‌த்தையும் கொஞ்சம் பாருங்கள்.....http://hayyram.blogspot.in/

    ReplyDelete