ஜோசப் கோயபல்ஸ்
ரீச் மார்ஷல் ஹெர்மன் கோயரிங்குடன் ஒரு உற்சாக அரட்டை!!!
அண்ட புளுகன் ,ஆகாச புளுகன் என்றெல்லாம்
,நம்ம ஊரில் பொய் பேசி திறிவோரை "புகழ்ந்து"பல பட்டங்களை வழங்கி அம்மாதிரியானவர்களை
கொண்டாடுவது நமக்கு பழக்கமாகிவிட்டது.பொய் பேசுவது ஒரு கலையாகவே மதிக்கப்படும் அளவுக்கு
பிரதம மந்திரி முதல் பீட்சா டெலிவரி பாய் வரை நமது புண்ணிய பாரத தேசத்தில் அனைவரும்
புளுகோ புளுகென்று புளுகி தள்ளுகிறார்கள்.வாயை திறந்தால் உண்மையை மட்டும் பேசுவதில்லை
என்று அவனவன் கங்கணம் கட்டாத குறையாக ரீல்களையும்,கப்ஸாக்களையும்,பூசுற்றல்களையும்
அனுதினமும்,அனவரதமும் பேசிக்கொண்டு திறிகிறான்.
இப்படியாகப்பட்ட ஆசாமிகளில் சில கில்லாடிகளும்
உண்டு.தங்கள் பொய்களை ஒரு சமூக மாற்றத்தின் திறவுகோலாக பயன்படுத்தி தாங்கள் நம்பும் கொள்கைகளை அரியணை ஏற்றும் வாய்ப்பை
பெற்று அதன்மூலமாக தங்களின் அதிகாரத்தை பெருக்கி கொண்டு ,மாற்று கொள்கை கொண்டவர்களை
சமூக விரோதிகளாகவும்,வந்தேறிகளாகவும்,ஆதிக்க வெறியர்களாகவும் சித்தரித்து,முடிந்தால்
அவர்களை ஒழித்துக்கட்டி,சர்வ வல்லமை பெற்ற சூப்பர் தலைவர்களாக வலம்வரும் வாய்ப்பும்
சில கில்லாடிகள் பெற்றுவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட திறமை வாய்ந்த உலக மகா புளுகர்களில்
தலையாய இடத்தை பெற்றவர் ஜோசப் கோயபல்ஸ்.இன்றளவும் இவரை போன்ற திறமைவாய்ந்த பொய்யர்
யாரும் தோன்றிடவில்லை என்பதே அண்ணாரின் மேதமைக்கு சான்று பகரும்.
பால் ஜோசப் கோயபல்ஸ் 1897ஆம் ஆண்டு ஜெர்மனியில்
பிறந்தவர்.கத்தோலிக்க மதத்தவர்களுக்கே உரிய "யூத வெறுப்பு"கொண்ட சூழலில்
வளர்ந்தவர்.பிற்காலத்தில் நாஜி கட்சி ஆட்சியமைத்தபோது அதில் மனிதவள மேம்பாடு,மற்றும்
பிரசார அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் யூதர்களை தாக்குவதற்காகவே பல பொய்க்கதைகளை
உருவாக்கி மக்கள் மத்தியில் உலவ விட்டார்.அதில் முக்கியமானது "யூதர்கள் கிறிஸ்த்துவ
குழந்தைகளை கொன்று,வறுத்து சாப்பிடுகிறார்கள்.அவர்கள் நர மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள்"என்பதே.
கோயபல்ஸிடம் சில வித்தியாசமான திறமைகள்
இருந்தன.வரலாற்று ஆசிரியர்கள் அவருடைய கால்களை "கழுதையின் கால்கள்"என்று
கேலியாக குறிப்பிட்டாலும் அது அவருடைய வேடிக்கையான அடையாளமாகவே விளங்கியது.அவரை மேடையில்
பார்த்தாலே பெண்களும்,குழந்தைகளும் கேலியாக சிரித்தார்கள்.ஆனால்,அவர்களே கூட கோயபல்ஸின்
பேச்சுக்களை மெய்மறந்து கேட்டதாக தெரிகிறது.அந்த அளவு பேச்சு திறமையும்,எழுத்தாற்றலும்
வாய்க்கபெற்றவர் கோயபல்ஸ்.இரண்டாம் உலக போர் துவங்கிய காலத்தில் மூன்று வகையான பிரசார
உத்திகளை மேற்கொண்டார் கோயபல்ஸ்.முதலாவது முணுமுணுப்பு பிரச்சாரம்.அடுத்து ஆரூட பிரச்சாரம்.மூன்றாவது
சொன்னதையே பலமுறை திரும்ப சொல்லும் பிரச்சாரம்.இம்மூன்றையும் அவர் பயன்படுத்திய விதம்
இன்றைக்கும் பல அரசியல் கட்சிகளுக்கு பாடமாக வைக்கும் அளவுக்கு புகழ் பெற்றது.
முதலாவது முணுமுணுப்பு பிரச்சாரம்;
பொதுமக்கள் கூடும் இடங்களில் "தேர்ந்தெடுக்கப்பட்ட"சில
நபர்கள் ஒருவரை ஒருவர் அறியாதவர்போல் நின்றுகொண்டு பேசுவார்கள்.அதில் ஒருவர்
"என்ன இருந்தாலும் ஹிட்லர் மாதிரி ஒரு தலைவர் உண்டா..?எந்த கொம்பனும் அவருக்கு
ஈக்குவலா வரமாட்டான்"என்பார்.மற்றொரு நபரோ வேண்டுமென்றே அவர் கருத்தை மறுத்து
வாதிடுவார்.முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதால் மறுப்பவரின் வாதம் பலவீனமாகவே இருக்கும்.ஹிட்லரை
ஆதரித்து பேசுபவரின் வாதம் அழுத்தமாகவும்,கேட்பவரை ஏற்க்கும்படியும் இருக்கும்.இந்த
"நாடக"வாதத்தின் இறுதியில் ஹிட்லரை எதிர்த்து பேசிய நபர் தனது "தவறை"உணர்ந்து,திருந்தி
நாஜி ஆதரவாளர் ஆகிவிடுவார்.அவர்களின் வாதங்களை செவிமடுக்கும் மக்களுக்கும் ஹிட்லரே தங்களை யூதர்களிடமிருந்து மீட்க வந்த ரட்சகர் என்ற
சிந்தனை மேலோங்கும்.இதுவே முணுமுணுப்பு பிரசாரத்தின் வெற்றி!
அடுத்து ஆரூட பிரச்சாரம்;
கிட்டதட்ட ஜெர்மனியில் வாழ்ந்த அத்தனை
ஜோசியர்களுக்கும் பணம் கொடுத்து அவர்களை ஒரே மாதிரி ஆரூடம் சொல்ல வைப்பது."போரில்
ஜெர்மனி மிக பெரிய வெற்றி பெரும்.அமெரிக்காவும்,பிரிட்டனும் படுதோல்வியடைந்து ஜெர்மனியிடம்
சரணடையும்.கிரக நிலைகள் நமக்கு சாதகமாக உள்ளதால் யூதர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு
வெளியேறவேண்டிய நெருக்கடிக்கு ஆளாவார்கள்".இதுபோன்ற போலி ஆரூடங்களை அனைத்து ஜோசியர்களும்
மக்களிடம் சொல்லவைத்து அவர்களை நம்ப வைத்தார்கள்.
அடுத்து சொன்னதை திரும்ப சொல்லும் பிரச்சாரம்;
ஹிட்லரும்,பிற நாஜி தலைவர்களும் பேசிய
பேச்சுக்களை திரும்ப திரும்ப மக்களிடம் எடுத்து கூறுவது.வானொலி கண்டுபிடிக்க பட்டதால்
இந்த பிரச்சாரம் மக்களிடம் எளிதில் சென்றடைய முடிந்தது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப
சொல்ல ஆரம்பித்தால் அதை சொல்பவனே ஒரு கட்டத்தில் அதை உண்மை என நம்ப ஆரம்பித்து விடுவான்.இது
கோயபல்சின் ஆகபெரிய உத்தி!
அவருடைய சொந்த பத்திரிக்கையான "தி
அட்டாக்"-கில் பின்வருமாறு எழுதினார்.
"பாலஸ்தீனத்தை சேர்ந்த யூத இனத்தினர்
ஜெர்மனியை ஆக்கிரமித்து நமது வளங்களை சுரண்டி வருகிறார்கள்.நாமோ சூடு சொரணையில்லாமல்
யூதர்களிடம் கைகட்டி சேவகம் செய்து வருகிறோம்.முதல் உலக போரில் ஜெர்மனி தோல்வியடைய
யூதர்கள் செய்த சதிகளுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.அவற்றை நான் வெளியிட்டால் யூதன்
எவனும் தெருவில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.நமது நாஜி கட்சியையும்,அதன் ஒப்பற்ற தலைவர்
ஹிட்லரையும் "பயங்கரவாதிகள்"என யூத பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன.நாங்கள்
பயங்கரவாதிகள் அல்ல.நாங்கள் நோய் தீர்க்கும் மருத்துவர்கள்.யூத இனம் என்ற நச்சு கிருமியை
ஒழித்து இந்த உலகை காக்க வந்த சுகாதார வல்லுனர்கள்.எந்த விலை கொடுத்தாவது இதை நாங்கள்
சாதிப்போம்".
ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்
கோயபெல்சை ஜெர்மனியின் அதிபராக நியமித்தார்.ஆனால்,துரதிர்ஷ்டவசமாக (அல்லது அதிர்ஷ்டவசமாக)கோயபல்ஸ்
,ஹிட்லர் இறந்த அடுத்த நாளே குடும்பதுடன் தற்கொலை செய்துகொண்டார்.
ஜெர்மனியின் "ஒரு நாள் அதிபர்"ஜோசப்
கோயபல்ஸ் நம்மிடமிருந்து மறைந்தாலும் அவர் விட்டு சென்ற "புளுகுகள்,கப்சாக்கள்,அவதூறுகள்"-ஆகியவற்றின்
மொத்த அடையாளங்களுடன் வாழும் பல அண்ட புளுகர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்-பகுத்தறிவாளர்கள்
என்ற நாமத்தில்!!!
அருமை.
ReplyDeleteஇப்போதைய தமிழக அரசியலில் இவரை மிஞ்சும் திறமை ஒருவருக்கு உண்டெனில் அந்த நபர் யார்?
டியர் கிங் விஸ்வா !!!
Deleteஅகில இந்திய அளவில் கோயபல்ஸ் பாணியில் வெளுத்து கட்டுபவர்கள் இருவர்.ஒருவர் திக்விஜய் சிங்.மற்றொருவர் கபில் சிபல்.
தமிழக அரசியலிலா....? ஒருவரா......இருவரா....லிஸ்ட் போட்டு மாளாது.ஆளை விடுங்கள்.
விற்பனைக்கு ஒரு ஷெரிஃப் கதையில் நீங்கள் சொன்ன மூன்று யுத்திக்களையும் கையாண்டே கிட் ஆர்டினை ஜெயிக்க வைத்தது புனித சாத்தானுக்கு நினைவிருக்கிறதா?
ReplyDeleteஸாரி விஸ்வா சார்.நானும் அடியேனின் மூளையை ஒட்டடை அடித்து பார்த்துவிட்டேன்.நீங்கள் குறிப்பிட்ட "விற்பனைக்கு ஒரு ஷெரிப்" என்ற கதையை படித்த ஞாபகம் வரவில்லை.என்னுடைய கலெக்சனிலும் மேற்படி கதை இல்லை.
DeleteHere is a detailed post on this: http://akotheeka.blogspot.in/2009/05/blog-post_9331.html
Deleteநண்பரே ...ஒரு சிறு திருத்தம்.......
ReplyDeleteஅவர் பெயரின் சரியான உச்சரிப்பு '' கெப்பல்ஸ் '' என்பதாகும்......தீராவிட அரசியல்வியாதிகளின் புண்ணியத்தால் அது கோயபல்ஸ் ஆகிவிட்டது......
டியர் சிவ.சரவணகுமார்!!!
Deleteவெல்கம் பேக்!!!
உங்கள் திருத்தத்தில் ஒரு தவறு உள்ளது.கெப்பல்ஸ் என்பதே அவருடைய பெயரின் சரியான ஜெர்மானிய உச்சரிப்பு .ஆனால்,ஆங்கில உச்சரிப்பான கோயபல்ஸ் என்பதே பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது.பெரும்பாலான "ஹீப்ரு"பெயர்களும் ஆங்கில உச்சரிப்போடேயே வழக்கில் பேசப்படுகிறது. நாமும் அவற்றையே பயன்படுத்துகிறோம்.
உதாரணம்; யோசேப் (ஹீப்ரூ) ----ஆங்கில உச்சரிப்பில் ஜோசப்.
தாவீது (ஹீப்ரூ) ----ஆங்கில உச்சரிப்பில் டேவிட்.
மத்தேயு (ஹீப்ரூ) ----ஆங்கில உச்சரிப்பில் மேத்யூ.
// உதாரணம்; யோசேப் (ஹீப்ரூ) ----ஆங்கில உச்சரிப்பில் ஜோசப்.
ReplyDeleteதாவீது (ஹீப்ரூ) ----ஆங்கில உச்சரிப்பில் டேவிட்.
மத்தேயு (ஹீப்ரூ) ----ஆங்கில உச்சரிப்பில் மேத்யூ. //
உங்களுடைய பதிலை பார்த்தால் எனக்கு கோயபல்ஸ் தான் ஞாபகம் வருகிறது நண்பரே ஹி ஹி ஹி :))
.