Monday, 4 March 2013

வாழ வைக்கும் ஊழலுக்கு ஜே!!!


இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்கள் உலகம் முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
77வயதாகும் பெர்லுஸ்கோனி ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல.அந்நாட்டின் பெரும் தொழிலதிபரும்கூட.இத்தாலியின் 6-வது பெரும் பணக்காரர்.உலக பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 169-வது இடத்தை பிடித்துள்ளவர்.
மூன்று முறை அந்நாட்டின் பிரதமராக சுமார் 9ஆண்டுகள் பதவி வகித்துள்ளவர்.forza italia என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
சில்வியோ பெர்லுஸ்கோனி ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது.அவர்மீதும் ஏராளமான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இத்தாலிய நீதிமன்றம் ஒன்று ஒரு வழக்கில் இவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.இத்தாலிய சட்டப்படி வழக்குகள் மீதான தீர்ப்புகள் இரண்டு கட்ட மேல் முறையீடுகளில் உறுதி செய்யப்படவேண்டும்

                                                 
                                                     சில்வியோ பெர்லுஸ்கோனி 



                                         

அண்ணார் (..தாத்தார்?..)மீது ஏராளமான செக்ஸ் குற்றச்சாட்டுகளும் உண்டு.தன்னைவிட 50வயது குறைவான பிரான்சிஸ்கா பஸ்கல் என்ற முன்னாள் இத்தாலிய அழகியுடன் ஜாலியாக வலம்வரும் இந்த கலியுக தசரதர் சமீபத்தில் லண்டன் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி  ஒன்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. 
"லஞ்சம் என்பது ஒரு குற்றமே அல்ல.லஞ்சம் தருவதும் ,வாங்குவதும் தேவையான ஒன்றுதான் .லஞ்சம் தருவது இயல்பான ஒன்று என்பதால்தான் அது நடைமுறையில் இருக்கிறது.இன்றைய உலக வர்த்தகத்தில் லஞ்சம் தராமல் எந்த காரியமும் நடக்காது.எனவே லஞ்சத்தை குற்றமாக கருதக்கூடாது".
ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவரே லஞ்சத்தை பகிரங்கமாக ஆதரித்து பேசியிருப்பதை பார்க்கும்போது பேசாமல் அவரை நம்ம பாரத மணித்திரு நாட்டிற்கு அழைத்துவந்து உலகமகா ஊழல் கட்சியான காங்கிரஸுக்கு தலைவராக்கி அடுத்த தேர்தலில் பிரதமராக்கி,"ஊழலை ஒழிப்போம்" என பிதற்றி கொண்டிருக்கும் நரேந்திர மோடிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என அடியேனின் நண்பரான "கழக கண்மணி"ஒருவர் போதையில் தள்ளாடியபடி கூறினார்.
எவ்வளவோ செய்துவிட்டோம்.இதை செய்ய மாட்டோமா என்ன...?

                                               

18 comments:

  1. சாத்தான் சார்.....இவரோட இந்த '' அரிய '' கருத்த , இத்தாலிய சம்பந்தி இந்திரா காந்தி எழுபதுகள்லயே சொல்லிட்டாங்க............. இனம் இனத்தோட தான் சேரும்கறது எவ்வளவு பெரிய உண்மை பாருங்க.........உங்கள காங்கிரஸ்காரர்னு சொல்லி கேவலப்படுத்திய நண்பருக்கு நல்ல பதிலடி....[ பின்னே...'' வெள்ளையனே வெளியேறு '' போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை ஒரு வெள்ளைக்காரியின் தலைமையில் கொண்டாடும் மூளை கெட்ட ஆட்டு மந்தைகளோட நம்மை அடையாளப்படுத்துனா எப்படி? ]

    ReplyDelete
    Replies
    1. டியர் சிவ.சரவணகுமார் !!!
      இத்தாலியை சேர்ந்த ராபர்டோ ரோசெல்லினி என்ற சினிமா இயக்குனர் சோனாலி தாஸ் குப்தா என்ற வங்க பெண்மணியை மணந்தவர்.அந்நாட்டில் நடந்த உள்ளூர் தேர்தல் ஒன்றில் போட்டியிட சோனாலி முயன்றபோது அவர் இந்திய பெண்மணி (கருப்பர் )என்ற காரணத்தால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
      ஆனால்,நமது பாரத மணித்திரு நாட்டிலோ எந்த தகுதியும் இல்லாத ஒரு பெண்மணி ,வெள்ளையர் என்ற ஒரே காரணத்துக்காக நாட்டின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.ராஜீவ் காந்தி சோனியாவுக்கு பதிலாக ஒரு ஆப்பிரிக்க கறுப்பின பெண்மணியை மணந்திருந்தால் அப்பெண்மணிக்கு இந்த கௌரவம் கிட்டியிருக்குமா...?

      Delete
  2. அட அதற்குள்ளாக 7 பதிவா ? ராக்கெட் வேகம்தான் . அது சரி ஏன் வெளி நாட்டு பிரச்சனையை மட்டுமே எழுதுறீங்க .... உள் நாட்டு கலவரம்னா பிசாசுக்கு பயமா?

    ReplyDelete
    Replies
    1. டியர் ஸ்டாலின்ஜீ !!!

      உள்நாட்டு பிரச்னைகள் குறித்து எழுத அடியேனுக்கும் ஆசைதான்.அழகிரிகளையும்,அட்டாக் பாண்டிகளையும் நினைத்தால்தான் உதறலாக இருக்கிறது :-):-)

      Delete
  3. ஏதோ முடிவோடுதான் இருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.


    சும்மா தமாசு!

    ReplyDelete
  4. அப்புறம் டைம் தப்பா டிஸ்ப்ளே ஆகுது .அதை கவனிங்க .

    ReplyDelete
    Replies
    1. டியர் மீரான் !!!
      அடியேனுக்கு "டைம்"சரியில்லை என்பதை சிம்பாலிக்கா சொல்கிறீர்களா....?:-):-)

      Delete
    2. உங்க டைம் நல்லாத்தான் இருக்கு.அதுதான் குறிகிய காலத்துல இவ்வளவு பாப்புலர் ஆகிட்டீங்க !

      Delete
  5. சாத்தான்ஜி,

    77 ஆனாலும் 27 உடன குஜாலா இருக்கலாம்; கையிலே காசிருந்தால்! - இந்தக் கருத்தைத்தானே சொல்லவர்ரீங்க?!!

    புரிஞ்சுக்கிட்டேன்! :)

    ReplyDelete
    Replies
    1. டியர் விஜய்!!!
      அதிலொன்றும் தவறில்லையே.அந்நாளில் ஒரு "ஈரோட்டுக்காரர்"ஏற்கனவே இந்த "புரட்சி"யை செய்திருக்கிறாரே.....:-);)

      Delete
  6. // இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோன //

    நமது சாத்தானின் நல்லெண்ண தூதர் என்று கேள்வி உண்மையா நண்பரே ;-)
    .

    ReplyDelete
    Replies
    1. டியர் சிபி சிபி !!!
      சில்வியோ சாத்தானின் தூதரல்ல.பேசாமல் அவரை காங்கிரசின் "கொள்கை பரப்பு "செயலாளர் ஆக்கிவிடலாம் :-)

      Delete
  7. சிவ சரவணன் : % தங்களை காங்கிரெஸ் காரன் என்று கேவல படுத்திய நண்பருக்கு %காங்கிரெஸ் காரன் என்றால் கேவலம் என்று புரிந்து கொண்டீர்களே ..அது போதும் நண்பரே .அதுக்கு தான் அந்த கத்து கத்தினன் . நன்றி .%தக்க பதிலடி % அதை அப்டி சொல்ல படாது நைனா ! பதில் ன்னு சொல்லணும் . பதிலுக்கு பதில் போட்டினா நீங்களும் வாங்க .நான் ரெடி . அடிக்கு அடி நா நண்பர் சாத்தான் தான் ஜெயிப்பார் .இருவரும் நேருக்கு நேராய் பார்த்திருபதால் நான் இளகிய மனது காரன் மட்டுமல்ல ,இளகிய உடம்பு காரன் என்பது அவருக்கும் புரியும் ,எனக்கும் புரியும் .நண்பரே ..வரட்டா நண்பரே ..நன்றி ..வணககாஆம்..:)

    ReplyDelete
  8. அப்புறம் இந்த வாரம் ஆனத்.விகடன் னில்எங்கே அந்த 17500 பேர என்ற ஒரு பெண்ணின் கண்ணீர் பேட்டி படிதிர்களா நண்பரே,,பாவம்ல :( தமிழனை எவன் எது தாலும் அவன் காங்கிரெஸ் காரனா இருந்தாலும், கழக காரனா இருந்தாலும் ,கலக காரனா இருந்தாலும் (உண்மையான)தமிழன் (மட்டும்)எதுக்க தான் செய்வான் நண்பரே ..(பலருக்கு தமிழ் என்றாலும் பயம் ,தமிழன் என்றாலும் பயம் ,ஈழ தமிழன் என்றாலும் பயம் ,தமிழ்நாடு என்றாலும் பயம் ..ஐயோ ஐயோ ..)

    ReplyDelete
    Replies
    1. டியர் பரணீதரன் !!!
      நான் ஆனந்த விகடன்,குமுதம் படிப்பதை நிறுத்தி மாமாங்கமாகி விட்டது.காரணம்,சினிமா நடிகைகளின் தொப்புளை பார்த்து போரடித்து விட்டது:-)
      அது என்ன 17,500பேர் கணக்கு.சரி அதை விட்டுத்தள்ளுங்கள்.
      ஈழ தமிழனை பற்றி இந்திய தமிழன் தான் கவலை படுகிறான்.ஏன்,தற்கொலையே செய்து கொள்கிறான்.ஆனால் ,ஒரு விசயத்தை கவனித்தீர்களா ?ஈழ தமிழனின் அவலத்தை பற்றி ஸ்ரீலங்காவில் வசிக்கும் மலையக தமிழன் (HILL LAND TAMILS )மற்றும் கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் (COLOMBO CHETTY )போன்றவர்கள் யாரும் ஒரு சிறிதும் கவலை படுவதில்லை.தற்கொலை செய்து தங்களை மாய்த்து கொள்வதுமில்லை.அவ்வளவு ஏன் ..,தமிழ் ஈழம் என்று தனி நாடு கேட்டு தமிழ் நாட்டில் நீங்கள் போராட்டம் நடத்துகிறீர்களே ,அதற்கு அவர்கள் யாரேனும் ஆதரவு அளித்திருக்கிறார்களா ?சொல்லுங்கள் பார்க்கலாம்.தமிழ் நாட்டில் வசிக்கும் இளிச்சவாய தமிழன் ஈழத்துக்காக தற்கொலை செய்து கொள்வதை போல வெளிநாடுகளில் (குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில்)வசதியாக செட்டில் ஆகிவிட்ட ஈழ தமிழன் ஒருவனாவது தற்கொலை செய்து கொண்டானா ...?யோசியுங்கள்.

      Delete
    2. எது சொன்னாலும் அழகா பதில் வந்து விடுகிறதே ...)அதனால்தான் சாத்தானா..: )

      Delete
  9. நண்பர் பரணீதரன் அவர்களே......

    பதிலடி என்று நான் குறிப்பிட்டது கருத்து அளவில்தான்.......... நேரடி மோதலுக்காக அல்ல........ மற்றபடி நல்ல மனிதரான புனித சாத்தான் அவர்களை காங்கிரஸ்காரன் என்றதால் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.......

    காமராசரின் மரணத்துக்கு காரணமான இந்திராவின் காலில்,காமராசரிடம் இருந்த காங்கிரஸ்காரர்கள் விழுந்தார்களோ அன்றோடு தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்தது.....இப்ப்போது இருப்பதெல்லாம் வெறும் கொள்ளைக்கும்பல்.......

    ReplyDelete