Friday, 29 March 2013

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...!!!


திருநெல்வேலி என்றாலே அல்வா ஞாபகம் வருவதைப்போல,திருப்பதி என்றாலே லட்டு ஞாபகம் வருவதைப்போல,பழனி என்றாலே பஞ்சாமிர்தம் ஞாபகம் வருவதைப்போல ,விடுதலை புலிகள் என்றாலே "மனித வெடிகுண்டு தாக்குதல்"ஞாபகம் வருவதை தவிர்க்க முடியாது.அவர்களின் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்கள்,சிங்களர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்!!!
இப்போது விடுதலை புலிகளும் இல்லை.தற்கொலை படை தாக்குதலும் இல்லை.அதனால் என்ன....?அவர்களின் கடந்த கால தாக்குதல்களின் புகைப்படங்கள் இருக்கிறதே!இதுபோதாதா...?அந்த வீராதி வீரர்களின் மனித நேயத்திற்கு சான்றுகூற...!!!

























விடுதலை புலிகள் செய்த "வீர சாகசங்கள்"இன்னும் அநேகம் உண்டு.அவற்றின் புகைப்படங்களை வெளியிட்டால், அவ்வாறு  வெளியிடப்படும்  புகைப்படங்கள் இந்த உலகம் கொள்ளாது என நினைக்கிறேன்.ஆமென்!

26 comments:

  1. நண்பரே.......

    ஒத்திசைவு .திரு. ராமசாமி அவர்களின் இந்த கட்டுரையை படித்தீர்களா?

    http://othisaivu.wordpress.com/2013/03/25/post-183/

    பிரபாகரன் என்னும் ரத்தவெறி பிடித்த முட்டாளின் படத்தை கையில் ஏந்திக்கொண்டு போராடும் மக்குகள் இந்த கட்டுரைக்கு என்ன பதில் சொல்வார்கள்?

    ReplyDelete
    Replies
    1. டியர் சிவ.சரவணகுமார்!!!

      நன்றி நண்பரே!பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த பிரபாகரனுக்கு நம்மூர் மாணவ புரட்சி(!) யாளர்களின் திடீர் ஆதரவு முதலில் அடியேனுக்கு வியப்பை அளித்தது.திரு.ராமசாமியின் இந்த பதிவை படித்ததில் தற்கால மாணவர்களின் அரசியலறிவு(?) எப்படிப்பட்டது என புரிகிறது.இவர்களின் வெட்டி போராட்டத்தால் ஈழ மக்களின் நிலை அங்கே படுஅபாயமாகி வருவது வேதனைக்குரியது.கொலைவெறியர்களை ஆதர்சமாக கொண்ட ஒரு மோசமான எதிர்கால சந்ததி உருவாகிவருவது அதனினும் வேதனைக்குரியது.

      Delete
  2. பிரபாகரின் பல செயல்கள் அப்பாவிகளை அனாதைகளாக்கியது உண்மை.இதெல்லாம் ஓவர் கொடூரம்
    நல்ல பிசாசே: ராஜபக்சே போர்குற்றவாளி என நினைக்கிறீர்களா இல்லையா? அவர் செய்தது கொடுமையா இல்லையா? இப்பொழுது அம்மாவும் , தாதாவும் விழுந்து விழுந்து பிரச்சனையை கவனிப்பது ஏன்? ஈழத்தமிழ் பிரச்சனைக்கு நீங்கள் கூறும் தீர்வுதான் என்ன? இதற்கெல்லாம் பதில் கூறாவிட்டால் உங்களுக்கு தலையில் இரண்டு கொம்பு முளைக்க கடவாது

    ReplyDelete
  3. நண்பரே தொடருபவர்கள் பட்டையை இணைக்கவும்

    ReplyDelete
  4. http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-snc6/165429_549234888440498_1113083951_n.jpg

    ReplyDelete
    Replies
    1. டியர் ஸ்டாலின்!!!
      நீங்கள் அனுப்பிய புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தேன்.ஆத்திரத்தில் என் உடல் நடுங்கியது.அந்த குழந்தையை அனாதையாக்கிய கொடிய போர் வெறியர்களாகிய விடுதலை புலிகள் சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.இப்படி எத்தனை குழந்தைகளை அந்த பாதகர்கள் அனாதரவாக்கினார்களோ.....?என்றெண்ணி மனம் வேதனையில் வெம்புகிறது.

      Delete
  5. அடக்கு முறைக்கு எதிராக என்னதான் செய்ய வேண்டும் ? அடங்கி போவது ஒன்றே விதிக்கப்பட்ட விதியா ?

    ReplyDelete
    Replies
    1. டியர் மீரான்!!!

      விடுதலை புலிகள் அடக்குமுறைக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் அல்ல.பிரபாகரன் என்ற தனிநபரின் ஆதிக்க வெறிக்கு தமிழரை பலிகடா ஆக்கிய ஒரு பாசிஸ கும்பல்.இந்த கும்பல் இருபதாண்டுகளுக்கு முன்பு சிங்கள ராணுவத்தோடு கூட்டு சேர்ந்து ,இந்திய ராணுவத்தை (IPKF)தாக்கியவர்கள்.நாங்களும்,சிங்களர்களும் சகோதரர்கள் என்று அப்போது பிரபாகரன் பேட்டியளித்தார்.இலங்கையின் அப்போதைய பிரதமரான ரணசிங்கே பிரேமதாசாவிடம் பணம் வாங்கிகொண்டு ,அவரது அரசியல் எதிரிகளான லலித் அதுலத்முதலி மற்றும் காமினி திஸ்ஸநாயகா ஆகியோரை கொன்றவர்கள்தான் இந்த சூரப்புலிகள்.நீங்களே சொல்லுங்கள்.அட்டாக் பாண்டிக்கும்,பிரபாகரனுக்கும் என்ன வித்தியாசம்....?

      Delete
    2. ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்க்கும் தைரியம் பிரபாகரன் என்ற தனி மனிதனின் ஆதிக்க வெறியினால் மட்டுமே தூண்டப்பட்ட செயளா? அவ்வாறெனில் அவருக்கு மற்றவர்களின் ஆதரவு எவ்வாறு கிடைத்தது ? ஒரு படையை உருவாக்கும் திறன் வாய்த்தது எப்படி?

      Delete
    3. டியர் மீரான்!!!
      ///ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்க்கும் தைரியம் பிரபாகரன் என்ற தனி மனிதனின் ஆதிக்க வெறியினால் மட்டுமே தூண்டப்பட்ட செயளா?
      இலங்கை ராணுவம் என்பது நம்மூர் போலீஸ் மாதிரி .அதை ஏதோ பிரம்மாண்டமான ஒரு படையாக கருதிவிடாதீர்கள் .பிரபாகரன் என்றைக்கும் இலங்கை ராணுவத்தோடு நேரடியாக மோதியதில்லை.கோழைத்தனமாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி,ராணுவத்தை அச்சுறுத்தி வந்தார் என்பதே நிஜம்.


      /// அவ்வாறெனில் அவருக்கு மற்றவர்களின் ஆதரவு எவ்வாறு கிடைத்தது ?
      துப்பாக்கி முனையில் மக்களை அச்சுறுத்தி பெறப்படும் ஆதரவு எல்லா பயங்கரவாத இயக்கங்களுக்கும் எப்போதும் கிடைத்து வருகிறது.விடுதலை புலிகளை ஏற்காதவர்களுக்கு ஏற்பட்ட கோர முடிவுகளை பார்த்து, அவர்களை எதிர்க்க ஈழமக்கள் தயங்கியதில் வியப்பேதும் இல்லை.

      /// ஒரு படையை உருவாக்கும் திறன் வாய்த்தது எப்படி?

      அப்பாவி தமிழனின் முதுகிற்கு பின்னால் ஒளிந்துகொண்டு தாக்குதல் நடத்திய வீராதிவீரர்கள் விடுதலை புலிகள்.இவர்கள் துப்பாக்கி சுட கற்றுகொண்டதே இந்திய ராணுவத்திடம் தான்.
      அபின்,ஹெராயின் போன்ற போதை பொருட்களை கடத்தி அதன் வருவாயில் உருவாக்கப்பட்டதே பிரபாகரனின் படை.

      Delete

  6. நண்பர் மீரான் அவர்களே......

    புலிகள் எப்படி ஆள்பிடித்தார்கள் என்பது பற்றி இலங்கைத்தமிழரான ''சிறீலங்கா ஹிந்து '' என்பவரின் வாக்குமூலம் இதோ........

    .புலிகள் கூட்டம் நடத்தினால் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும். புலிகளின் கூட்டத்தில் பங்கெடுகாவிட்டால் முதல் கட்ட தண்டணையாக கருக்கு மட்டையால் அடி கிடைக்கும். கப்பம் வாங்கும் போதும் கேட்பார்கள் நீங்கள் தமிழர்கள் இல்லையா? பிபாகரனை தலைவராக ஏற்று, புலிக்காகவே உழைத்து, பிள்ளைகள் பெற்று ,வாழ்ந்து மடிபவன் தமிழன். அப்படி இல்லாதவர்கள் தமிழின துரோகிகள். வாழும் உரிமை மறுக்கபடும்.
    இழுத்து வரவேண்டும் என்பதை புலிகள் துப்பாக்கி வைத்திருந்தபடியால் வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள். பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை துப்பாக்கி காட்டி பெற்றோரை மிரட்டி இழுத்து வந்து யுத்த முனைகளுக்கும் ,தற்கொலை தாக்குதல்களுக்கும் அனுப்பி சாகடித்தார்கள். இலங்கை தமிழர்களின் கடின உழைப்பு புலிகளினால் கப்பமாக அறவிடபட்டு நாசமாகியது. அவர்கள் பெற்ற பிள்ளைகள் புலிகளின் வெற்றிக்காக சாகடிக்கபட்டார்கள் .இறந்த பிள்ளைகளின் படங்களை தங்கள் பிரசாரங்களுக்கு சிறப்பாக பயன்படுத்தி கொண்டனர்.புலிகள் இப்போ இல்லை என்று பிரிவினைவாதிகளால் கூறப்படுகிறது .இலங்கையில் புலிகள் வெற்றிகரமாக ஒடுக்கபட்டனர் என்பது உண்மை. கைது செய்யபட்டு விடுதலையான புலிகள் நல்லவர்களாக மாறிவிட்டனர். வெளிநாடுகளில் Mafia வாக செயல்பட்ட புலிகள் வேறு வழியின்றி ஜனநாயக பசுக்களாக பசுவின் தோலை போர்த்து கொண்டு டொலர் மூட்டைகளுடன் தற்போது திரிகிறார்கள். இல்லாத புலிகளின் தடையை நீக்க வேண்டும் என்றா வை கோபாலசாமி போராடி வருகிறார்?
    பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதிற்கு ஹிந்துஸ்தானின் தமிழ் பிரதேசங்களில் ஒரு போராட்டம் நடைபெறுகிறது .புலிகளினால் தங்கள் பிள்ளைகளை பறி கொடுத்த பெற்றோர்கள் அன்று கதறி அழுது சபித்தார்கள். இந்த பாவம் உங்க சும்மாவிடாது அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

    ReplyDelete
  7. saint satan: நான் அனுப்பிய புகைப்படம் ராஜபக்சேவால் நிகழ்ந்த தக்குதல் படம். அந்த பழியையும் பிரபாகரன் மீது சுமத்தும் கலை உங்களைப்போல் உள்ளவர்களுக்கு மட்டுமே முடியும். நீங்கள் நடுநிலையாக நான் ஏற்கனவே கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காதபோதே நீங்கள் ராஜபக்சேவின் நண்பர் என்பதனை நிரூபித்துவிட்டீர்கள்:( நான் இருதரப்பு பார்வையிலும் பார்க்கவே விரும்புகிறேன்
    நண்பரே தலைவலியும் காய்ச்சலும் நனக்கு வந்தால் மட்டுமே தெரியும். எங்கோ ஒரு இடத்தில் நிம்மதியாக இருந்துகொண்டு ஒருதலப்பச்சமாகவே பதிவிடுவதைவிட உங்களின் நகைச்சுவை உணர்வுடன் கூடிய நூல்கள் குறித்த பதிவுகளை மட்டுமே நீங்கள் எழுதுவது நல்லது

    ReplyDelete
    Replies
    1. டியர் ஸ்டாலின்!!!
      ராஜபக்சே என்பவர் ஒரு பயங்கரவாத குழுவின் தலைவர் அல்ல.அவர் ஜனநாயக நாடான ஸ்ரீலங்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி.அவர் போர் தொடுத்தது அண்டை நாட்டை அல்ல.தனது நாட்டின் ஒரு பகுதியில் பிரிவினையை தூண்டி,மக்களை பிளவுபடுத்தி ,பெரும் அழிவை ஏற்படுத்திய பயங்கரவாத இயக்கத்தின் மீதுதான் போர் தொடுத்தார். விடுதலை புலிகள் ராணுவத்தோடு நேரடியாக மோதாமல் அப்பாவி மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாலே பல ஆயிரக்கணக்கான மக்கள் போரில் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ளாமல் ,இங்கே (தமிழ்நாட்டில்)நடக்கும் "ராஜபக்சே எதிர்ப்பு"பிரச்சாரத்தில் நீங்களும் பலியாகிவிட்டீர்கள் போல் இருக்கிறது :-)

      Delete
  8. அன்பு நண்பர் புனித சாத்தான் !

    சிங்கள பேரினவாதிகளால் தமிழர்கள் அடக்கு முறைக்கு ஆளாகவில்லையா? அவர்களின் உரிமைகள் மறுக்க படவில்லையா ? அவற்றிற்கான தீர்வுதான் என்ன ?
    விடுதலை புலிகளின் செயல்களில் மட்டும்தான் தவறு உள்ளதா ? இலங்கை அரசு நேர்மையாகவே நடந்து கொண்டதா ? புலிகளின் செயலால் மட்டுமே தமிழர்கள் பிரச்சனைக்கு உள்ளானதாக குறிப்பிடுவது நியாயமானது தானா ?

    ReplyDelete
    Replies
    1. டியர் மீரான்!!!
      இலங்கையின் தவறு எதுவாயினும் அதை அம்பலப்படுத்தும் அருகதையை விடுதலை புலிகள் தங்கள் பயங்கரவாத செயல்களால் இழந்துவிட்டார்கள் என்பதே அடியேனின் கருத்து.தமிழர்கள் பிரிவினை கோரிக்கையை முன்வைத்ததே தவறான நிலைப்பாடுதான்.அதற்க்கு பதிலாக இந்தியாவில் உள்ளதுபோல் ஒரு சமஷ்டி மாநில சுயாட்சி கோரியிருந்தால் அது நிச்சயமாக நிறைவேறியிருக்கும்.அதற்க்கான அத்தனை வாய்ப்புகளும் ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன.பெரும்பாலான ஈழ தமிழர்கள் அதை நிராகரித்ததால்,இந்தியாவின் ஆதரவை இழந்து ,சர்வதேச அளவில் தனிமைப்பட்டு போனார்கள்.

      Delete
  9. //"ராஜபக்சே எதிர்ப்பு"பிரச்சாரத்தில் நீங்களும் பலியாகிவிட்டீர்கள் போல் இருக்கிறது :-)//
    எனது முந்தய பின்னூட்டத்திலேயே பிரபாகரன் செய்ததும் தவறுதான் என்று குறிப்பிட்டதை நீங்கள் படிக்கவில்லையா?
    சாலைக்ளுக்கு அருகில் உள்ள வீடுகள் நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படுவதும் அதனை எதிர்த்து அங்கு குடியுருப்பவர்கள் தனது வீட்டிற்காக போராடுவதும் நாம் பார்க்கின்றோம். வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்யத்தானே இவ்வாறெல்லாம் செய்கின்றன அதற்கு இடத்தை கொடுத்தால் என்ன என்றுதான் நினப்போம். ஆனால் நிலத்தை இழந்தவன் இடத்தில் இருந்து இதனை நாம் ஒருபோதும் பார்ப்பதில்லை. அதே போலத்தான் உங்கள் நிலையும் . பிடித்த முயலுக்கு 3கால் என்பதனை விட்டு விட்டு ராஜபக்சேவின் நண்பராக இல்லாமல் நடு நிலையாக ராஜபக்சே அழிவுக்கு வகுத்த பாதைகளையும் படம்போட்டு காண்பிக்கவும். அதைவிடுத்து ராஜபக்சே தவிர மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்பது மிகவும் அநியாயம். ஒரு கம்யூனிசகொள்கைவாதி இப்படி ஒருதலைப்பச்சமாக இருப்பது மிகவும் வியப்பளிக்கிறது.
    ஒரே வார்த்தையில் இதற்கு பதிலலிக்கவும் ( விளக்கம் வேண்டாம்) - ராஜபக்சே செய்தது தவறா? இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. டியர் ஸ்டாலின்!!!
      தங்கள் உடமையை காத்துகொள்வதற்காகவே போராடினாலும் அதிலும் ஒரு நியாயம் வேண்டும்.மத்தியஸ்தம் பேச வந்தவரை "கொன்று",அவரின் மத்தியஸ்தத்தை ஆதரித்தவர்களையும் "கொன்று குவித்து"தங்கள் உடமைகளை காக்க போராடியவர்கள் உலகிலேயே இவர்களாகத்தான் இருப்பார்கள்.
      ராஜபக்சே என்ன,கௌதம புத்தரே இலங்கையின் ஜனாதிபதியானாலும் ,அவரை "சிங்கள பேரினவாதி"என்றுதான் இங்குள்ள புலி ஆதரவாளர்கள் வசைபாடுவார்கள்.ராஜபக்சே செய்தது முற்றிலும் சரியே என்பது வருங்காலத்தில் நிரூபணமாகும்.
      தீவிர வலதுசாரியான அடியேனை "கம்யூனிச கொள்கைவாதி"என்ற உங்கள் கிண்டலை வெகுவாக ரசித்தேன்.ஹிஹி!!!

      Delete
  10. //விடுதலை புலிகள் ராணுவத்தோடு நேரடியாக மோதாமல் அப்பாவி மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாலே பல ஆயிரக்கணக்கான மக்கள் போரில் கொல்லப்பட்டார்கள் //
    அடடா அப்படியானல் உங்கள் நண்பர் ராஜபக்சே யாரையும் கொல்லவில்லையா? தமிழர்கள் தான் தவறாக புரிந்து கொண்டார்கள் போலும்! என்ன கொடுமையப்பா...இது

    ReplyDelete
    Replies
    1. டியர் ஸ்டாலின்!!!
      ராஜபக்சேயின் நெருங்கிய உறவினர்களில் பலர் தமிழர்கள்.இன்னும் சொல்கிறேனே.இலங்கையின் வடக்கு பகுதிகளில் வசிக்கும் உயர்ஜாதி மக்களான பிள்ளைமார் (வேளாளர்)இனத்தவரும்,உயர்ஜாதி சிங்களர்களான "கோயிகாமா"இனத்தவரும் (இலங்கையின் மிகபெரிய ஆதிக்க இனம்)அடிப்படையில் ஒருவரே.கோயிகாமாக்கள் தங்களை "முதலியார்"என்றே பெருமையாக அழைத்து கொள்கிறார்கள்.ஷத்ரிய,பிராமண சிங்களர்களின் ஆதிக்கத்தை ஒழித்து 19-ஆம் நூற்றாண்டில் பேரெழுச்சி பெற்று இன்று இலங்கையின் அத்தனை துறைகளிலும் ஆதிக்கம் பெற்றுள்ள இவர்கள் தமிழர்களாக இருந்து சிங்களர்களாக மாறிய "வேளாள முதலியார்கள்"!!!

      Delete
    2. மேலே உள்ள அடியேனின் பதிலில் ஒரு சின்ன எழுத்து பிழை.கோயிகாமா என்பது தவறு.சரியான பெயர் கோவிகாமா (GOVIGAMA).
      வி என்பதை யி ஆக்கிவிட்டேன்.ஸாரி .ஹிஹி !!!

      Delete
  11. இலங்கையில் அனாதையாக விடப்பட்டுள்ள தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் தானே அவர்களுக்கான நியாயத்தை வேண்டி போராடுகின்றனர் .இல்லாத புலிகளின் பழைய செயல்களை ஒப்பிட்டு இன்றைய போராட்டதை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம் ? நடந்து முடிந்த போரில் ராஜபக்சேயின் அரசு எந்த போர் குற்றங்களும் புரியவில்லையா ? அவற்றை வெளி உலகப்பார்வைக்கு கொண்டுவருவது போராட்டங்கள் இன்றி சாத்தியமாகுமா?
    அழிந்து போன புலிகளின் செயலை அங்கு வாழும் தமிழர்கள் மேல் சுமத்த பார்ப்பது சரியானதா?

    ReplyDelete
    Replies
    1. //இல்லாத புலிகளின் பழைய செயல்களை ஒப்பிட்டு இன்றைய போராட்டதை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம் ?//
      //ராஜபக்சேயின் அரசு எந்த போர் குற்றங்களும் புரியவில்லையா ?//
      புனித சாத்தனின் பார்வையில் ராஜபக்சே மிகச்சிறந்த தவறே செய்யாத மனிதர் . முடிந்தால் இந்தியாவின் உயரிய விருதுகளை அவருக்கு வழங்களாம் என நினைப்பவர். அவரிடம்...........?

      Delete
  12. நண்பர் ஸ்டாலின் அவர்களே......

    உங்கள் விவாதத்தில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்....... இதே தளத்தில் சென்ற மாதம் நான் பதிவு செய்த கருத்தை படித்தீர்களா?

    '' பி.எல். ஒ எனப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்........அது ஒரு தனி இயக்கம் அல்ல...... 17 தனித்தனி இயக்கங்களின் தொகுப்பு......... பாலஸ்தீனம் என்னும் ஒரே லட்சியத்துக்காகபோராடும் வெவ்வேரு இயக்கங்களின் கூட்டமைப்பு......இவர்களோடு சேராத , மிகத்தீவிரமான '' ஹமாஸ் '' என்னும் அமைப்பும் அங்குண்டு..... இவர்கள் அனைவரும் இஸ்ரேலோடு மட்டும்தான் போரிடுவார்களே தவிர , ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதில்லை.......உங்கள் வ‌ழிமுறை உங்களுக்கு .....எங்கள் வழிமுறை எங்களுக்கு....மற்றபடி , நமது பொது எதிரி இஸ்ரேல்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்........ ஆனால் பிரபாகரன் செய்தது என்ன? சகோதர இயக்கங்களை முற்றாக ஒழித்தார்.......தன்னைதவிர வேறு தலைவர்களே ஈழத்தில் இருக்கக்கூடாது என்று நினைத்தார்......காசி , அமிர்தலிங்கம் ,போன்ற மிதவாத தலைவர்களையும் , யோகேசுவரன் ,சிறீசபாரத்தினம் . பத்மனாபா போன்ற சக போராளித்தலைவர்களையும் ஈவு ,இரக்கமின்றி படுகொலை செய்தார்......கடைசியில் இவரும் கொடூரமாகக்கொல்லப்பட்டார்.....வினை விதைத்தவன் வினையறுப்பான்........

    அன்று முதல் இன்று வரை ஈழத்தமிழர் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரே உருப்படியான முயற்சி ...ராஜீவ் - ஜெயவர்தனே இடையிலான இந்திய -இலங்கை ஒப்பந்தம்......அந்த நல்ல முயற்சியை தனது சுய நலத்துக்காக கெடுத்து நாசம் செய்தவர் பிரபாகரன்.......தனது தலைமையிலான சர்வாதிகார நாடாக ஈழத்தை மாற்ற நினைத்தார்.......அதற்கு உதவி செய்வதுதான் இந்தியாவின் வேலையா? மறுத்த இந்திய அமைதிப்படையை தாகினார்...இந்திய வீரர்கள் தமிழ்ப்பெண்களை கற்பழிக்கிறார்கள் என்று அவதூறு பரப்பினார்.......பிரேமதாசாவின் தோள் மீது கை போட்டுக்கொண்டு நாங்கள் சகோதரர்கள் , எங்கள் பிரச்சினையை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்வோம், இந்திய நாய்கள் வெளியேற வேண்டும் என்று கொக்கரித்தார்....... பிறகு பிரேமதசாவையும் தீர்த்துக்கட்டினார்........ நல்லது செய்ய நினைத்த ராஜீவை இந்திய மண்ணிலேயே கொடூரமாக கொலை செய்தார்.......

    ஒரு குலத்தை அழிக்க ஒருவன் போதும்...காஷ்மீர பண்டிதர் குலத்தில் நேரு பிறந்ததால் அந்த இனமே அழிந்தது.....பிரபாகரன் பிறந்தததால் ஈழத்தமிழர்கள் இன்று சொல்லொனாத துயருக்கு ஆளாகிறார்கள் .....''

    இறுதிப்போரின் போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை ராணுவம் எவ்வளவு காரணமோ , அதே அளவு புலிகளும் காரணம்…..பொதுமக்களை கேடயமாக பயன்படுத்திய ”மாவீரர்கள்” தான் அத்தனை உயிரிழப்புக்கும் காரணம்…..முல்லைத்தீவை ராணுவம் கைப்பற்றியபோது அங்கு பொதுமக்களே இல்லை……..அனைவரையும் ஆடுமாடுகள் போல் புலிகள் ஓட்டிச்சென்றுவிட்டனர்…….போருக்குப்பிந்தைய ஐ . நா சபையின் அறிக்கை இதை தெளிவாக குறிப்பிடுகிறது…..

    கடைசியாக, துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்கள் தொடர்ந்து முன்வைக்கும் முடிவை நான் ஆதரிக்கிறேன்.

    “ஒன்றுபட்ட இலங்கைக்குள் (ஒரு சமஷ்டி அமைப்பின் கீழ்), மாநில
    அதிகாரங்களுடன், 13ம் அரசியல் சட்ட ஷரத்துகளின் படி இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற்று இலங்கை என்ற ஒற்றை நாட்டிற்கு கீழே வாழ்வது தான் தொலைநோக்கு பார்வையில் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்.”

    இது நடக்க சில வருடங்கள் என்ன, சில தசாப்தங்கள் கூட ஆகலாம். ஆனால் நீடித்திருக்கும் சமாதானத்திற்கு இதுவே வழி.

    விடுதலைப்புலிகள் கொடூரமானவர்கள். அவர்களை தலையெடுக்க இலங்கையும் விடாது. இந்தியாவும் விடக்கூடாது. அந்த நீசக்கூட்டத்தின் அல்லக்கைகள் உலகெங்கும் பரவியுள்ளனர். கணிசமாக தமிழகத்தில் உள்ளனர். இந்திய மத்திய அரசு விழிப்புடன் இப்போது போலவே நடந்தால் போதும்.

    ReplyDelete
  13. நண்பர் மீரான் அவர்களே......

    பி .எஸ் . நரேந்திரன் என்பவர் , எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைதள‌த்தில் தெரிவித்த தீர்வு இதோ.......

    '' இனப்பிரச்சினைக்கான தீர்வு அங்கு வாழும் அனைத்து தமிழர்களின் கையிலேயே இருக்கிறது. தங்களின் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்று கூடிப் போராடுவதுதான் சரியான வழியாக இருக்க முடியும். துரதிருஷ்டவசமாக தமிழர்களிடயே அவர்களை ஒன்றிணைக்கும், தூரப்பார்வையுள்ள தலைவர்கள் இல்லை. இருந்தவர்களையும் கொன்று குவித்துவிட்டார்கள்.
    இன்னொன்று, இலங்கை வாழ் தமிழர்கள் இந்தியாவின் உதவியை, மத்தியஸ்தத்தை எதிர்பார்ப்தை நிறுத்திக் கொள்ளவேண்டும். தொலைநோக்குள்ள தலைவர்கள் இந்தியாவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ இன்று இல்லவே இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா வகையறாக்களால் உங்களுக்கு உபயோகம் எதுவும் இருக்கப்போவதில்லை. மாறாக அவர்களால் உங்களுக்குத் தொல்லைகள்தான் வர வாய்ப்பு இருக்கிறது.
    இனப்பிரச்சினை உங்களுடையது. நீங்கள்தான் அதனின் அத்தனை பரிணாமங்களையும் அறிந்தவர்கள். எனவே, நீங்கள்தான் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
    அதே சமயம் உணர்வுபூர்வமாக அணுகப்படும் எந்தப் பிரச்சினையும் எளிதில் தீர்வதில்லை என்பதனை நீங்கள் உணரவேண்டும்.
    வை. கோபாலசாமி, திருமாவளவன், சீமான் போன்றவர்களுக்கு நீங்கள் அளிக்கும் பணம் விழலுக்கிறைக்கிற நீர்தானே தவிர அவர்களால் உங்களுக்கு எந்தவிதமான பயனும் இருக்கப் போவதில்லை. வரலாற்றில் கோமாளிகளுக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம்தான் அவர்களுக்கும். Just don’t take them seriously.
    என்றாவது ஒருநாள் இனப்பிரச்சினை தீர்ந்து இலங்கைத் தமிழர்கள் அனைவரும் சமாதானத்துடன் வாழவேண்டும். வாழ்வார்கள் என்பதே எனது நம்பிக்கை.''

    நரேந்திரன்

    ReplyDelete
  14. சான்றோன் சிவா:
    நண்பரே நான் ஒருபோதும் பிரபாகரன் மிக நல்லவர் என்று சொல்லவில்லை. ஆனால் அவர் செய்த தவறை ராஜபக்சேவும் செய்தால் ஏற்புடையதா? இருவரும் செய்யும் கொடுமைகளுக்கு ஒருவரை தாக்குவதும் மற்றவரை பாராட்டுதலும் எந்த விதத்தில் நியாயம். பலிகடாவாவது அப்பாவிகள் மட்டுமே

    ReplyDelete
  15. දාන ලබ්බක් සිංහලෙන් හරි ඉංග්‍රීසියෙන් හරිත් දාපියවුකෝ....

    ReplyDelete